திருப்புகழ் 941 சங்கைக் கத்தோடு (பட்டாலியூர்)

Thiruppugal 941 Sangkaikkaththodu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
தந்தத்தத் தான தனதன – தனதான

சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
சங்கற்பித் தோதும் வெகுவித – கலைஞானச்

சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
சம்பத்துக் கேள்வி யலமல – மிமவானின்

மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
வந்திக்கப் பேசி யருளிய – சிவநூலின்

மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
வம்பிற்சுற் றாது பரகதி – யருள்வாயே

வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் – மருகோனே

வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை – வயலூரா

கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
கொண்டைக்கொப் பாகு முகிலென – வனமாதைக்

கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
கொங்கிற்பட் டாலி நகருறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
தந்தத்தத் தான தனதன – தனதான

சங்கைக் கத்தோடு சிலுகிடு சங்கிச் சட் கோல சமயிகள்
சங்கற்பித்து ஓதும் வெகு வித – கலை ஞானச்

சண்டைக்குள் கேள்வி அலம் அலம் அண்டற்குப் பூசை இடுமவர்
சம்பத்துக் கேள்வி அலம் அலம் – இமவானின்

மங்கைக்குப் பாகன் இருடிகள் எங்கட்குச் சாமி என அடி
வந்திக்கப் பேசி அருளிய – சிவ நூலின்

மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்துக் கேள்வி அலம் அலம்
வம்பில் சுற்றாது பரகதி – அருள்வாயே

வெங்கைச் சுக்ரீபர் படையை இலங்கைக்குப் போக விட வ(ல்)ல
வென்றிச் சக்ரேசன் மிக மகிழ் – மருகோனே

வெண் பட்டுப் பூண் நல் வனம் கமுகு எண்பட்டுப் பாளை
விரி பொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில் மறை – வயலூரா

கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர்
கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என – வன மாதைக்

கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச் சொல் பாடும் இளையவ
கொங்கில் பட்டாலி நகர் உறை – பெருமாளே.

English

sangaikkath thOdu silukidu sangicchat kOla samayikaL
sangaRpith thOthum vekuvitha – kalainjAnas

saNdaikkut kELvi yalamala maNdaRkup pUsai yidumavar
sampaththuk kELvi yalamala – mimavAnin

mangaikkup pAka nirudika Lengatkuc chAmi yenavadi
vanthikkap pEsi yaruLiya – sivanUlin

manthrapraSth thAra tharisana yanthraththuk kELvi yalamalam
vampiRchut RAthu parakathi – yaruLvAyE

vengaicchuk reepar padaiyaiyi langaikkup pOka vidavala
venRicchak rEsan mikamakizh – marukOnE

veNpattup pUNal vanakamu keNpattup pALai viripozhil
vinjittuchsUzh chUzha veyilmaRai – vayalUrA

kongaikkop pAkum vadakiri sengaikkop pAku naRumalar
koNdaikkop pAku mukilena – vanamAthaik


kumpittuk kAthal kunakiya inpacchoR pAdu miLaiyava
kongiRpat tAli nakaruRai – perumALE.

English Easy Version

sangaik kaththOdu silukidu sangic chad kOla samayikaL
sangaRpiththu Othum veku vitha – kalai njAnac

chaNdaikkuL kELvi alam alam aNdaRkup pUsai idumavar
sampaththuk kELvi alam alam – imavAnin

mangaikkup pAkan irudikaL engatkuc chAmi ena adi
vanthikkap pEsi aruLiya – siva nUlin

manthra praSththAra tharisana anthraththuk kELvi alam alam
vampil sutRAthu parakathi – aruLvAyE

vengaic chukreepar padaiyai ilangaikkup pOka vida va(l)la
venRic chakrEsan mika makizh – marukOnE

veN pattup pUN nal vanam kamuku eNpattup pALai viri pozhil
vinjittuch chUzha veyil maRai – vayalUrA

kongaikku oppAkum vada kiri sem kaikku oppAkum naRu malar
koNdaikku oppAkum mukil ena – vana mAthaik

kumpittuk kAthal kunakiya inpac chol pAdum iLaiyava
kongil pattAli nakar uRai – perumALE.