பெருமாள் திருமொழி தனியன்கள்

உடயவர்அருளிச்செய்தது

இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!
தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன் எங்கள்
குலசேகரனென்றேகூறு

மணக்கால்நம்பிஅருளியது

ஆரம்கெடப்பரனன்பர்கொள்ளாரென்று அவர்களுக்கே
வாரங்கொடுகுடப்பாம்பில்கையிட்டவன் மாற்றலரை
வீரங்கெடுத்தசெங்கோற்கொல்லிகாவலன் வில்லவர்கோன்
சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே. 1

பதிமூன்றாம் திருமொழி : கண்ணனென்னும்

தலைவி அச்சுதன் அணிந்த ஆடைமுதலியவற்றால் தன் வாட்டத்தை தணிக்க வேண்டுதல்

627 கண்ணனென்னும்கருந்தெய்வம் காட்சிபழகிக்கிடப்பேனை
புண்ணில்புளிப்பெய்தாற் போலப்புறநின்றழகுபேசாதே
பெண்ணின்வருத்தமறியாத பெருமா னரையில்பீதக
வண்ணஆடைகொண்டு என்னை வாட்டம்தணியவீசீரே. (2) 1

628 பாலாலிலையில்துயில்கொண்ட பரமன்வலைப்பட்டிருந்தேனை
வேலால்துன்னம்பெய்தாற்போல் வேண்டிற்றெல்லாம்பேசாதே
கோலால்நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக்கிடந்தகுடமாடி
நீலார் தண்ணந்துழாய்கொண்டு என்நெறிமென்குழல்மேல்சூட்டீரே. 2

629 கஞ்சைக்காய்ந்தகருவில்லி கடைக்கணென்னும்சிறைக்கோலால்
நெஞ்சூடுருவவேவுண்டு நிலையும்தளர்ந்துநைவேனை
அஞ்சேலென்னானவனொருவன் அவன்மார்வணிந்தவனமாலை
வஞ்சியாதேதருமாகில் மார்வில்கொணர்ந்துபுரட்டீரே. 3

630 ஆரேயுலகத்தாற்றுவார்? ஆயர்பாடிகவர்ந்துண்ணும்
காரேறுழக்கவுழக்குண்டு தளர்ந்தும்முறிந்தும்கிடப்பேனை
ஆராவமுதமனையான்றன் அமுதவாயிலூறிய
நீர்தான்கொணர்ந்துபுலராமே பருக்கியிளைப்பைநீக்கிரே. 4

631 அழிலும்தொழிலுமுருக்காட்டான் அஞ்சேலென்னானவனொருவன்
தழுவிமுழுகிப்புகுந்தென்னைச் சுற்றிச்சுழன்றுபோகானால்
தழையின்பொழில்வாய்நிரைப்பின்னே நெடுமாலூதிவருகின்ற
குழலின்தொளைவாய்நீர்கொண்டு குளிரமுகத்துத்தடவீரே. 5

632 நடையொன்றில்லாவுலகத்து நந்தகோபன்மகனென்னும்
கொடியகடியதிருமாலால் குளப்புக்கூறுகொளப்பட்டு
புடையும்பெயரகில்லேன்நான் போட்கன்மிதித்தஅடிப்பாட்டில்
பொடித்தான்கொணர்ந்துபூசீர்கள் போகாவுயிரென்னுடம்பையே. 6

633 வெற்றிக்கருளகொடியான்றன் மீமீதாடாவுலகத்து
வெற்றவெறிதேபெற்றதாய் வேம்பேயாகவளர்த்தாளே
குற்றமற்றமுலைதன்னைக் குமரன்கோலப்பணைத்தோளோடு
அற்றகுற்றமவைதீர அணையவமுக்கிக்கட்டீரே. 7

634 உள்ளேயுருகிநைவேனை உளளோஇலளோவென்னாத
கொள்ளைகொள்ளிக்குறும்பனைக் கோவர்த்தனனைக்கண்டக்கால்
கொள்ளும்பயனொன்றில்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டவன்மார்விலெறிந்து என்னழலைதீர்வேனே. 8

635 கொம்மைமுலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர்குற்றேவல்
இம்மைப்பிறவிசெய்யாதே இனிப்போய்ச்செய்யும்தவந்தானென்
செம்மையுடையதிருமார்வில் சேர்த்தானேலும்ஒருஞான்று
மெய்ம்மைசொல்லிமுகம்நோக்கி விடைதான்தருமேல்மிகநன்றே. 9

636 அல்லல்விளைத்தபெருமானை ஆயர்பாடிக்கணிவிளக்கை
வில்லிபுதுவைநகர்நம்பி விட்டுசித்தன்வியன்கோதை
வில்லைத்தொலைத்தபுருவத்தாள் வேட்கையுற்றுமிகவிரும்பும்
சொல்லைத்துதிக்கவல்லார்கள் துன்பக்கடளுள்துவளாரே. (2) 10

நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்

கூடலிழைத்தல்

534 தெள்ளியார்பலர் கைதொழுந்தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலைமணாளனார்
பள்ளிகொள்ளுமிடத்து அடிகொட்டிட
கொள்ளுமாகில் நீகூடிடுகூடலே (2) 1

535 காட்டில்வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறைவாமனன்
ஓட்டராவந்து என்கைப்பற்றி தன்னொடும்
கூட்டுமாகில் நீகூடிடுகூடலே. (2 ) 2

536 பூமகன்புகழ்வானவர் போற்றுதற்
காமகன் அணிவாணுதல் தேவகி
மாமகன் மிகுசீர் வசுதேவர்தம்
கோமகன்வரில் கூடிடுகூடலே. 3

537 ஆய்ச்சிமார்களும் ஆயருமஞ்சிட
பூத்தநீள்கடம்பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்தகாளியன்மேல் நடமாடிய
கூத்தனார்வரில் கூடிடுகூடலே. 4

538 மாடமாளிகை சூழ்மதுரைப்பதி
நாடி நந்தெருவின் நடுவேவந்திட்டு
ஓடைமாமதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடுகூடலே. 5

539 அற்றவன் மருதம்முறியநடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையிற்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன்வரில் கூடிடுகூடலே. 6

540 அன்றின்னாதனசெய் சிசுபாலனும்
நின்றநீள்மருதும் மெருதும்புள்ளும்
வென்றிவேல்விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன்வரில் கூடிடுகூடலே. 7

541 ஆவலன்புடயார்தம் மனத்தன்றி
மேவலன் விரைசூழ் துவராபதிக்
காவலன் கன்றுமேய்த்து விளையாடும்
கோவலன்வரில் கூடிடுகூடலே. 8

542 கொண்டகோலக் குறளுருவாய்ச்சென்று
பண்டுமாவலிதன் பெருவேள்வியில்
அண்டமும்நிலனும்அடியொன்றினால்
கொண்டவன்வரில் கூடிடுகூடலே. 9

543 பழகுநான்மறையின்பொருளாய் மத
ஒழுகுவாரண முய்யவளித்த எம்
அழகனார் அணியாய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடுகூடலே. 10

544 ஊடல்கூடல் உணர்தல்புணர்தலை
நீடுநின்ற நிறைபுகழாய்ச்சியர்
கூடலைக் குழற்கோதைமுன்கூறிய
பாடல்பத்தும்வல்லார்க்கு இல்லைபாவமே. 11

பதிநான்காம் திருமொழி : பட்டிமேய்ந்தோர்

விருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமை கூறுதல்

637 பட்டிமேய்ந்தோர்காரேறு பலதேவற்கோர்கீழ்க்கன்றாய்
இட்டீறிட்டுவிளையாடி இங்கேபோதக்கண்டீரே?
இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீரூட்டி
விட்டுக்கொண்டுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. (2) 1

638 அனுங்கவென்னைப்பிரிவுசெய்து ஆயர்பாடிகவர்ந்துண்ணும்
குணுங்குநாறிக்குட்டேற்றைக் கோவர்த்தனனைக்கண்டீரே?
கணங்களோடுமின்மேகம் கலந்தாற்போல வனமாலை
மினுங்கநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. 2

639 மாலாய்ப்பிறந்தநம்பியை மாலேசெய்யும்மணாளனை
ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே?
மேலால்பரந்தவெயில்காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும்
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே. 3

640 கார்த்தண்கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறுபடுத்தி என்னை
ஈர்த்துக்கொண்டுவிளையாடும் ஈசன்றன்னைக்கண்டீரே?
போர்த்தமுத்தின்குப்பாயப் புகர்மால்யானைக்கன்றேபோல்
வேர்த்துநின்று விளையாட விருந்தாவனத்தேகண்டோமே. 4

641 மாதவன்என்மணியினை வலையில்பிழைத்தபன்றிபோல்
ஏதுமொன்றும்கொளத்தாரா ஈசன்றன்னைக்கண்டீரே?
பீதகவாடையுடைதாழப் பெருங்கார்மேகக்கன்றேபோல்
வீதியாரவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2) 5

642 தருமமறியாக்குறும்பனைத் தங்கைச்சார்ங்கமதுவேபோல்
புருவவட்டமழகிய பொருத்தமிலியைக்கண்டீரே?
உருவுகரிதாய்முகம்செய்தாய் உதயப்பருப்பதத்தின்மேல்
விரியும்கதிரேபோல்வானை விருந்தாவனத்தேகண்டோமே. 6

643 பொருத்தமுடையநம்பியைப் புறம்போலுள்ளும்கரியானை
கருத்தைப்பிழைத்துநின்ற அக்கருமாமுகிலைக்கண்டீரே?
அருத்தித்தாராகணங்களால் ஆரப்பெருகுவானம்போல்
விருத்தம்பெரிதாய்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே. 7

644 வெளியசங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை
அளிநன்குடையதிருமாலை ஆழியானைக்கண்டீரே?
களிவண்டெங்கும்கலந்தாற்போல் கழம்பூங்குழல்கள்தடந்தோள்மேல்
மிளிரநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. 8

645 நாட்டைப்படையென்று அயன்முதலாத்தந்த நளிர்மாமலருந்தி
வீட்டைப்பண்ணிவிளையாடும் விமலன்றன்னைக்கண்டீரே?
காட்டைநாடித்தேனுகனும் களிறும்புள்ளுமுடன்மடிய
வேட்டையாடிவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2) 9

646 பருந்தாட்களிற்றுக்கருள்செய்த பரமன்றன்னை பாரின்மேல்
விருந்தாவனத்தேகண்டமை விட்டுசித்தன்கோதைசொல்
மருந்தாமென்றுதம்மனத்தே வைத்துக்கொண்டுவாழ்வார்கள்
பெருந்தாளுடையபிரானடிக்கீழ்ப் பிரியாதென்றுமிருப்பாரே. (2) 10

பன்னிரண்டாம் திருமொழி : மற்றிருந்தீர்கட்கு

தலைவிகண்ண்னுள்ளவிடத்திற்கொண்டுவிடும்படி உற்றாரைவேண்டுதல்

617 மற்றிருந்தீர்கட்கறியலாகா
மாதவனென்பதோரன்புதன்னை
உற்றிருந்தேனுக்குரைப்பதெல்லாம்
ஊமையரோடுசெவிடர்வார்த்தை
பெற்றிருந்தாளையொழியவேபோய்ப்
பேர்த்தொருதாயில்வளர்ந்தநம்பி
மற்பொருந்தாமற்களமடைந்த
மதுரைப்புறத்தென்னையுய்த்திடுமின். (2) 1

618 நாணியினியோர்கருமமில்லை
நாலயலாரும்அறிந்தொழிந்தார்
பாணியாதென்னைமருந்துசெய்து
பண்டுபண்டாக்கவுறுதிராகில்
மாணியுருவாயுலகளந்த
மாயனைக்காணில்தலைமறியும்
ஆணையால்நீரென்னைக்காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக்கேயென்னையுய்த்திடுமின். 2

619 தந்தையும்தாயுமுற்றாரும்நிற்கத்
தனிவழிபோயினாள்என்னும்சொல்லு
வந்தபின்னைப்பழிகாப்பரிது
மாயவன்வந்துருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப்பரக்கழித்துக்
குறும்புசெய்வானோர்மகனைப்பெற்ற
நந்தகோபாலன்கடைத்தலைக்கே
நள்ளிருட்கணென்னையுய்த்திடுமின். 3

