திருப்புகழ் 826 கன்ன லொத்த (சிக்கல்)

Thiruppugal 826 Kannaloththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தன்ன தத்த தனத்த தானன
தன்ன தத்த தனத்த தானன
தன்ன தத்த தனத்த தானன – தனதான

கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்
வன்ம னத்தை யுருக்கு லீலையர்
கண்வெ ருட்டி விழித்த பார்வையர் – இதமாகக்

கையி லுற்ற பொருட்கள் யாவையும்
வையெ னக்கை விரிக்கும் வீணியர்
கைகள் பற்றி யிழுத்து மார்முலை – தனில்வீழப்

பின்னி விட்ட சடைக்கு ளேமலர்
தன்னை வைத்து முடிப்பை நீயவி
ழென்னு மற்ப குணத்த ராசையி – லுழலாமற்

பெய்யு முத்தமி ழிற்ற யாபர
என்ன முத்தர் துதிக்க வேமகிழ்
பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக – அருள்தாராய்

வன்னி யொத்த படைக்க லாதிய
துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி
மண்ணி லற்று விழச்செய் மாதவன் – மருகோனே

மன்னு பைப்பணி யுற்ற நீள்விட
மென்ன விட்டு முடுக்கு சூரனை
மல்லு டற்று முருட்டு மார்பற – அடைவாகச்

சென்னி பற்றி யறுத்த கூரிய
மின்னி ழைத்த திறத்த வேலவ
செய்ய பொற்புன வெற்பு மானணை – மணிமார்பா

செம்ம னத்தர் மிகுத்த மாதவர்
நன்மை பெற்ற வுளத்தி லேமலர்
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தன்ன தத்த தனத்த தானன
தன்ன தத்த தனத்த தானன
தன்ன தத்த தனத்த தானன – தனதான

கன்னல் ஒத்த மொழிச் சொல் வேசியர்
வன் மனத்தை உருக்கு லீலையர்
கண் வெருட்டி விழித்த பார்வையர – இதமாகக்

கையில் உற்ற பொருட்கள் யாவையும்
வை எனக் கை விரிக்கும் வீணியர்
கைகள் பற்றி இழுத்து மார் முலை – தனில் வீழப்

பின்னி விட்ட சடைக்குளே மலர்
தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ்
என்னும் அற்ப குணத்தர் ஆசையில் – உழலாமல்

பெய்யு(ம்) முத்தமிழில் தயாபர
என்ன முத்தர் துதிக்கவே மகிழ்
பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக – அருள் தாராய்

வன்னி ஒத்த படைக் கலாதிய
துன்னு(ம்) கைக் கொள் அரக்கர் மா முடி
மண்ணில் அற்று விழச் செய் மாதவன் – மருகோனே

மன்னு பைப் பணி உற்ற நீள் விடம்
என்ன விட்ட முடுக்கு சூரனை
மல் உடற்று முருட்டு மார்பு அற – அடைவாகச்

சென்னி பற்றி அறுத்த கூரிய
மின் இழைத்த திறத்த வேலவ
செய்ய பொன் புன வெற்பு மான் அணை – மணி மார்பா

செம் மனத்தர் மிகுத்த மாதவர்
நன்மை பெற்ற உளத்திலே
மலர் செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய – பெருமாளே

English

kanna loththa mozhicchol vEsiyar
vanma naththai yurukku leelaiyar
kaNve rutti vizhiththa pArvaiyar – ithamAkak

kaiyi lutRa porutkaL yAvaiyum
vaiye nakkai virikkum veeNiyar
kaikaL patRi yizhuththu mArmulai – thanilveezhap

pinni vitta sadaikku LEmalar
thannai vaiththu mudippai neeyavi
zhennu maRpa kuNaththa rAsaiyi – luzhalAmaR

peyyu muththami zhitRa yApara
enna muththar thuthikka vEmakizh
pinjnja karkkurai seppu nAyaka – aruLthArAy

vanni yoththa padaikka lAthiya
thunnu kaikko Larakkar mAmudi
maNNi latRu vizhacchey mAthavan – marukOnE

mannu paippa NiyutRa neeLvida
menna vitta mudukku cUranai
mallu datRu muruttu mArpaRa – adaivAkac

chenni patRi yaRuththa kUriya
minni zhaiththa thiRaththa vElava
seyya poRpu naveRpu mAnaNai – maNimArpA

semma naththar mikuththa mAthavar
nanmai petRa vuLaththi lEmalar
selva sikkal nakarkkuL mEviya – perumALE.

English Easy Version

kannal oththa mozhic chol vEsiyar
van manaththai urukku leelaiyar
kaN verutti vizhiththa pArvaiyar – ithamAkak

kaiyil utRa porutkaL yAvaiyum
vai enak kai virikkum veeNiyar
kaikaL patRi izhuththu mAr mulai – thanil veezhap

pinni vitta sadaikkuLE malar
thannai vaiththu mudippai nee avizh
ennum aRpa kuNaththar Asaiyil – uzhalAmal

peyyu(ma) muththamizhil thayApara
enna muththar thuthikkavE makizh
pinjnjakarkku urai seppu nAyaka – aruL thArAy

vanni oththa padaik kalAthiya
thunnu(m) kaik koL arakkar mA mudi
maNNil atRu vizhac chey mAthavan – marukOnE

mannu paip paNi utRa neeL vidam
enna vitta mudukku cUranai
mal udatRu muruttu mArpu aRa – adaivAkac

chenni patRi aRuththa kUriya
min izhaiththa thiRaththa vElava
seyya pon puna veRpu mAn aNai – maNi mArpA

sem manaththar mikuththa mAthavar
nanmai petRa uLaththilE malara
selva sikkal nakarakkuL mEviya – perumALE