திருப்புகழ் 525 சரவண பவநிதி (திருவேங்கடம்)

Thiruppugal 525 Saravanabavanidhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன – தனதான

சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர
சரவண பவநிதி யறுமுக குருபர – எனவோதித்

தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற – வருள்வாயே

கருணைய விழிபொழி யொருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற – வருள்நேயா

கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
கலகமி னையதுள கழியவும் நிலைபெற
கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது – மொருநாளே

திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய – வடிவேலா

தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
திமிரம லமொழிய தினகர னெனவரு – பெருவாழ்வே

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெ னவெவரு மதிசய முடையவ
அமலிவி மலிபரை உமையவ ளருளிய – முருகோனே

அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு டனமரு மரகர சிவசிவ – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன – தனதான

சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர – எனவோதித்

தமிழினி லுருகிய அடியவரிடமுறு
சனனமரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி து(ள்)ள வரம் எமதுயிர் சுகமுற – அருள்வாயே

கருணைய விழிபொழி ஒருதனி முதலென
வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
கவிதை யமுதமொழி தருபவர் உயிர்பெற – அருள்நேயா

கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள்
கலகம் இனையதுள கழியவும் நிலைபெற
கதியும் உனதுதிருவடிநிழல் தருவது – ஒருநாளே

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
குமர சமரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய – வடிவேலா

தினமும் உனது துதி பரவிய அடியவர்
மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
திமிர மலமொழிய தினகரன் எனவரு – பெருவாழ்வே

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெனவெ வரும் அதிசயமுடையவ
அமலி விமலி பரை உமையவள் அருளிய – முருகோனே

அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயிலினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும் அரகர சிவசிவ – பெருமாளே

English

saravaNa bavanidhi aRumuga gurupara
saravaNa bavanidhi aRumuga gurupara
saravaNa bavanidhi aRumuga gurupara – enavOdhith

thamizhinil urugiya vadiyavar idamuRu
janana maraNamadhai ozhivuRa sivamuRa
tharupiNi thuLavara memadhuyir sukamuRa – aruLvAyE

karuNaiya vizhipozhi oruthani mudhalena
varukari thirumugar thuNaikoLum iLaiyava
kavidhai amudhamozhi tharubavar uyirpeRa – aruLnEyA

kadalula ginilvarum uyirpadum avadhigaL
kalagami naiyadhuLa kazhiyavum nilaipeRa
gathiyum unadhu thiruvadi nizhal tharuvadhum – orunALE

thiripuram eriseyum iRaiyavar aruLiya
kumara samarapuri thaNigaiyu migumuyar
sivagiriyilum vada malaiyilum ulaviya – vadivElA

dhinamum unadhuthudhi paraviya adiyavar
manadhu kudiyumiru poruLilum ilaguva
thimira malamozhiya dhinakaran enavaru – peruvAzhvE

aravaNai misaithuyil narahari nediyavar
marugane navevarum adhisayam udaiyava
amalivi maliparai umaiyavaL aruLiya – murugOnE

athala vithalamudhal gidugidu giduvena
varumayil inidhoLir shadumaiyil naduvuRa
azhaginudan amarum arahara sivasiva – perumALE.

English Easy Version

saravaNa bavanidhi aRumuga gurupara
saravaNa bavanidhi aRumuga gurupara
saravaNa bavanidhi aRumuga gurupara – enavOdhith

thamizhinil urugiya vadiyavar idamuRu
janana maraNamadhai ozhivuRa sivamuRa
tharupiNi thuLa varamemadhuyir sukamuRa – aruLvAyE

karuNaiya vizhipozhi oruthani mudhalena
varukari thirumugar thuNaikoLum iLaiyava
kavidhai amudhamozhi tharubavar uyirpeRa – aruLnEyA

kadalula ginilvarum uyirpadum avadhigaL
kalagami naiyadhuLa kazhiyavum nilaipeRa
gathiyum unadhu thiruvadi nizhal tharuvadhum – orunALE

thiripuram eriseyum iRaiyavar aruLiya
Kumara samarapuri thaNigaiyu migumuyar
sivagiriyilum vada malaiyilum ulaviya – vadivElA

dhinamum unadhuthudhi paraviya adiyavar
manadhu kudiyum iru poruLilum ilaguva
thimira malamozhiya dhinakaran enavaru – peruvAzhvE

aravaNai misaithuyil narahari nediyavar
marugane navevarum adhisayam udaiyava
amalivi maliparai umaiyavaL aruLiya – murugOnE

athala vithalamudhal gidugidu giduvena
varumayil inidhoLir shadumaiyil naduvuRa
azhaginudan amarum arahara sivasiva – perumALE.