620 அங்கைத்தலத்திடையாழிகொண்டான்
அவன்முகத்தன்றிவிழியேனென்று
செங்கச்சுக்கொண்டுகண்ணாடையார்த்துச்
சிறுமானிடவரைக்காணில்நாணும்
கொங்கைத்தலமிவைநோக்கிக்காணீர்
கோவிந்தனுக்கல்லால்வாயில்போகா
இங்குத்தைவாழ்வையொழியவேபோய்
யமுனைக்கரைக்கென்னையுய்த்திடுமின். 4

621 ஆர்க்குமென்நோயிதறியலாகாது
அம்மனை மீர்! துழதிப்படாதே
கார்க்கடல் வண்ணனென்பானொருவன்
கைகண்டயோகம்தடவத்தீரும்
நீர்க்கரைநின்றகடம்பையேறிக்
காளியனுச்சியில்நட்டம்பாய்ந்து
போர்க்களமாகநிருத்தஞ்செய்த
பொய்கைக்கரைக்கென்னையுய்த்திடுமின். 5

622 கார்த்தண்முகிலும்கருவிளையும்
காயாமலரும்கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றனவென்னைவந்திட்டு
இருடீகேசன்பக்கல்போகேயென்று
வேர்த்துப்பசித்துவயிறசைந்து
வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று
பார்த்திருந்துநெடுநோக்குக்கொள்ளும்
பத்தவிலோசநத்துய்த்திடுமின். 6

623 வண்ணம்திரிவும்மனங்குழைவும்
மானமிலாமையும்வாய்வெளுப்பும்
உண்ணலுறாமையுமுள்மெலிவும்
ஓதநீர்வண்ணனென்பானொருவன்
தண்ணந்துழாயென்னும்மாலைகொண்டு
சூட்டத்தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழியப்பலதேவன்வென்ற
பாண்டிவடத்தென்னையுய்த்திடுமின். 7

624 கற்றினம்மேய்க்கிலும்மேய்க்கப்பெற்றான்
காடுவாழ்சாதியுமாகப்பெற்றான்
பற்றியுரலிடையாப்புமுண்டான்
பாவிகாள்! உங்களுக்கேச்சுக்கொலோ?
கற்றனபேசிவசையுணாதே
காலிகளுய்யமழைதடுத்து
கொற்றக்குடையாகவேந்திநின்ற
கோவர்த்தனத்தென்னையுய்த்திடுமின். 8

625 கூட்டிலிருந்துகிளியெப்போதும்
கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்
ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில்
உலகளந்தான்என் றுயரக்கூவும்
நாட்டில்தலைப்பழியெய்தியுங்கள்
நன்மையிழந்துதலையிடாதே
சூட்டுயர்மாடங்கள்சூழ்ந்துதோன்றும்
துவராபதிக்கென்னையுய்த்திடுமின். 9

626 மன்னுமதுரைதொடக்கமாக
வண்துவராபதிதன்னளவும்
தன்னைத்தமருய்த்துப்பெய்யவேண்டித்
தாழ்குழலாள்துணிந்ததுணிவை
பொன்னியல்மாடம்பொலிந்துதோன்றும்
புதுவையர்கோன்விட்டுசித்தன்கோதை
இன்னிசையால்சொன்னசெஞ்சொல்மாலை
ஏத்தவல்லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10

பதினொராம் திருமொழி : தாமுகக்கும்

தலைவி மாயவன்செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திகூறுதல்

607 தாமுகக்கும்தம்கையில் சங்கமேபோலாவோ?
யாமுகக்குமெங்கையில் சங்கமுமேந்திழையீர்
தீமுகத்துநாகணைமேல் சேரும்திருவரங்கர்
ஆ முகத்தைநோக்காரால் அம்மனே! அம்மனே! (2) 1

608 எழிலுடையஅம்மனைமீர்! என்னரங்கத்தின்னமுதர்
குழலழகர்வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப்பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும்கழல்வளையேயாக்கினரே. 2

609 பொங்கோதம்சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ்சோராமே ஆள்கின்றவெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார்
எங்கோல்வளையால் இடர்தீர்வராகாதே? (2) 3

610 மச்சணிமாட மதிளரங்கர்வாமனனார்
பச்சைப்பசுந்தேவர் தாம்பண்டுநீரேற்ற
பிச்சைக்குறையாகி என்னுடையபெய்வளைமேல்
இச்சை யுடையரேல் இத்தெருவேபோதாரே ? 4

611 பொல்லாக்குறளுருவாய்ப் பொற்கையில்நீரேற்று
எல்லாவுலகும் அளந்துகொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்கநாகணையான்
இல்லாதோம்கைப்பொருளும் எய்துவானொத்துளனே. 5

612 கைப்பொருள்கள்முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரளவோடும் திருவரங்கச்செல்வனார்
எப்பொருட்கும்நின்று ஆர்க்குமெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய்நின்றார் என்மெய்ப்பொருளும்கொண்டாரே. 6

613 உண்ணாதுறங்காது ஒலிகடலையூடறுத்து
பெண்ணாக்கையாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார்மதிள்சூழ் திருவரங்கச்செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளேயெண்ணுவரே. 7

614 பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப்பன்றியாம்
தேசுடையதேவர் திருவரங்கச்செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும்பேராவே. (2) 8

615 கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக்கைப்பிடிப்பான்
திண்ணார்ந்திருந்த சிசுபாலன்தேசழிந்து
அண்ணாந் திருக்கவே ஆங்கவளைக்கைப்பிடித்த
பெண்ணாளன்பேணுமூர் பேருமரங்கமே. 9

616 செம்மையுடைய திருவரங்கர்தாம்பணித்த
மெய்ம்மைப்பெருவார்த்தை விட்டுசித்தர்கேட்டிருப்பர்
தம்மையுகப்பாரைத் தாமுகப்பரென்னும்சொல்
தம்மிடையேபொய்யானால் சாதிப்பாராரினியே? (2) 10

பத்தாம் திருமொழி – கார்க்கோடல் பூக்காள்

தலைவிபிரிளந்தநிலையில்மனம்பொறாது வருந்திக் கூறுதல்

597 கார்க்கோடல் பூக்காள்! கார்க்கடல்வண்ணனென்மேல் உம்மைப்
போர்க்கோலம்செய்து போரவிடுத்தவனெங்குற்றான்
ஆர்க்கோஇனிநாம் பூசலிடுவது? அணிதுழாய்த்
தார்க்கோடும்நெஞ்சந்தன்னைப் படைக்கவல்லேனந்தோ. (2) 1

598 மேற்றோன்றிப்பூக்காள் மேலுலகங்களின்மீதுபோய்
மேற்றோன்றும்சோதி வேதமுதல்வர்வலங்கையில்
மேற்றோன்றுமாழியின் வெஞ்சுடர்போலச் சுடாது எம்மை
மாற்றோலைப்பட்டவர்கூட்டத்து வைத்துகொள்கிற்றிரே. 2

599 கோவைமணாட்டி! நீயுன்கொழுங்கனிகொண்டு எம்மை
ஆவிதொலைவியேல் வாயழகர்தம்மையஞ்சுதும்
பாவியேன்தோன்றிப் பாம்பணையார்க்கும்தம்பாம்புபோல்
நாவுமிரண்டுள வாய்த்து நாணிலியேனுக்கே. 3

600 முல்லைப்பிராட்டி! நீயுன்முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல்விளைவியேல் ஆழிநங்காய்! உன்னடைக்கலம்
கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும்பொய்யானால் நானும்பிறந்தமைபொய்யன்றே. 4

601 பாடும்குயில்காள்! ஈதென்னபாடல்? நல்வேங்கட
நாடர்நமக்கொருவாழ்வுதந்தால் வந்துபாடுமின்
ஆடும்கருளக்கொடியுடையார் வந்தருள்செய்து
கூடுவராயிடில் கூவிநும்பாட்டுகள்கேட்டுமே. 5

602 கணமாமயில்காள்! கண்ணபிரான்திருக்கோலம்போன்று
அணிமாநடம்பயின் றாடுகின்றீர்க்கு அடிவீழ்கின்றேன்
பணமாடரவணைப் பற்பலகாலமும்பள்ளிகொள்
மணவாளர் நம்மைவைத்த பரிசிதுகாண்மினே. 6

603 நடமாடித் தோகைவிரிக்கின்ற மாமயில்காள்! உம்மை
நடமாட்டங்காணப் பாவியேன்நானோர்முதலிலேன்
குடமாடுகூத்தன் கோவிந்தன்கோமிறைசெய்து எம்மை
உடைமாடுகொண்டான் உங்களுக்கினியொன்றுபோதுமே. 7

604 மழையே! மழையே! மண்புறம்பூசி உள்ளாய்நின்று
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேங்கடத் துள்நின்ற
அழகப்பிரானார் தம்மை என்நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று என்னைத் ததைத்துக்கொண்டூ ஊற்றவும்வல்லையே. (2) 8

605 கடலே! கடலே! உன்னைக்கடைந்துகலக்குறுத்து
உடலுள்புகுந்து நின்றூறலறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின்றூறலறுக்கின்றமாயற்கு என்
நடலைகளெல்லாம் நாகணைக்கேசென்றுரைத்தியே. 9

606 நல்லஎன்தோழி! நாகணைமிசைநம்பரர்
செல்வர்பெரியர் சிறுமானிடவர்நாம்செய்வதென்?
வில்லிபுதுவைவிட்டுசித்தர் தங்கள்தேவரை
வல்லபரிசுவருவிப்பரேல் அதுகாண்டுமே. (2) 10

ஒன்பதாம் திருமொழி – சிந்தூரச் செம்பொடி

திருமாலிருஞ்சோலை யெம்பெருமானை வழிபடுதல்

587 சிந்துரச்செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும்பரந்திட்டனவால்
மந்தரம்நாட்டியன்று மதுரக்கொழுஞ்சாறுகொண்ட
சுந்தரத்தோளுடையான் சுழலையில்நின்றுய்துங்கொலோ? (2) 1

588 போர்களிறுபொரும் மாலிருஞ்சோலையம்பூம்புறவில்
தார்க்கொடிமுல்லைகளும் தவளநகைகாட்டுகின்ற
கார்க்கொள்பிடாக்கள்நின்று கழறிச்சிரிக்கத்தரியேன்
ஆர்க்கிடுகோ? தோழி! அவன்தார்ச்செய்தபூசலையே. 2

589 கருவிளையொண்மலர்காள்! காயாமலர்காள்! திருமால்
உருவொளிகாட்டுகின்றீர் எனக்குய்வழக்கொன்றுரையீர்
திருவிளையாடுதிண்தோள் திருமாலிருஞ்சோலைநம்பி
வரிவளையில்புகுந்து வந்திபற்றும்வழக்குளதே. 3

590 பைம்பொழில்வாழ்குயில்காள்! மயில்காள்! ஒண்கருவிளைகாள்
வம்பக்களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலைநின்ற
எம்பெருமானுடையநிறம் உங்களுக்கெஞ்செய்வதே? 4

591 துங்கமலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலைநின்ற
செங்கட்கருமுகிலின் திருவுருப்போல் மலர்மேல்
தொங்கியவண்டினங்காள்! தொகுபூஞ்சுனைகாள்! சுனையில்
தங்குசெந்தாமரைகாள்! எனக்கோர்சரண்சாற்றுமினே. 5

592 நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு நான்
நூறுதடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்துபராவிவைத்தேன்
நூறுதடாநிறைந்த அக்காரவடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவைகொள்ளுங்கொலோ. (2) 6

593 இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான்
ஒன்றுநூறாயிரமாக்கொடுத்துப் பின்னும்ஆளும்செய்வன்
தென்றல்மணங்கமழும் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடியேன்மனத்தே வந்துநேர்படிலே. 7

594 காலையெழுந்திருந்து கரியகுருவிக்கணங்கள்
மாலின்வரவுசொல்லி மருள்பாடுதல்மெய்ம்மைகொலோ?
சோலைமலைப்பெருமான் துவராபதியெம்பெருமான்
ஆலினிலைப்பெருமான் அவன்வார்த்தையுரைக்கின்றதே. 8

