திருப்புகழ் 392 அருக்கார் நலத்தை (திருவருணை)

Thiruppugal 392 Arukkarnalaththai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
தனத்தா தனத்தத் – தனதான

அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித் – தளராதே

அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட் – டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற் – பிறவாதே

கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப் – புகல்வாயே

ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத் – துறைவோனே

உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக் – குமரேசா

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப் – பொரும்வேலா

திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
றிருக்கோ புரத்திற் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்
தனத்தா தனத்தத் – தனதான

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு
அடுத்த ஆசை பற்றித் – தளராதே

அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு
அறப் பேதகப் பட்டு – அழியாதே

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து
கலிச் சாகரத்தில் – பிறவாதே

கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து
கலைப் போதகத்தைப் – புகல்வாயே

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள் சித்தத்து – உறைவோனே

உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு
ஒளித்து ஓடும் வெற்றிக் – குமரேசா

செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு
அச் செருச் சூர் மரிக்கப் – பொரும் வேலா

திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில்
திருக் கோபுரத்தில் – பெருமாளே.

English

arukkAr nalaththaith thirippAr manaththuk
kaduththAsai patRith – thaLarAthE

adaRkA lanukkuk kadaikkAl mithiththit
taRappE thakappat – tazhiyAthE

karukkArar natpaip perukkA sariththuk
kaliccA karaththiR – piRavAthE

karuththA lenakkuth thiruththA LaLiththuk
kalaippO thakaththaip – pukalvAyE

orukkAl ninaiththit tirukkAl mikuththit
turaippArkaL siththath – thuRaivOnE

uraththO LidaththiR kuRaththEnai vaiththit
toLiththOdum vetRik – kumarEsA

serukkA tharukkic curaccUr nerukkac
cseruccUr marikkap – porumvElA

thiRappU thalaththiR RiratcONa veRpiR
RirukkO puraththiR – perumALE.

English Easy Version

arukkAr nalaththaith thirippAr manaththuk
kaduththAsai patRith – thaLarAthE

adaRkA lanukkuk kadaikkAl mithiththitu
aRappE thakappat – tazhiyAthE

karukkArar natpaip perukkA sariththuk
kaliccA karaththiR – piRavAthE

karuththA lenakkuth thiruththA LaLiththuk
kalaippO thakaththaip – pukalvAyE

orukkAl ninaiththit tirukkAl mikuththit
turaippArkaL siththath – thuRaivOnE

uraththO LidaththiR kuRaththEnai vaiththittu
oLiththOdum vetRik – kumarEsA

serukkA tharukkic curaccUr nerukku
acceruccUr marikkap – porumvElA

thiRappU thalaththiR RiratcONa veRpiR
RirukkO puraththiR – perumALE.