Thiruppugal 488 Surumbuutra
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
தனந்தத்த தனதான – தனதான
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
துரந்துற்ற குளிர்வாடை – யதனாலுந்
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
தொடர்ந்துற்று வருமாதர் – வசையாலும்
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
மடைந்திட்ட விடைமேவு – மணியாலும்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை – தரவேணும்
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
கரந்துள்ள மடமானி – னுடனேசார்
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
களம்பற்றி நடமாடு – மரன்வாழ்வே
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
இதம்பெற்ற மயிலேறி – வருகோவே
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
டெறிந்திட்டு விளையாடு – பெருமாளே.
பதம் பிரித்தது
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
தனந்தத்த தனதான – தனதான
சுரும்பு உற்ற பொழில் தோறும் விரும்பு உற்ற குயில் கூவ
துரந்து உற்ற குளிர் வாடை – அதனாலும்
துலங்கு உற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல
தொடர்ந்து உற்று வரு மாதர் – வசையாலும்
அரும்பு உற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும்
அடைந்திட்ட விடை மேவு – மணியாலும்
அழிந்து உற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி
அசைந்து உற்ற மது மாலை – தர வேணும்
கரும் கொற்ற மத வேழம் முனிந்து உற்ற க(கா)லை மேவி
கரந்து உள்ள மட மானின் – உடனே சார்
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில்
களம் பற்றி நடமாடும் – அரன் வாழ்வே
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர
இதம் பெற்ற மயில் ஏறி – வரு கோவே
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொ(ண்)டு
எறிந்திட்டு விளையாடு(ம்) – பெருமாளே.
English
churumputRa pozhilthORum virumputRa kuyilkUva
thuranthutRa kuLirvAdai – yathanAlum
thulangutRa maruvALi virainthutRa padiyAla
thodarnthutRu varumAthar – vasaiyAlum
arumputRa malarmEvu sezhunkotRa aNaiyAlum
adainthitta vidaimEvu – maNiyAlum
azhinthutRa madamAnai yaRinthatRa mathupENi
asainthutRa mathumAlai – tharavENum
karunkotRa mathavEzha muninthutRa kalaimEvi
karanthuRRa madamAni – nudanEsAr
karumputRa vayalchUzha perumpatRa puliyUril
kaLampatRi nadamAdu – maranvAzhvE
irunthutRu malarpENi yidumpaththar thuyartheera
ithampetRa mayilERi – varukOvE
inanthutRa varucUra nuruNdittu vizhavElko
deRinthittu viLaiyAdu – perumALE.
English Easy Version
churumpu utRa pozhil thORum virumpu utRa kuyil kUva
thuranthu utRa kuLir vAdai – athanAlum
thulangu utRa maru vALi virainthu utRa padi Ala
thodarnthu utRu varu mAthar – vasaiyAlum
arumpu utRa malar mEvu sezhum kotRa aNaiyAlum
adainthitta vidai mEvu – maNiyAlum
azhinthu utRa mada mAnai aRinthu atRam athu pENi
asainthu utRa mathu mAlai – thara vENum
karum kotRa matha vEzham muninthu utRa ka(a)lai
mEvi karanthu uLLa mada mAnin – udanE sAr
karumpu utRa vayal chUzha perumpatRa puliyUril
kaLam patRi nadamAdum – aran vAzhvE
irunthu utRu malar pENi idum paththar thuyar theera
itham petRa mayil ERi – varu kOvE
inam thutRa varu cUran uruNdittu vizha vEl ko(N)du
eRinthittu viLaiyAdu(m) – perumALE.