595 கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன்மாலைகளோடு உடனாய்நின்றுதூங்குகின்றேன்
பூங்கொள்திருமுகத்து மடுத்தூதியசங்கொலியும்
சார்ங்கவில்நாணொலியும் தலைப்பெய்வதெஞ்ஞான்று கொலோ? 9

596 சந்தொடுகாரகிலும்சுமந்து தடங்கள்பொருது
வந்திழியும்சிலம்பாறுடை மாலிருஞ்சோலைநின்ற
சுந்தரனை சுரும்பார்குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ்பத்தும்வல்லார் திருமாலடிசேர்வர்களே. (2) 10

எட்டாம் திருமொழி – விண்ணீல மேலாப்பு

மேகவிடுதூது

577 விண்ணீலமேலாப்பு விரித்தாற்போல்மேகங்காள்!
தெண்ணீர்பாய்வேங்கடத்து என் திருமாலும்போந்தானே?
கண்ணீர்கள்முலைக்குவட்டில் துளிசோரச்சோர்வேனை
பெண்ணீர்மையீடழிக்கும் இது தமக்கோர்பெருமையே. (2) 1

578 மாமுத்தநிதிசொரியும் மாமுகில்காள்! வேங்கடத்துச்
சாமத்தினிறங்கொண்ட தாடாளன்வார்த்தையென்னே
காமத்தீயுள்புகுந்து கதுவப்பட்டிடைக்கங்குல்
ஏமத்தோர்தென்றலுக்கு இங்கிலக்காய்நானிருப்பேனே. 2

579 ஒளிவண்ணம்வளைசிந்தை உறக்கத்தோடிவையெல்லாம்
எளிமையாலிட்டென்னை ஈடழியப்போயினவால்
குளிரருவிவேங்கடத்து என்கோவிந்தன்குணம்பாடி
அளியத்தமேகங்காள்! ஆவிகாத்திருப்பேனே. 3

580 மின்னாகத்தெழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்
தன்னாகத்திருமங்கை தங்கியசீர்மார்வற்கு
என்னாகத்திளங்கொங்கை விரும்பித்தாம்நாள்தோறும்
பொன்னாகம்புல்குதற்கு என்புரிவுடைமைசெப்புமினே. 4

581 வான்கொண்டுகிளர்ந்தெழுந்த மாமுகில்காள்! வேங்கடத்துத்
தேன்கொண்டமலர்ச்சிதறத் திரண்டேறிப்பொழிவீர்காள்!
ஊன்கொண்டவள்ளுகிரால் இரணியனையுடலிடந்தான்
தான்கொண்டசரிவளைகள் தருமாகில்சாற்றுமினே. 5

582 சலங்கொண்டுகிளர்ந்தெழுந்த தண்முகில்காள்! மாவலியை
நிலங்கொண்டான்வேங்கடத்தே நிரந்தேறிப்பொழிவீர்காள்
உலங்குண்டவிளங்கனிபோல் உள்மெலியப்புகுந்து என்னை
நலங்கொண்டநாரணற்கு என்நடலைநோய்செப்புமினே. 6

583 சங்கமாகடல்கடைந்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச்
செங்கண்மால்சேவடிக்கீழ் அடிவீழ்ச்சிவிண்ணப்பம்
கொங்கைமேல்குங்குமத்தின் குழம்பழியப்புகுந்து ஒருநாள்
தங்குமேல் என்னாவிதங்குமென்றுஉரையீரே. (2) 7

584 கார்காலத்தெழுகின்ற கார்முகில்காள்! வேங்கடத்துப்
போர்காலத்தெழுந்தருளிப் பொருதவனார்பேர்சொல்லி
நீர்காலத் தெருக்கில் அம்பழவிலைபோல்வீழ்வேனை
வார்காலத்தொருநாள் தம்வாசகம்தந்தருளாரே. 8

585 மதயானைபோலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாகவாழ்வீர்காள்! பாம்பணையான்வார்த்தையென்னே!
கதியென்றும்தானாவான் கருதாது ஓர்பெண்கொடியை
வதைசெய்தான்என்னும்சொல் வையகத்தார்மதியாரே. (2) 9

586 நாகத்தினணையானை நன்னுதலாள்நயந்துரைசெய்
மேகத்தைவேங்கடக்கோன் விடுதூதில்விண்ணப்பம்
போகத்தில்வழுவாத புதுவையர்கோன்கோதைதமிழ்
ஆகத்துவைத்துரைப்பார் அவரடியாராகுவரே. (2) 10

ஏழாம் திருமொழி – கருப்பூரம் நாறுமோ

பாஞ்சஜன்னியத்தைப் பத்பநாபனோடுஞ் சுற்றமாக்குதல்

567 கருப்பூரம்நாறுமோ? கமலப்பூநாறுமோ?
திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்தமாதவன்றன் வாய்ச்சுவையும்நாற்றமும்
விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே. (2) 1

568 கடலில்பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில்வளர்ந்துபோய் ஊழியான்கைத்தலத்
திடரில் குடியேறித் தீயவசுரர்
நடலைப்படமுழங்கும் தோற்றத்தாய்நற்சங்கே. 2

569 தடவரையின்மீதே சரற்காலசந்திரன்
இடையுவாவில்வந்து எழுந்தாலேபோல் நீயும்
வடமதுரையார்மன்னன் வாசுதேவன்கையில்
குடியேறிவீற்றிருந்தாய் கோலப்பெருஞ்சங்கே! 3

570 சந்திரமண்டலம்போல் தாமோதரன்கையில்
அந்தரமொன்றின்றி ஏறியவன்செவியில்
மந்திரங்கொள்வாயேபோலும் வலம்புரியே
இந்திரனுமுன்னோடு செல்வத்துக்கேலானே. 4

571 உன்னோடுடனே ஒருகடலில்வாழ்வாரை
இன்னாரினையாரென்று எண்ணுவாரில்லைகாண்
மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம்
பன்னாளுமுண்கின்றாய் பாஞ்சசன்னியமே! 5

572 போய்த்தீர்த்தமாடாதே நின்றபுணர்மருதம்
சாய்த்தீர்த்தான்கைத்தலத்தே ஏறிக்குடிகொண்டு
சேய்த்தீர்தமாய்நின்ற செங்கண்மால்தன்னுடய
வாய்த்தீர்த்தம்பாய்ந்தாடவல்லாய் வலம்புரியே! 6

573 செங்கமலநாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
செங்கண்கருமேனி வாசுதேவனுடய
அங்கைத்தலமேறி அன்னவசஞ்செய்யும்
சங்கரையா! உன்செல்வம் சாலவழகியதே. 7

574 உண்பதுசொல்லில் உலகளந்தான்வாயமுதம்
கண்படைகொள்ளில் கடல்வண்ணன்கைத்தலத்தே
பெண்படையாருன்மேல் பெரும்பூசல்சாற்றுகின்றார்
பண்பலசெய்கின்றாய் பாஞ்சசன்னியமே! 8

575 பதினாறாமாயிரவர் தேவிமார்பார்த்திருப்ப
மதுவாயில்கொண்டாற்போல் மாதவன்றன்வாயமுதம்
பொதுவாகவுண்பதனைப் புக்குநீயுண்டக்கால்
சிதையாரோ? உன்னோடு செல்வப்பெருஞ்சங்கே! 9

576 பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய வண்புதுவை
ஏய்ந்தபுகழ்ப்பட்டர்பிரான் கோதைதமிழீரைந்தும்
ஆய்ந்தேத்தவல்லாரவரு மணுக்கரே. (2) 10

ஆறாம் திருமொழி – வாரணமாயிரம்

மாயவனை மணஞ்செது கொள்வதாகத் தான்கண்ட களவைத் தலைவி தோழிக்குக் கூறுதல்

556 வாரணமாயிரம் சூழவலம்செய்து
நாரணநம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (2) 1

557 நாளைவதுவை மணமென்றுநாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப்பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தனென்பான் ஓர்
காளைபுகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 2

558 இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்
வந்திருந்தென்னைம கட்பேசிமந்திரித்து
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 3

559 நால்திசைத்தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச்சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புனைகண்ணிப் புனிதனோடென்றன்னை
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 4

560 கதிரொளிதீபம் கலசமுடனேந்தி
சதிரிளமங்கையர்தாம் வந்தெதிர்கொள்ள
மதுரையார்மன்ன னடிநிலைதொட்டு எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 5

561 மத்தளங்கொட்ட வரிசங்கம்நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து என்னைக்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான். 6

562 வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்
பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்து
காய்சினமாகளிறன்னான் என்கைப்பற்றி
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழீ! நான். 7

563 இம்மைக்குமேழேழ்பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன்நம்பி
செம்மையுடையதிருக்கையால் தாள்பற்றி
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ! நான். 8

564 வரிசிலைவாள்முகத்து என்னைமார்தாம்வந்திட்டு
எரிமுகம்பாரித்து என்னைமுன்னேநிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென்கைவைத்து
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 9

565 குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கலவீதி வலம்செய்துமணநீர்
அங்கவனோடும் உடன்சென்றங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 10

566 ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன்கோதைசொல்
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர்
வாயுநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2) 11

ஐந்தாம் திருமொழி – மன்னு பெரும்புகழ்

எம்பெருமானைக் கூவியழைக்கும்படி குயிலுக்கு கூறுதல்

545 மன்னுபெரும்புகழ்மாதவன்
மாமணிவண்ணன் மணிமுடிமைந்தன்
தன்னை உகந்ததுகாரணமாக
என்சங்கிழக்கும்வழக்குண்டே?
புன்னைகுருக்கத்திஞாழல்செருந்திப்
பொதும்பினில்வாழும்குயிலே!
பன்னியெப்போதுமிருந்துவிரைந்து என்
பவளவாயன்வரக்கூவாய். (2) 1

546 வெள்ளைவிளிசங்கிடங்கையிற்கொண்ட
விமலனெனக்குருக்காட்டான்
உள்ளம்புகுந்தென்னைநைவித்து
நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும்
கள்ளவிழ்செண்பகப்பூமலர்கோதிக்
களித்திசைபாடுங்குயிலே!
மெள்ளவிருந்துமிழற்றிமிழற்றாது என்
வேங்கடவன்வரக்கூவாய். 2

547 மாதலிதேர்முன்புகோல்கொள்ள
மாயன்இராவணன் மேல் சரமாரி
தாய்தலையற்றற்றுவீழத் தொடுத்த
தலைவன்வரவெங்குங்காணேன்!
போதலர்காவில்புதுமணம்நாறப்
பொறிவண்டின்காமரங்கேட்டு உன்
காதலியோடுடன்வாழ்குயிலே! என்
கருமாணிக்கம்வரக்கூவாய். 3

548 என்புருகியினவேல்நெடுங்கண்கள்
இமைபொருந்தாபலநாளும்
துன்பக்கடல்புக்குவைகுந்தனென்பது ஒர்
தோணிபெறாதுஉழல்கின்றேன்
அன்புடையாரைப்பிரிவுறுநோயது
நீயுமறிதிகுயிலே!
பொன்புரைமேனிக்கருளக்கொடியுடைப்
புண்ணியனைவரக்கூவாய். 4

549 மென்னடையன்னம்பரந்துவிளையாடும்
வில்லிபுத்தூருறைவான்றன்
பொன்னடிகாண்பதோராசையினால் என்
பொருகயற்கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலோடுபாலமுதூட்டி
எடுத்தவென்கோலக்கிளியை
உன்னொடுதோழமைகொள்வன்குயிலே!
உலகளந்தான்வரக்கூவாய். (2) 5

550 எத்திசை யுமமரர்பணிந்தேத்தும்
இருடீகேசன்வலிசெய்ய
முத்தன்னவெண்முறுவற்செய்யவாயும்
முலயுமழகழிந்தேன்நான்
கொத்தலர்காவில்மணித்தடம் கண்படை
கொள்ளுமிளங்குயிலே! என்
தத்துவனை வரக்கூகிற்றியாகில்
தலையல்லால்கைம்மாறிலேனே. 6

