திருப்புகழ் 391 கெஜ நடை மடவார் (திருவருணை)

Thiruppugal 391 Gejanadaimadavar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா – தனதான

கெஜநடை மடவார் வசமதி லுருகா
கிலெசம துறுபாழ் – வினையாலே

கெதிபெற நினையா துதிதனை யறியா
கெடுசுக மதிலாழ் – மதியாலே

தசையது மருவீ வசையுட லுடனே
தரணியில் மிகவே – யுலைவேனோ

சததள மலர்வார் புணைநின கழலார்
தருநிழல் புகவே – தருவாயே

திசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்
திருநெடு கருமால் – மருகோனே

திரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்
திரிபுரை யருள்சீர் – முருகோனே

நிசிசர ருறைமா கிரியிரு பிளவா
நிறையயில் முடுகா – விடுவோனே

நிலமிசை புகழார் தலமெனு மருணா
நெடுமதில் வடசார் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனனா தனதன தனனா
தனதன தனனா – தனதான

கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா
கிலெசம் அது உறு பாழ் – வினையாலே

கெதி பெற நினையா துதி தனை அறியா
கெடு சுகம் அதில் ஆழ் – மதியாலே

தசை அது மருவீ வசை உடல் உடனே
தரணியில் மிகவே – உலைவேனோ

சத தள மலர் வார் புணை நின கழலார்
தரு நிழல் புகவே – தருவாயே

திசை முகவனை நீள் சிறை உற விடுவாய்
திரு நெடு கரு மால் – மருகோனே

திரி புர தகனார் இடம் அதில் மகிழ்வார்
திரி புரை அருள் சீர் – முருகோனே

நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா
நிறை அயில் முடுகா – விடுவோனே

நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா
நெடு மதில் வட சார் – பெருமாளே.

English

kejanadai madavAr vasamathi lurukA
kilesama thuRupAzh – vinaiyAlE

kethipeRa ninaiyA thuthithanai yaRiyA
kedusuka mathilAzh – mathiyAlE

thasaiyathu maruvee vasaiyuda ludanE
tharaNiyil mikavE – yulaivEnO

sathathaLa malarvAr puNainina kazhalAr
tharunizhal pukavE – tharuvAyE

thisaimuka vanaineeL siRaiyuRa viduvAy
thirunedu karumAl – marukOnE

thiripura thakanA ridamathil makizhvAr
thiripurai yaruLseer – murukOnE

nisisara ruRaimA kiriyiru piLavA
niRaiyayil mudukA – viduvOnE

nilamisai pukazhAr thalamenu maruNA
nedumathil vadasAr – perumALE.

English Easy Version

keja nadai madavAr vasam athil urukA
kilesam athu uRu pAzh – vinaiyAlE

kethi peRa ninaiyA thuthi thanai aRiyA
kedu sukam athil Azh – mathiyAlE

thasai athu maruvee vasai udal udanE
tharaNiyil mikavE – ulaivEnO

satha thaLa malar vAr puNai nina kazhalAr
tharu nizhal pukavE – tharuvAyE

thisai mukavanai neeL siRai uRa viduvAy
thiru nedu karu mAl – marukOnE

thiri pura thakanAr idam athil makizhvAr
thiri purai aruL seer – murukOnE

nisisarar uRai mA kiri iru piLavA
niRai ayil mudukA – viduvOnE

nilam misai pukazh Ar thalam enum aruNA
nedu mathil vada sAr – perumALE.