திருப்புகழ் 404 இறுகு மணி முலை (திருவருணை)

Thiruppugal 404 Irugumanimulai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனன தனதன
தனன தனதன – தனதான

இறுகு மணிமுலை மருவு தரளமு
மெரியு முமிழ்மதி – நிலவாலே

இரவி யெனதுயிர் கவர வருகுழ
லிசையி லுறுகட – லலையாலே

தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
சரமி லெளியெனு – மழியாதே

தருண மணிபொழி லருணை நகருறை
சயில மிசையினில் – வரவேணும்

முறுகு திரிபுர மறுகு கனலெழ
முறுவ லுடையவர் – குருநாதா

முடிய கொடுமுடி யசுரர் பொடிபட
முடுகு மரகத – மயில்வீரா

குறவர் மடமக ளமுத கனதன
குவடு படுமொரு – திருமார்பா

கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
குறுக விடவல – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனன தனதன
தனன தனதன – தனதான

இறுகு மணி முலை மருவு தரளமும்
எரியும் உமிழ் மதி – நிலவாலே

இர(ரா)வி எனது உயிர் கவர வரு குழல்
இசையில் உறு கடல் – அலையாலே

தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு
சரமில் எளியெனும் – அழியாதே

தருணம் மணி பொழில் அருணை நகர் உறை
சயிலம் மிசையினில் – வரவேணும்

முறுகு திரி புரம் முறுகு கனல் எழ
முறுவல் உடையவர் – குரு நாதா

முடிய கொடு முடி அசுரர் பொடிபட
முடுகு மரகத – மயில் வீரா

குறவர் மட மகள் அமுத கனதன
குவடு படும் ஒரு – திரு மார்பா

கொடிய சுடர் இலை தனையும் எழு கடல்
குறுக விடவல – பெருமாளே.

English

iRuku maNimulai maruvu tharaLamu
meriyu mumizhmathi – nilavAlE

iravi yenathuyir kavara varukuzha
lisaiyi luRukada – lalaiyAlE

thaRukaN rathipathi mathanan vidukodu
sarami leLiyenu – mazhiyAthE

tharuNa maNipozhi laruNai nakaruRai
sayila misaiyinil – varavENum

muRuku thiripura maRuku kanalezha
muRuva ludaiyavar – gurunAthA

mudiya kodumudi yasurar podipada
muduku marakatha – mayilveerA

kuRavar madamaka Lamutha kanathana
kuvadu padumoru – thirumArpA

kodiya sudarilai thanaiyu mezhukadal
kuRuka vidavala – perumALE.

English Easy Version

iRuku maNi mulai maruvu tharaLamum
eriyum umizh mathi – nilavAlE

ira(a)vi enathu uyir kavara varu kuzhal
isaiyil uRu kadal – alaiyAlE

thaRukaN rathi pathi mathanan vidu kodu
saramil eLiyenum – azhiyAthE

tharuNam maNi pozhil aruNai nakar uRai
sayilam misaiyinil – varavENum

muRuku thiri puram muRuku kanal ezha
muRuval udaiyavar – guru nAthA

mudiya kodu mudi asurar podipada
muduku marakatha – mayil veerA

kuRavar mada makaL amutha kanathana
kuvadu padum oru – thiru mArpA

kodiya sudar ilai thanaiyum ezhu kadal
kuRuka vidavala – perumALE.