551 பொங்கியபாற்கடல்பள்ளிகொள்வானைப்
புணர்வதோராசயினால் என்
கொங்கைகிளர்ந்துகுமைத்துக்குதுகலித்
தாவியையாகுலஞ்செய்யும்
அங்குயிலே! உனக்கென்னமறைந்துறைவு ?
ஆழியும்சங்குமொண்தண்டும்
தங்கியகையவனைவரக்கூவில் நீ
சாலத்தருமம்பெறுதி. 7

552 சார்ங்கம்வளையவலிக்கும்தடக்கைச்
சதுரன்பொருத்தமுடையன்
நாங்களெம்மிலிருந்தொட்டியகச்சங்கம்
நானுமவனுமறிதும்
தேங்கனிமாம்பொழில்செந்தளிர்கோதுஞ்
சிறுகுயிலே! திருமாலை
ஆங்குவிரைந்தொல்லைகூகிற்றியாகில்
அவனைநான்செய்வனகாணே. 8

553 பைங்கிளிவண்ணன்சிரீதரனென்பதோர்
பாசத்தகப்பட்டிருந்தேன்
பொங்கொளிவண்டிரைக்கும்பொழில்வாழ்குயிலே!
குறிக்கொண்டிதுநீகேள்
சங்கொடுசக்கரத்தான்வரக்கூவுதல்
பொன்வளைகொண்டுதருதல்
இங்குள்ளகாவினில்வாழக்கருதில்
இரண்டத்தொன்றேல்திண்ணம்வேண்டும். 9

554 அன்றுலகம்மளந்தானையுகந்து
அடிமைக்கணவன்வலிசெய்ய
தென்றலுந்திங்களுமூடறுத்தென்னை
நலியும்முறைமையறியேன்
என்றுமிக்காவிலிருந்திருந்து
என்னைத் ததர்த்தாதேநீயும் குயிலே
இன்றுநாராயணனைவரக்கூவாயேல்
இங்குத்தைநின்றும்துரப்பன். 10

555 விண்ணுறநீண்டடிதாவியமைந்தனை
வேற்கண்மடந்தைவிரும்பி
கண்ணுறவென்கடல்வண்ணனைக் கூவு
கருங்குயிலே! என்றமாற்றம்
பண்ணுறுநான்மறையோர்புதுவைமன்னன்
பட்டர்பிரான்கோதைசொன்ன
நண்ணுறுவாசகமாலைவல்லார்
நமோநாராயணாயவென்பாரே. (2) 11

மூன்றாம் திருமொழி -கோழியழைப்பதன்

கன்னியர் கண்ணன் கவர்ந்த கூறைகளை இரத்தல்

524 கோழியழைப்பதன் முன்னம் குடைந்துநீராடுவான்போந்தோம்
ஆழியஞ்செல்வனெழுந்தான் அரவணைமேல்பள்ளிகொண்டாய்
ஏழைமையாற்றவும்பட்டோம் இனியென்றும் பொய்கைக்குவாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே. (2) 1

525 இதுவென் புகுந்ததிங்கந்தோ! இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்?
மதுவின்துழாய்முடிமாலே! மாயனே! எங்களமுதே?
விதியின்மையாலது மாட்டோம் வித்தகப்பிள்ளாய்! விரையேல்
குதிகொண் டரவில்நடித்தாய்! குருந்திடைக்கூறைபணியாய். 2

526 எல்லே! ஈதென்னஇளமை? எம்மனைமார்காணிலொட்டார்
பொல்லாங்கீதென்றுகருதாய் பூங்குருந்தேறியிருத்தி
வில்லாலிலங்கை யழித்தாய்! நீ வேண்டியதெல்லாம்தருவோம்
பல்லாருங்காணாமேபோவோம் பட்டைப்பணித்தருளாயே. 3

527 பரக்கவிழித்தெங்கும்நோக்கிப் பலர்குடைந்தாடுஞ்சுனையில்
அரக்கநில்லாகண்ணநீர்கள் அலமருகின்றவாபாராய்
இரக்கமேலொன்றுமிலாதாய்! இலங்கையழித்தபிரானே
குரக்கரசாவதறிந்தோம் குருந்திடைக்கூறைபணியாய். 4

528 காலைக் கதுவிடுகின்ற கயலோடுவாளைவிரவி
வேலைப்பிடித்தென்னைமார்கள் ஓட்டிலென்னவிளையாட்டோ
கோலச்சிற்றாடைபலவுங்கொண்டு நீயேறியிராதே
கோலங்கரியபிரானே! குருந்திடைக்கூறைபணியாய். 5

529 தடத்தவிழ்தாமரைப்பொய்கைத் தாள்களெங்காலைக்கதுவ
விடத்தேளெறிந்தாலேபோல வேதனையாற்றவும்பட்டோம்
குடத்தையெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎங்கோவே
படிற்றையெல்லாம்தவிர்ந்து எங்கள்பட்டைப்பணித்தருளாயே. 6

530 நீரிலேநின்றயர்க்கின்றோம் நீதியல்லாதனசெய்தாய்
ஊரகம்சாலவுஞ் சேய்த்தால் ஊழியெல்லாமுணர்வானே!
ஆர்வமுனக்கேயுடையோம் அம்மனைமார்காணிலொட்டார்
போரவிடாயெங்கள்பட்டைப் பூங்குருந்தேறியிராதே. 7

531 மாமிமார்மக்களேயல்லோம் மற்றுமிங்கெல்லாரும்போந்தார்
தூமலர்க்கண்கள்வளரத் தொல்லையிராத்துயில்வானே
சேமமேலன்றிதுசாலச் சிக்கெனநாமிதுசொன்னோம்
கோமளஆயர்கொழுந்தே! குருந்திடைக்கூறைபணியாய். 8

532 கஞ்சன்வலைவைத்தவன்று காரிருளெல்லில்பிழைத்து
நெஞ்சுதுக்கஞ்செய்யப்போந்தாய் நின்றஇக்கன்னியரோமை
அஞ்சவுரப்பாள்அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபாலுண்ட மசிமையிலீ! கூறைதாராய். 9

533 கன்னியரோடெங்கள்நம்பி கரியபிரான்விளையாட்டை
பொன்னியல்மாடங்கள்சூழ்ந்த புதுவையர்கோன்பட்டன் கோதை
இன்னிசையால்சொன்னமாலை ஈரைந்தும்வல்லவர் தாம்போய்
மன்னியமாதவனோடு வைகுந்தம்புக்கிருப்பாரே. (2) 10

இரண்டாம் திருமொழி – நாமமாயிரம்

இடைப்பெண்கள் சிற்றில்சிதைக்கவேண்டா வென்று கண்ணனை வேண்டுதல்

514 நாமமாயிர மேத்தநின்ற நாராயணா! நரனே! உன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே
காமன்போதரு காலமென்றுபங்குனிநாள்கடை பாரித்தோம்
தீமைசெய்யும்சிரீதரா! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. (2) 1

515 இன்றுமுற்றும்முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்றுபாலகனாகி ஆலிலைமேல்துயின்றஎம்மாதியாய்!
என்றுமுன்றனக்கெங்கள்மேல் இரக்கம்மெழாததெம்பாவமே. 2

516 குண்டுநீருறைகோளரீ! மதயானைகோள்விடுத்தாய்! உன்னைக்
கண்டுமாலுறுவோங்களைக் கடைக்கண்களாலிட்டுவாதியேல்
வண்டல்நுண்மணல்தெள்ளி யாம்வளைக்கைகளால்சிரமப்பட்டோம்
தெண்டிரைக்கடற்பள்ளியாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே. 3

517 பெய்யுமாமுகில்போல்வண்ணா! உன்றன்பேச்சும்செய்கையும் எங்களை
மையலேற்றிமயக்க உன்முகம் மாயமந்திரந்தான்கொலோ?
நொய்யர்பிள்ளைகளென்பதற்கு உன்னை நோவநாங்களுரைக்கிலோம்
செய்யதாமரைக் கண்ணினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே. 4

518 வெள்ளைநுண்மணல்கொண்டு சிற்றில்விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களிழைத்தகோலம் அழித்தியாகிலும் உன்தன்மேல்
உள்ளமோடியுருகலல்லால் உரோடமொன்றுமிலோங்கண்டாய்
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தனகண்களல்லவே. 5

519 முற்றிலாதபிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில்மேலிட்டுக்கொண்டு நீசிறிதுண்டுதிண்ணென நாமது
கற்றிலோம் கடலையடைத்தரக்கர்குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப்பூசலாக்கியசேவகா! எம்மைவாதியேல். 6

520 பேதம்நன்கறிவார்களோடு இவைபேசினால்பெரிதிஞ்சுவை
யாதுமொன்றறியாதபிள்ளைகளோமை நீநலிந்தென்பயன்?
ஓதமாகடல்வண்ணா! உன்மணவாட்டிமாரொடுசூழறும்
சேதுபந்தம்திருத்தினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே. 7

521 வட்டவாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும்மண லுங்கொண்டு
இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரம்கையிலேந்தினாய்!
கட்டியும்கைத்தால் இன்னாமையறிதியேகடல்வண்ணனே. 8

522 முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய் எம்மைப்
பற்றிமெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப்பக்கம்நின்றவரெஞ்சொல்லார்? 9

523 சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் சிற்றில்நீசிதை யேல். என்று
வீதிவாய்விளை யாடுமாயர் சிறுமியர்மழ லைச்சொல்லை
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி புத்தூர்மன்விட்டு சித்தன்றன்
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை வின்றிவைகுந்தம் சேர்வரே. (2) 10

முதல் திருமொழி – தையொரு திங்கள்

கண்ணனிடம் சேர்க்கும்படி காமனைத் தொழுதல்

504 தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண்டலமிட்டுமாசிமுன்னாள்
ஐயநுண்மணற்கொண்டுதெருவணிந்து
அழகினுக்கலங்கரித்தனங்கதேவா!
உய்யவுமாங்கொலோவென்றுசொல்லி
உன்னையுமும்பியையும்தொழுதேன்
வெய்யதோர்தழலுமிழ்சக்கரக்கை
வேங்கடவற்கென்னைவிதிக்கிற்றியே. (2) 1

505 வெள்ளைநுண்மணற்கொண்டுதெருவணிந்து
வெள்வரைப்பதன்முன்னம்துறைபடிந்து
முள்ளுமில்லாச்சுள்ளியெரிமடுத்து
முயன்றுன்னைநோற்கின்றேன்காமதேவா
கள்ளவிழ்பூங்கணைதொடுத்துக்கொண்டு
கடல்வண்ணனென்பதோர்பேரெழுதி
புள்ளினைவாய்பிளந்தானென்பதோர்
இலக்கினில்புகவென்னையெய்கிற்றியே. 2

506 மத்தநன்னறுமலர்முருக்கமலர்
கொண்டுமுப்போதுமுன்னடிவணங்கி
தத்துவமிலியென்றுநெஞ்செரிந்து
வாசகத்தழித்துன்னைவைதிடாமே
கொத்தலர்பூங்கணைதொடுத்துக்கொண்டு
கோவிந்தனென்பதோர்பேரெழுதி
வித்தகன்வேங்கடவாணனென்னும்
விளக்கினில்புகவென்னைவிதிக்கிற்றியே. 3

507 சுவரில்புராண! நின்பேரேழுதிச்
சுறவநற்கொடிகளும்துரங்கங்களும்
கவரிப்பிணாக்களும்கருப்புவில்லும்
காட்டித்தந்தேன் கண்டாய்காமதேவா!
அவரைப்பிராயந்தொடங்கி என்றும்
ஆதரித்தெழுந்தவென்தடமுலைகள்
துவரைப்பிரானுக்கேசங்கற்பித்துத்
தொழுதுவைத்தேனொல்லைவிதிக்கிற்றியே. 4

508 வானிடைவாழுமவ்வானவர்க்கு
மறையவர்வேள்வியில்வகுத்தஅவி
கானிடைத்திரிவதோர்நரிபுகுந்து
கடப்பதும்மோப்பதும்செய்வதொப்ப
ஊனிடையாழிசங்குத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்தவென்தடமுலைகள்
மானிடவர்க்கென்றுபேச்சுப்படில்
வாழகில்லேன்கண்டாய்மன்மதனே! 5

509 உருவுடையாரிளையார்கள்நல்லார்
ஓத்துவல்லார்களைக்கொண்டு வைகல்
தெருவிடையெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவேநோற்கின்றேன்காமதேவா!
கருவுடைமுகில்வண்ணன்காயாவண்ணன்
கருவிளைபோல்வண்ணன் கமலவண்ணத்
திருவுடைமுகத்தினில்திருக்கண்களால்
திருந்தவேநோக்கெனக்கருள்கண்டய். 6

510 காயுடைநெல்லொடுகரும்பமைத்துக்
கட்டி யரிசியவலமைத்து
வாயுடைமறையவர்மந்திரத்தால்
மன்மதனே! உன்னைவணங்குகின்றேன்
தேயமுன்னளந்தவன்திரிவிக்கிரமன்
திருக்கைகளாலென்னைத்தீண்டும்வண்ணம்
சாயுடைவயிறுமென்தடமுலையும்
தரணியில்தலைப்புகழ்தரக்கிற்றியே. 7

511 மாசுடையுடம்பொடுதலையுலறி
வாய்ப்புரம்வெளுத்தொருபோதுமுண்டு
தேசுடைதிறலுடைக்காமதேவா!
நோற்கின்றநோன்பினைக்குறிக்கொள்கண்டாய்
பேசுவதொன்றுண்டிங்கெம்பெருமான்
பெண்மையைத்தலையுடைத்தாக்கும்வண்ணம்
கேசவநம்பியைக்கால்பிடிப்பாள்
என்னும் இப்பேறெனக்கருளுகண்டாய். 8

512 தொழுதுமுப்போதும்உன்னடிவணங்கித்
தூமலர்தூய்த்தொழுதேத்துகின்றேன்
பழுதின்றிப்பாற்கடல்வண்ணனுக்கே
பணிசெய்துவாழப்பெறாவிடில்நான்
அழுதழுதலமந்தம்மாவழங்க
ஆற்றவுமதுவுனக்குறைக்குங்கண்டாய்
உழுவதோரெருத்தினைநுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின்றித்துரந்தாலொக்குமே. 9

513 கருப்புவில்மலர்க்கணைக்காமவேளைக்
கழலிணை பணிந்து அங்கோர்கரியலற
மருப்பினையொசித்துப்புள்வாய்பிளந்த
மணிவண்ணற்கென்னைவகுத்திடென்று
பொருப்பன்னமாடம்பொலிந்துதோன்றும்
புதுவையர்கோன்விட்டுசித்தன்கோதை
விருப்புடையின்தமிழ்மாலைவல்லார்
விண்ணவர்கோனடிநண்ணுவரே. (2) 10

நாச்சியார் திருமொழி தனியன்கள்

திருக்கண்ணமங்கையாண்டான்அருளியது

கோலச்சுரிசங்கைமாயன்செவ்வாயின்குணம்வினவும்
சீலத்தனள் தென்திருமல்லிநாடி செழுங்குழல்மேல்
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும்மதிப்புடைய
சோலைக்கிளி அவள்தூயநற்பாதம்துணைநமக்கே.

அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி
மல்லிநாடாண்டமடமயில் – மெல்லியலாள்
ஆயர்குலவேந்தனாகத்தாள் தென்புதுவை
வேயர்பயந்த விளக்கு. 1

நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி தனியன்கள்
நாச்சியார் திருமொழி
முதல் திருமொழி – தையொரு திங்கள்
இரண்டாம் திருமொழி – நாமமாயிரம்
மூன்றாம் திருமொழி -கோழியழைப்பதன்
நான்காம் திருமொழி – தெள்ளியார் பலர்
ஐந்தாம் திருமொழி – மன்னு பெரும்புகழ்
ஆறாம் திருமொழி – வாரணமாயிரம்
ஏழாம் திருமொழி – கருப்பூரம் நாறுமோ
எட்டாம் திருமொழி – விண்ணீல மேலாப்பு
ஒன்பதாம் திருமொழி – சிந்தூரச் செம்பொடி
பத்தாம் திருமொழி – கார்க்கோடல் பூக்காள்
பதினொராம் திருமொழி : தாமுகக்கும்
பன்னிரண்டாம் திருமொழி : மற்றிருந்தீர்கட்கு
பதிமூன்றாம் திருமொழி : கண்ணனென்னும்
பதிநான்காம் திருமொழி : பட்டிமேய்ந்தோர்

திருப்பாவை

474 மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால்
நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்!
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்!
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான்
நாராயணனே நமக்கேபறைதருவான்
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய். (2) 1

475 வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு
செய்யும்கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிபாடி
நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம்
செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம்
ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய். 2

476 ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி
நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால்
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்ப
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி
வாங்க குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள்
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய். (2) 3

477 ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடார்த்தேறி
ஊழிமுதல்வனுருவம்போல்மெய்கறுத்து
பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து
தாழாதேசார்ங்கமுதைத்த சரமழைபோல்
வாழவுலகினில்பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய். 4

478 மாயனை மன்னுவடமதுரைமைந்தனை
தூயபெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர்குலத்தினில்தோன்றும் அணிவிளக்கை
தாயைக்குடல்விளக்கம்செய்த தாமோதரனை
தூயோமாய்வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்க
போயபிழையும் புகுதருவான்நின்றனவும்
தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய். 5

479 புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும்
மெள்ளவெழுந்து அரியென்றபேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். 6

480 கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து
வாசநறுங்குழலாய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ?
நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி
கேசவனைப்பாடவும் நீகேட்டேகிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய். 7

481 கீழ்வானம்வெள்ளென்று எருமைசிறுவீடு
மேய்வான்பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்
போவான்போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான்வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய
தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய். 8

482 தூமணிமாடத்துச் சுற்றும்விளக்கெரிய
தூபம்கமழத் துயிலணைமேல்கண்வளரும்
மாமான்மகளே! மணிக்கதவம்தாள்திறவாய்
மாமீர்! அவளையெழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந் துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன்மாதவன் வைகுந்தனென்றென்று
நாமம்பலவும் நவின்றேலோரெம்பாவாய். 9

483 நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்!
மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார்
நாற்றத்துழாய்முடி நாராயணன்நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ?
ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய். 10

484 கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து
செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத்தோழிமாரெல்லாரும்வந்து நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய். 11

485 கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்துமுலைவழியே நின்றுபால்சோர
நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன்தங்காய்!
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றி
சினத்தினால்தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும்நீவாய்திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்னபேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய். 12

486 புள்ளின்வாய்கீண்டானைப் பொல்லாவரக்கனை
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய்ப்
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்துநீராடாதே
பள்ளிக்கிடத்தியோ? பாவாய்! நீநன்நாளால்
கள்ளம்தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய். 13

487 உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள்
செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண்
செங்கற்பொடிக்கூரை வெண்பல்தவத்தவர்
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய். 14

488 எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும்
வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள்
வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோரெம்பாவாய். 15

489 நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப்பானே! மணிக்கதவம்தாள்திறவாய்
ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான்
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேயம்மா! நீ
நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். (2) 16

490 அம்பரமேதண்ணீரே சோறேயறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரமூடறுத்தோங்கி உளகளந்த
உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய்
செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய். 17

491 உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன்
நந்தகோபாலன்மருமகளே! நப்பின்னாய்!
கந்தம்கமழுங்குழலி! கடைதிறவாய்
வந்தெங்குங் கோழியழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால்குயிலினங்கள்கூவினகாண்
பந்தார்விரலி! உன்மைத்துனன்பேர்பாட
செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். (2) 18

492 குத்துவிளக்கெரிய கோட்டுக்கால்கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறி
கொத்தலர்பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்
மைத்தடங்கண்ணினாய்! நீஉன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோரெம்பாவாய். 19

493 முப்பத்துமூவ ரமரர்க்குமுன்சென்று
கப்பம்தவிர்க்கும்கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம்கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்னமென்முலைச் செவ்வாய்ச்சிறுமருங்குல்
நப்பின்னைநங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும்தட்டொளியும் தந்துஉன்மணாளனை
இப்போதே எம்மைநீராட்டேலோரெம்பாவாய். 20

494 ஏற்றகலங்கள் எதிர்பொங்கிமீதளிப்ப
மாற்றாதேபால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான்மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார்உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண்
ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே
போற்றியாம்வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய். 21

495 அங்கண்மாஞாலத்தரசர் அபிமான
பங்கமாய்வந்து நின்பள்ளிக்கட்டிற்கீழே
சங்கமிருப்பார்போல் வந்துதலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச்செய்த தாமரைப்பூப்போலே
செங்கண்சிறுச்சிறிதே எம்மேல்விழியாவோ?
திங்களும்ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கணிரண்டும்கொண்டு எங்கள்மேல்நோக்குதியேல்
எங்கள்மேல்சாபம் இழிந்தேலோரெம்பாவாய். 22

496 மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனேபோந்தருளிக்! கோப்புடைய
சீரியசிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியமாராய்ந்தரு ளேலோரெம்பாவாய். (2) 23

497 அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத்தென்லிங்கைசெற்றாய்! திறல்போற்றி
பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ்போற்றி
கன்றுகுணிலாஎறிந்தாய்! கழல்போற்றி
குன்றுகுடையாவெடுத்தாய்! குணம்போற்றி
வென்றுபகைகெடுக்கும் நின்கையில்வேல்போற்றி
என்றென்றுன்சேவகமே ஏத்திப்பறைகொள்வான்
இன்றுயாம்வந்தோம் இரங்கேலோரெம்பாவாய். (2) 24

498 ஒருத்திமகனாய்ப்பிறந்து ஓரிரவில்
ஒருத்திமகனாய் ஒளித்துவளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்குநினைந்த
கருத்தைப்பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில்
நெருப்பென்னநின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்துவந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்கசெல்வமும் சேவகமும்யாம்பாடி
வருத்தமும்தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய். 25

499 மாலே! மணிவண்ணா! மார்கழிநீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்கமுரல்வன
பாலன்னவண்ணத்து உன்பாஞ்சசன்னியமே
போல்வனசங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோலவிளக்கே கொடியேவிதானமே
ஆலினிலையாய்! அருளேலோரெம்பாவாய். 26

500 கூடாரைவெல்லும்சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறும்சம்மானம்
நாடுபுகழும் பரிசினால்நன்றாகச்
சூடகமேதோள்வளையே தோடேசெவிப்பூவே
பாடகமேயென்றனைய பல்கலனும்யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னேபாற்சோறு
மூடநெய்பெய்து முழங்கைவழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய். (2) 27

501 கறவைகள்பின்சென்று கானம்சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிபெறுந்தனை புண்ணியம்யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல்நமக்கு இங்கொழிக்கவொழியாது
அறியாதபிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா! நீதாராய் பறையேலோரெம்பாவாய். (2) 28

502 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச்சேவித்து உன்
பொற்றாமரையடியே போற்றும்பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்துண்ணுங் குலத்தில் பிறந்து நீ
குற்றேவலெங்களைக் கொள்ளாமற்போகாது
இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கேநாமாட்செய்வோம்
மற்றைநம்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய். (2) 29

503 வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனை
திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி
அங்கப்பறைகொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள்
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய். (2) 30

ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள்

பராசர பட்டர் அருளிச்செய்த்து

நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்தம் உத்போத்ய க்ருக்ஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தமத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய:

உய்யக்கொண்டார் அருளிச்செய்த்து

அன்னவயற்புதுவைஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! தொல்பாவை
பாடிஅருளவல்லபல்வளையாய்! நாடி நீ
வேங்கடவற்குகென்னைவிதியென்றவிம்மாற்றம்
நாம்கடவாவண்ணமேநல்கு.

நான்காம் திருமொழி – சென்னியோங்கு

எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார் தாம் பெற்ற நன்மைகளைக் கூறி உகத்தல்

463) சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய்! உலகு
தன்னைவாழநின்றநம்பீ! தாமோதரா! சதிரா!
என்னையும்என்னுடைமையையும் உன்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே? (2)

464) பறவையேறுபரம்புருடா! நீஎன்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றிப் பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே.

465) எம்மனா! என்குலதெய்வமே! என்னுடைய நாயகனே!
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்?
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோ டித் தூறுகள்பாய்ந்தனவே.

466) கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள்சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே.

467) பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா! என்னிருடீகேசா! என்னுயிர்க்காவலனே!

468) உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ!
என்னிடைவந்துஎம்பெருமான்! இனியெங்குப்போகின்றதே?

469) பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்! என்றென்றுஉன்வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே. (2)

470) அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்!
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே.

471) பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே! தனியுலகே! என்றென்று
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2)

472) தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி!
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2)

473) வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2)

மூன்றாம் திருமொழி – துக்கச்சுழலைய

(திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்)

453) துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே?
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்
சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். (2)

454) வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய்!

455) உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்! (2)

456) காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்
தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படுத்தாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!

457) காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா
மாலுகளாநிற்கும்என்மனனே! உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய்!

458) எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்
திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்!

459) அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சேலென்றுகைகவியாய்
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!

460) எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய்!

461) அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே?
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!

462) சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. (2)

இரண்டாம் திருமொழி – நெய்க்குடத்தை

தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை யகலும்படி கூறுதல்

443) நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள்! காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2)

444) சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி
வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார்
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்
பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே.

445) வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி
கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப்
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே.

446) மங்கியவல்வினைநோய்காள்! உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே.

447) மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்!
பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே.

448) உற்றவுறுபிணிநோய்காள்! உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள்! உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே.

449) கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே.

450) ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே.

451) உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே! சங்கே!
அறவெறிநாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே!
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்!
பறவையரையா! உறகல் பள்ளியறைக்குறிக்கொண்மின். (2)

452) அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து
பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. (2)

முதல் திருமொழி – வாக்குத்தூய்மை

தன்தாழ்வைக் கூறுதல்

433) வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா! உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா! கருளக்கொடியானே. (2)

434) சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையானே!
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே!

435) நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா! என்னும்இத்தனையல்லால்
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப்
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே!
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா! என்பன்
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே.

436) நெடுமையால்உலகேழுமளந்தாய்!
நின்மலா! நெடியாய்! அடியேனைக்
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே!

437) தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம்
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி
கோட்டுமண்கொண்டகொள்கையினானே!
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே!

438) கண்ணா! நான்முகனைப்படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே.

439) வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே.

440) வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே! மதுசூதா!
கண்ணனே! கரிகோள்விடுத்தானே!
காரணா! களிறட்டபிரானே!
எண்ணுவாரிடரைக்களைவானே!
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே!
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே!

441) நம்பனே! நவின்றேத்தவல்லார்கள்
நாதனே! நரசிங்கமதானாய்!
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய்! ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே.
காரணா! கடலைக்கடைந்தானே!
எம்பிரான். என்னையாளுடைத்தேனே!
ஏழையேனிடரைக்களையாயே.

442) காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரதகவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. (2)

ஐந்தாம் திருமொழி – ஆசைவாய்

பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு கிதோபதேசம் செய்தல்

371) ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
கேசவா! புருடோ த்தமா! என்றும்
கேழலாகியகேடிலீ! என்றும்
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே. (2)

372) சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே.

373) சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம்
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.

374) மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறிக்
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
மூலமாகியஒற்றையெழுத்தை
மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
வேலைவண்ணனைமேவுதிராகில்
விண்ணகத்தினில்மேவலுமாமே.

375) மடிவழிவந்துநீர்புலன்சோர
வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
கடைவழிவாரக்கண்டமடைப்பக்
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
இருடீகேசனென்றேத்தவல்லீரே.

376) அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
சங்கம்விட்டவர்கையைமறித்துப்
பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனைமார்பில்
தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமஞ்சாதிப்பார்க்கு
என்றுஞ்சாதிக்கலாமே.

377) தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றிப்
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
மன்னவன்மதுசூதனனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே.

378) கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
நரிப்படைக்குஒருபாகுடம்போலே
கோடிமூடியெடுப்பதன்முன்னம்
கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
கூடியாடியஉள்ளத்தரானால்
குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே.

379) வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே.

380) செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
பத்தராயிறந்தார்பெறும்பேற்றைப்
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
சித்தம்நன்கொருங்கித்திருமாலைச்
செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தை பெறுவர்தாமே. (2)

பத்தாம் திருமொழி – துப்புடையாரை

அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.

423) துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால்
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே. (2)

424) சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே!
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

425) எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே!
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

426) ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே!
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா!
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

427) பையரவினணைப் பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி!
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை
வையமனிசரைப்பொய்யென்றெண்ணிக்
காலனையும்உடனேபடைத்தாய்
ஐய! இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

428) தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்!
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அண்ணலே! நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

429) செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே! எம்மானே!
எஞ்சலிலென்னுடையின்னமுதே!
ஏழுலகுமுடையாய்! என்னப்பா!
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

430) நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன்
வானேய்வானவர்தங்களீசா!
மதுரைப்பிறந்தமாமாயனே! என்
ஆனாய்! நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

ஒன்பதாம் திருமொழி – மரவடிய

திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை -2

412) மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்
துலகாண்டதிருமால்கோயில்
திருவடிதன்திருவுருவும் திருமங்கை
மலர்கண்ணும்காட்டிநின்று
உருவுடையமலர்நீலம் காற்றாட்ட
ஓசலிக்கும்ஒளியரங்கமே. (2)

413) தன்னடியார்திறத்தகத்துத் தாமரை
யாளாகிலும்சிதகுரைக்குமேல்
என்னடியார்அதுசெய்யார் செய்தாரேல்
நன்றுசெய்தாரென்பர்போலும்
மன்னுடையவிபீடணற்கா மதிளிலங்கைத்
திசைநோக்கிமலர்கண்வைத்த
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே (2)

414) கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான்
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே.

415) பதினாறாமாயிரவர் தேவிமார்
பணிசெய்ய துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில்
புதுநாண்மலர்க்கமலம் எம்பெருமான்
பொன்வயிற்றில்பூவேபோல்வான்
பொதுநாயகம்பாவித்து இருமாந்து
பொன்சாய்க்கும்புனலரங்கமே.

416) ஆமையாய்க்கங்கையாய் ஆழ்கடலா
யவனியாய்அருவரைகளாய்
நான்முகனாய்நான்மறையாய் வேள்வியாய்
தக்கணையாய்த்தானுமானான்
சேமமுடைநாரதனார் சென்றுசென்று
துதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
பூமருவிப்புள்ளினங்கள் புள்ளரையன்
புகழ்குழறும்புனலரங்கமே.

417) மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில்
பத்தர்களும்பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும்பரந்தநாடும்
சித்தர்களும்தொழுதிறைஞ்சத்
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே.

418) குறட்பிரமசாரியாய் மாவலியைக்
குறும்பதக்கிஅரசுவாங்கி
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில்
எறிப்புடையமணிவரைமேல் இளஞாயி
றெழுந்தாற்போல்அரவணையின்வாய்
சிறப்புடையபணங்கள்மிசைச்
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே.

419) உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில்
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே.

420) தேவுடையமீனமாய்ஆமையாய்
ஏனமாய் அரியாய்க்குறளாய்
மூவுருவினிராமனாய்க் கண்ணனாய்
கற்கியாய்முடிப்பான்கோயில்
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி
பூவணைமேல்துதைந்தெழு செம்
பொடியாடிவிளையாடும்புனலரங்கமே.

421) செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளன்ஓடாத
படையாளன் விழுக்கையாளன்
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன்
திருவாளன்இனிதாகத் திருக்கண்கள்
வளர்கின்றதிருவரங்கமே. (2)

422) கைந்நாகத்திடர்கடிந்த கனலாழி
படையுடையான்கருதும்கோயில்
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல்
மெய்ந்நாவன்மெய்யடியான் விட்டுசித்தன்
விரித்ததமிழுரைக்கவல்லார்
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே. (2)

எட்டாம் திருமொழி – மாதவத்தோன்

திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை

402) மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே. (2)

403) பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்தவுறைப்பனூர்
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே.

404) மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்
உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்
திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை
பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே.

405) கூன்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய
கான்தொடுத்தநெறிபோகிக் கண்டகரைக்களைந்தானூர்
தேன்தொடுத்தமலர்ச்சோலைத் திருவரங்கமென்பதுவே.

406) பெருவரங்களவைபற்றிப் பிழக்குடையஇராவணனை
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
குருவரும்பக்கோங்கலரக் குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே.

407) கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமே
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்
தாழைமடலூடுரிஞ்சித் தவளவண்ணப்பொடியணிந்து
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே.

408) கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
பிழக்குடையஅசுரர்களைப் பிணம்படுத்தபெருமானூர்
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே.

409) வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்
எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி
மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே.

410) குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே.

411) பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானை
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே. (2)

ஏழாம் திருமொழி – தங்கையைமூக்கும

தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை

391) தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்
தடிந்த எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட
எம்புருடோ த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே
கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற
கண்டமென்னும்கடிநகரே. (2)

392) சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச்
சந்திரன்வெங்கதிரஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின்
மால்புருடோ த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும்
நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.

393) அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி
அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்
கெதிர்முகவசுரர்தலைகளையிடறும்
எம்புருடோ த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில்
சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.

394) இமையவர்இறுமாந்திருந்தரசாள
ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும்
நம்புருடோ த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும்
இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.

395) ழுவதோர்படையும்உலக்கையும்வில்லும்
ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய
மால்புருடோ த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம்
இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.

396) தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம்
சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை
மால்புருடோ த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர்
அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே.

397) விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி
மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனையுதைத்த
மால்புருடோ த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும்
அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே.

398) திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து
தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும்
அரிபுருடோ த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம்
நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை
கண்டமென்னும்கடிநகரே.

399) வடதிசைமதுரைசாளக்கிராமம்
வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய
எம்புருடோ த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடியத்
தலைப்பற்றிக்கரைமரஞ்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக்
கண்டமென்னும்கடிநகரே. (2)

400) மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால்
மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய
எம்புருடோ த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி
மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல்
கண்டமென்னும்கடிநகரே. (2)

401) பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து
உறைபுருடோ த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன்
விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை
தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே
குளித்திருந்தகணக்காமே. (2)

ஆறாம் திருமொழி – காசுங்கறையுட

பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்

381) காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
நாயகன் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2)

382) அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்!
செங்கணெடுமால் சிரீதரா! என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள்! நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

383) உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையுமுகந்து
எச்சம்பொலிந்தீர்காள்! எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்?
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

384) மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால்
நானுடை நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

385) மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா! கோவிந்தா! என்றுஅழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

386) நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா! தாமோதரா! என்று
நாடுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

387) மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்!
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

388) நம்பிபிம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

389) ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ
நாத்தகு நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.

390) சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2)

நான்காம் திருமொழி – நாவகாரியம்

திருக்கோட்டியூரை அனுபவிப்பவரைக் கொண்டாடியும், கொண்டாடாதவர்களை இழித்தும் கூறுதல்

360) நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்
தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத அப்
பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. (2)

361) குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய்
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே.

362) வண்ணநல்மணியும் மரதகமும்அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன் திருநாமங்கள்
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே.

363) உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்
நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர்
நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர்
பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ.(2)

364) ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்
தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.

365) பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்
ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய
பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே.

366) குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து
திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ.

367) நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே.

368) கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே.

369) காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு
தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
கேசவா! புருடோ த்தமா! கிளர்சோதியாய்! குறளா! என்று
பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே.

370) சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும்
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே. (2)

மூன்றாம் திருமொழி – உருப்பிணிநங்க

திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு

349) உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2)

350) கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்
வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை
செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே.

351) மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து
கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை
புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று
பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே.

352) மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த
காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை
கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப்
பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே.

353) பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை
அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை
குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. (2)

354) பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக
தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே.

355) கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்
இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை
கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே.

356) எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று
திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே.

357) கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே.

358) ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2)

359) மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. (2)

இரண்டாம் திருமொழி – அலம்பாவெருட்ட

திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு

338) அலம்பாவெருட்டாக்கொன்று திரியுமரக்கரை
குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2)

339) வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்து பல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர்த் தென்திருமாலிருஞ்சோலையே.

340) தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரை
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
எக்காலமும்சென்று சேவித்திருக்குமடியரை
அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே.

341) ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே.

342) ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை
கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே.

343) ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே.

344) மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை
கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே.

345) குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச்
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே.

346) சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை
இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்
சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே.

347) எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை
பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவாய்த்
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே.

348) மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே. (2)

முதல் திருமொழி – கதிராயிரம்

ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும், கண்டார் சிலருமாகக் கூறுதல்

328) கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்து அரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். (2)

329) நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க
வேந்தர்தலைவன்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர்.

330) கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய
சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர்.

331) தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட
மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்
ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்
வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர்.

332) நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர்.

333) பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க
வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்.

334) வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று
கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர்.

335) நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர்.

336) மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர்.

337) கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2)

பத்தாம் திருமொழி – நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்

318) நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்த
தறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க
செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். (2)

319) அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம்
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே!
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில்
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம்.

320) கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட
மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய
குலக்குமரா! காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப
இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம்.

321) வாரணிந்தமுலைமடவாய்! வைதேவீ! விண்ணப்பம்
தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ! கேட்டருளாய்
கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில்
சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம்.

322) மானமருமெல்நோக்கி! வைதேவீ! விண்ணப்பம்
கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப
பால்மொழியாய்! பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம்.

323) சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி
வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப
அத்திரமேயதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்.

324) மின்னொத்த_ண்ணிடையாய்! மெய்யடியேன்விண்ணப்பம்
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்.

325) மைத்தகுமாமலர்க்குழலாய்! வைதேவீ! விண்ணப்பம்
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான்
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைம்மோதிரமே.

326) திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
ஒக்குமால்அடையாளம் அனுமான்! என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே. (2)

327) வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு
சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம்
பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார்
ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2)

ஒன்பதாம் திருமொழி – என்னாதன்

க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் உந்திபறித்தல்

307) என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன் நாதன்காணவே தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2)

308) என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற தாசரதிதன்மையைப்படிப்பற.

309) உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான் வீரம்சிதைய தலையைச்
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற தேவகிசிங்கத்தைப்பாடிப்பற.

310) மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான்! என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற சீதைமணாளனைப்பாடிப்பற

311) பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற.

312) முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்துப் பரதநம்பிக்கு அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற.

313) காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற தூமணிவண்ணனைப்பாடிப்பற.

314) தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற.

315) மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற.

316) காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற.

317) நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. (2)

எட்டாம் திருமொழி – நல்லதோர் தாமரை

தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்

297) நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன்
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2)

298) ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ?

299) குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி
தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு
துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ?

300) ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றவசோதை
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ?

301) தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ?

302) வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ?
நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ?

303) அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை
பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ?
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ?

304) குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ!
நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன்
இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ?

305) வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ?
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ?

306) மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்
தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. (2)

ஏழாம் திருமொழி – ஐயபுழுதி

திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்

286) ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை செப்பனுடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. (2)

287) வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.

288) பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறாள்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே.

289) ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்?
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே.

290) நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடிவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே.

291) பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.

292) பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.

293) காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.

294) கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டு என்னவாணியம்? நம்மை வடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே.

295) பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே.

296) ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2)

ஆறாம் திருமொழி – நாவலம்

கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு

275) நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்கள்! இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே. (2)

276) இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூடக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தலவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே.

277) வானிளவரசுவைகுந்தக்குட்டன்
வாசுதேவன்மதுரைமன்னன் நந்த
கோனிளவரசுகோவலர்குட்டன்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
வானிளம்படியர்வந்துவந்தீண்டி
மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
தேனளவுசெறிகூந்தலவிழச்
சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே.

278) தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
கானகம்படிஉலாவியுலாவிக்
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே.

279) முன்நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தைமுடிப்பான், மூவுலகில்
மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில்
குழலினோசை செவியைப்பற்றிவாங்க
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து
கின்னரமிதுனங்களும் தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே.

280) செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
நம்பரமன்இந்நாள்குழலூதக்
கேட்டவர்கள் இடருற்றனகேளீர்
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே.

281) புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள் நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்தீண்டி
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே.

282) சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச்
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிப்ப
குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பிட்டுக்
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே.

283) திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே.

284) கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே.

285) குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக்
கோவிந்தனுடையகோமளவாயில்
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக்
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
குழலைவென்றகுளிர்வாயினராகிச்
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. (2)

ஐந்தாம் திருமொழி – அட்டுக்குவி

கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் பாதுகாத்தல்

264) அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறுமடங்கப்
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2)

265) வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்ட
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

266) அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணென்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரைப்
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

267) கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக்
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக்
கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

268) வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல்
அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

269) செப்பாடுடையதிருமாலவன் தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

270) படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத்
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

271) சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச்
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

272) வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

273) கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

274) அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த்
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2)

நான்காம் திருமொழி – தழைகளும்

காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்

254) தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி
நுழைவனர்நிற்பனராகி எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. (2)

255) வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப்
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து பல்லாயர்குழாம்நடுவே
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே.

256) சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோட
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பெண்நோக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே.

257) குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
கோவலனாய்க்குழலூதியூதி
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
என்றும்இவனையொப்பாரைநங்காய்
கண்டறியேன்ஏடி! வந்துகாணாய்
ஒன்றும்நில்லாவளைகழன்று
துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே.

258) சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணிக்
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே. (2)

259) சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும்
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்துப்
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ!

260) சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
தன்திருமேனிநின்றொளிதிகழ
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
கோலச்செந்தாமரைக்கண்மிளிரக்
குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே.

261) சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித்
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே.

8262) வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத்
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே.

263) விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
கண்ணன்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2)

மூன்றாம் திருமொழி – சீலைக்குதம்பை

கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்

244) சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை. (2)

245) கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா! கேசவா! பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்கச் சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனே! முத்தம்தா.

246) காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச்
சூடிவருகின்றதாமோதரா! கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா! நீராட்டமைத்து வைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான்.

247) கடியார்பொழிலணிவேங்கடவா! கரும்போரேறே! நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவிக்கக் கொள்ளாதேபோனாய்மாலே!
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய் நீஎம்பிரான்.

248) பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே!
எஞ்சிற்றாயர்சிங்கமே! சீதைமணாளா! சிறுக்குட்டச்செங்கண்மாலே!
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்துக் கலந்துடன்வந்தாய்போலும்.

249) அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா! நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய் ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய்.

250) பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா! உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்ஙனமாவர்களே.

251) கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு
காட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா! உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும்.

252) திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்
பண்ணேர்மொழியாரைக்கூவிமுளையட்டிப் பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செய்யக் கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா! நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு.

253) புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே. (2)

இரண்டாம் திருமொழி – அஞ்சனவண்ணனை

யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்

234) அஞ்சனவண்ணனை ஆயர்கோலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2)

235) பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே.

236) நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே.

237) வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானைக் கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே.

238) அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்துக் கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே.

239) மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே.

240) வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடித் தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே.

241) பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவப் புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே.

242) குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடைக் காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே.

243) என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாடப் புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே. (2)

முதல்திருமொழி – தன்னேராயிரம்

யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக் கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்

223) தன்னேராயிரம்பிள்ளைகளோடு
தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு
ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச
வாய்வைத்தபிரானே!
அன்னே! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே. (2)

224) பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்
போனேன் வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி
வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல் நுண்ணிடையாள்ஒருகன்னியை
வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

225) கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக்
குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரைப்
பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ!
உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

226) மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை
மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று
குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா! உன்னைப்புறம்பலபேசுவ
புத்தகத்துக்குளகேட்டேன்!
ஐயா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

227) முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயி
னோடு தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த
கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல
நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

228) கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக்
கற்றாநிரைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு
விளங்கனிவீழஎறிந்தபிரானே!
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச்
சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

229) மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு
வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச்
சுற்றும்தொழநின்றசோதி!
பொருட்டாயமிலேன்எம்பெருமான்!
உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்
கரட்டா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

230) வாளாவாகிலும்காணகில்லார்
பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து
நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி
கெட்டேன்! வாழ்வில்லை நந்தன்
காளாய்! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

231)தாய்மார்மோர்விற்கப்போவர்
தமப்பன்மார்கற்றாநிரைப்பின்புபோவர்
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களை
நேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து
கண்டார்கழறத்திரியும்
ஆயா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

232) தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச்
சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை
மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்
உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மந்தரவே.

233) கரார்மேனிநிறத்தெம்பிரானைக்
கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான்
அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசை மாலைவல்லார்
இருடீகேசனடியாரே. (2)

பத்தாம் திருமொழி – ஆற்றிலிருந்து

ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்

213) ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும். (2)

214) குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்.

215) தடம்படுதாமரைப் பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்.

216) தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்.

217) ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்
காப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்.

218) தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்.

219) மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்.

220) தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்.

221) வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்.

222) அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லைப் புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2)

ஒன்பதாம் திருமொழி – வெண்ணெய்விழுங்கி

வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்

202) வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம் உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய். (2)

203) வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ! வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்துக்
காகுத்தநம்பீ! வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்!
அஞ்சனவண்ணா! அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே.

204) திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ? அசோதாய்!
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே.

205) கொண்டல்வண்ணா! இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய்! இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா! இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மமென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான்கற்றகல்விதானே.

206) பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.

207) போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயோ!
குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா!
வேதப்பொருளே! என்வேங்கடவா!
வித்தகனே! இங்கேபோதராயே.

208) செந்நெலரிசிசிறுபருப்புச்
செய்த அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே.

209) கேசவனே! இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா! இங்கேபோதராயே.

210) கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே.

211) சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சூழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே.

212) வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே. (2)

எட்டாம் திருமொழி – இந்திரனோடு

கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்

192) இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதுரர்கள்வெள்ளறைநின்றாய்
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே! காப்பிடவாராய். (2)

193) கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்!
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்!
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய்.

194) செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்!
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்!
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான்! காப்பிடவாராய்.

195) கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே! வெள்ளறைநின்றாய்! கண்டாரோடேதீமைசெய்வாய்!
வண்ணமேவேலையதொப்பாய்! வள்ளலே! காப்பிடவாராய்.

196) பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான்! நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய்! ஞானச்சுடரே! உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்திச் சொப்படக்காப்பிடவாராய்.

197) கஞ்சன்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்!
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே! காப்பிடவாராய்.

198) கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே! நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்!
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே. காப்பிடவாராய்.

199) இன்பமதனைஉயர்த்தாய்! இமையவர்க்குஎன்றும்அரியாய்!
கும்பக்களிறட்டகோவே! கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே!
செம்பொன்மதிள்வெள்ளறையாய்! செல்வத்தினால்வளர்பிள்ளாய்!
கம்பக்கபாலிகாண்அங்குக் கடிதோடிக்காப்பிடவாராய்.

200) இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய்!
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய்.

201) போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே. (2)

ஏழாம் திருமொழி – ஆனிரை

கண்ணனைப் பூச்சூட அழைத்தல்

182) ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகிப் பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே. செண்பகப்பூச்சூட்டவாராய். (2)

183) கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாய்! உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்!
திருவுடையாள்மணவாளா! திருவரங்கத்தேகிடந்தாய்!
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்.

184) மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய்! நீள்திருவேங்கடத்துஎந்தாய்!
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய்.

185) தெருவின்கண்நின்று இளவாய்ச்சிமார்களைத் தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ! உகந்திவைசூட்டநீவாராய்.

186) புள்ளினைவாய்பிளந்திட்டாய்! பொருகரியின் கொம்பொசித்தாய்!
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்!
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய்.

187) எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்காண்நம்பி!
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்!
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே! புன்னைப்பூச்சூட்டவாராய்.

188) குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே!
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா!
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்!
குடந்தைக்கிடந்தஎம்கோவே! குருக்கத்திப்பூச்சூட்டவாராய்.

189) சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்!
சாமாறுஅவனைநீயெண்ணிச் சக்கரத்தால்தலைகொண்டாய்!
ஆமாறறியும்பிரானே! அணியரங்கத்தேகிடந்தாய்!
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய்! இருவாட்சிப்பூச்சூட்டவாராய்.

190) அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய். தூமலராள் மணவாளா!
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்!
கண்டுநான்உன்னையுகக்கக் கருமுகைப்பூச்சூட்டவாராய்.

191) செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே. (2)

ஆறாம் திருமொழி – வேலிக்கோல்

காக்கையை கண்ணனுக்குக் கோல்கொண்டுவர விளம்புதல்

172) வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா. (2)

173) கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா.

174) கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.

175) ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவான்
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா.

176) சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால்
பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத்
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.

177) ஆலத்திலையான் அரவினணைமேலான்
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே பார்த்தற்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா.

178) பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட அக்
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா.

179) மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா.

180) தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா.

181) அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே.

ஐந்தாம் திருமொழி – பின்னைமணாளனை

கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்

162) பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை
முன்னையமரர் முதல்தனிவித்தினை
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2)

163) பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.

164) திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.

165) பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேய்முலையுண்டான் குழல்வாராய்அக்காக்காய்.

166) கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த பரமன்திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்து குழல்வாராய்அக்காக்காய்!
ஆழியான்தன் குழல்வாராய்அக்காக்காய்.

167) கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்குஅணியாகக் குழல்வாராய்அக்காக்காய்!
கோவிந்தன்தன் குழல்வாராய்அக்காக்காய்.

168) பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
வண்டொத்திருண்ட குழல்வாராய்அக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராய்அக்காக்காய்.

169) உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன்
கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால் குழல்வாராய்அக்காக்காய்!
தாமோதரன்தன் குழல்வாராய்அக்காக்காய்.

170) மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேராயிரத்தான் குழல்வாராய்அக்காக்காய்.

171) கண்டார்பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2)

நான்காம் திருமொழி – வெண்ணெயளைந்த

கண்ணனை நீராட அழைத்தல்

152) வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னைத் தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே! நாரணா! நீராடவாராய் (2)

153) கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய்! நீபிறந்ததிருவோணம்
இன்று, நீநீராடவேண்டும் எம்பிரான்! ஓடாதேவாராய்

154) பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா! மஞ்சனமாடநீவாராய்

155) கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே!
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும் நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே! நீராடவாராய்

156) அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ!
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான்! இங்கேவாராய்

157) எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே!
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ! மஞ்சனமாடநீவாராய்

158) கறந்தநற்பாலும் தயிரும் கடைந்துஉறிமேல்வைத்த வெண்ணெய்
பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே!
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய்.

159) கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லேன்நம்பீ! நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும் நாரணா! ஓடாதேவாராய்.

160) பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய்! நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே! என்மணியே! மஞ்சனமாடநீவாராய்.

161) கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்ன பாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே. (2)

மூன்றாம் திருமொழி – போய்ப்பாடு

பன்னிருநாமம்: காதுகுத்துதல்

139) போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா! உன்னைத்
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே!
கேசவநம்பீ! உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2)

140) வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா! இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே. திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா!

141) வையமெல்லாம்பெறும்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே!
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே! இங்கேவாராய்.

142) வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா! நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான்! இங்கேவாராய்

143) சோத்தம்பிரான் என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ? நம்பீ!
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே! திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே! நீஇங்கேவாராய்

144) விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
உன்வாயில்விரும்பியதனை நான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ!
கண்ணா! என்கார்முகிலே!
கடல்வண்ணா! காவலனே! முலையுணாயே

145) முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப்
பசுநிரைமேய்த்தாய்!
சிலையொன்றுஇறுத்தாய்! திரிவிக்கிரமா!
திருவாயர்பாடிப்பிரானே!
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே

146) என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ!
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே!
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே

147) மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக்
காணவேகட்டிற்றிலையே
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா! உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே

148) காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா! என்தன்கண்ணே

149) கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே! எங்களமுதே
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா! இங்கேவாராய்

150) வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ! முன்வஞ்சமகளைச்
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா! இங்கேவாராய்

151) வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே (2)

இரண்டாம் திருமொழி – அரவணையாய்

கண்ணனை முலையுண்ண அழைத்தல்

128) அரவணையாய்! ஆயரேறே! அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ!
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்துத் திளைத்துதைத்துப்பருகிடாயே. (2)

129) வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான்! நீ பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே.

130) தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா!
உந்தையார்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா! நான்சுரந்தமுலையுணாயே.

131) கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே! ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய்! முலையுணாயே.

132) தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா!
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே! அமர்ந்துவந்துஎன்முலையுணாயே.

133) மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய்! உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்!
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே. (2)

134) பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா! நீமுலையுணாயே.

135) இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய் உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.

136) அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்பத் தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம! விம்ம
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே! முலையுணாயே.

137) ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயைப் பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா! நீமுலையுணாயே.

138) வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே. (2)

முதல்திருமொழி – மெச்சூது

பூச்சிகாட்டி விளையாடுதல்

118) மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான். (2)

119) மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

120) காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

121) இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

122) சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

123) செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

124) தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

125) கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத்
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

126) பதகமுதலைவாய்ப் பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா! கண்ணா! வென்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.

127) வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. (2)

ஒன்பதாம் திருமொழி – வட்டநடுவே

தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்

108) வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத்துளிக்க என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான். (2)

109) கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.

110) கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்.

111) நாந்தகமேந்திய நம்பிசரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.

112) வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான் வாமனன்என்னைப்புறம்புல்குவான்.

113) சத்திரமேந்தித் தனியொருமாணியாய்
உத்தரவேதியில் நின்றஒருவனை
கத்திரியர்காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான் பாரளந்தான்என்புறம்புல்குவான்.

114) பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான் ஆழியான்என்னைப்புறம்புல்குவான்.

115) மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடிக் குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான் எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்.

116) கற்பகக்காவு கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவனென்று இந்திரன்காவினில்
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான் உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்.

117) ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (2)

எட்டாம் திருமொழி – பொன்னியல்

அணைத்துக்கொள்ள அழைத்தல்: அச்சோப்பருவம்

97) பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை சலன்சலனென்றிட
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ. (2)

98) செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ.

99) பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ ஆயர்பெருமானே! அச்சோவச்சோ.

100) நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும் திருவுடம்பில்பூச
ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
ஏறவுருவினாய்! அச்சோவச்சோ எம்பெருமான்! வாராஅச்சோவச்சோ.

101) கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடைத் துச்சோதனனை
அழலவிழித்தானே! அச்சோவச்சோ ஆழியங்கையனே! அச்சோவச்சோ.

102) போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய். செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனிக் கரும்பெருங்கண்ணனே!
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ ஆயர்கள்போரேறே! அச்சோவச்சோ.

103) மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணைத் துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே! அச்சோவச்சோ சங்கமிடத்தானே! அச்சோவச்சோ.

104) என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன்
முன்னையவண்ணமேகொண்டு அளவாயென்ன
மன்னுநமுசியை வானில்சுழற்றிய
மின்னுமுடியனே! அச்சோவச்சோ வேங்கடவாணனே! அச்சோவச்சோ.

105) கண்டகடலும் மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ! என்று
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ மார்வில்மறுவனே! அச்சோவச்சோ.

106) துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
அன்னமதானானே! அச்சோவச்சோ அருமறைதந்தானே! அச்சோவச்சோ.

107) நச்சுவார்முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாடப் புதுவைக்கோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே. (2)

ஏழாம் திருமொழி – தொடர்சங்கிலிகை

தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்

86) தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. (2)

87) செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.

88) மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்தினில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ.

89) கன்னற்குடம்திறந்தாலொத்தூறிக் கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ.

90) முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ.

91) ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ.

92) படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ.

93) பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ.

94) வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ.

95) திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ.

96) ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே (2).

ஆறாம் திருமொழி – மாணிக்கக்கிண்கிணி

கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்

75) மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி கருங்குழல் குட்டனே! சப்பாணி. (2)

76) பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாடத் தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி மாயவனே! கொட்டாய்சப்பாணி.

77) பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன். இலங்குபொற்றோட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி ஆழியங்கையனே! சப்பாணி.

78) தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
வானிலாஅம்புலீ! சந்திரா! வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி குடந்தைக்கிடந்தானே! சப்பாணி.

79) புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே! கொட்டாய்சப்பாணி பற்பநாபா! கொட்டாய்சப்பாணி.

80) தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி தேவகிசிங்கமே! சப்பாணி.

81) பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி சார்ங்கவிற்கையனே! சப்பாணி.

82) குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி நேமியங்கையனே! சப்பாணி.

83) அளந்திட்டதூணை அவன்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி பேய்முலையுண்டானே! சப்பாணி.

84) அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி கார்முகில்வண்ணனே! சப்பாணி.

85) ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே. (2)

ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு

தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்

64) உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா!
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே!
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே!
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதிச்
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே. (2)

65) கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்!
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக்
கருதிவரைக்குடையாக்காலிகள் காப்பவனே!
ஆள! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

66) நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே1
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே! தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும் தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே! வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே!
அம்ம! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

67) வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே!
கானகவல்விளவின் காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும் கருநிறஎன்கன்றே!
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச் செல்லும்
ஆனை! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

68) மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம் உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும் உந்தியவெந்திறலோய்!
முத்தினிளமுறுவல் முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார் மொய்குழல்களலைய
அத்த! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

69) காயமலர்நிறவா! கருமுகில்போலுருவா!
கானகமாமடுவில் காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும் சுந்தரஎன்சிறுவா!
துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே!
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடிய தாளிணையாய்!
ஆய! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

70) துப்புடையார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே!
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப! எனக்குஒருகால் ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

71) உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள் கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர்தெற்றிவரப் பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே!
என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. (2)

72) பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின் நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.

73) செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும் தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும் மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும் தோள்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும் சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே.

74) அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே! ஆயர்கள்நாயகனே!
என்அவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. (2)

நான்காம் திருமொழி – தன் முகத்து

சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்

54) தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ!
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ. (2)

55) என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.

56) சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ! கடிதோடிவா.

57) சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா! சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்.

58) அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ!

59) தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.

60) பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.

61) சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ! நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்.

62) தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.

63) மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே. (2)

மூன்றாம் திருமொழி – மாணிக்கம் கட்டி

கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்

44) மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ. (2)

45) உடையார்கனமணியோடு ஒண்மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய்! அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே! தாலேலோ.

46) என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ தாமரைக்கண்ணனே! தாலேலோ.

47) சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே! தாலேலோ தேவகிசிங்கமே! தாலேலோ.

48) எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ தூமணிவண்ணனே! தாலேலோ.

49) ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய்! தாலேலோ சுந்தரத்தோளனே! தாலேலோ.

50) கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே! அழேல்அழேல்தாலேலோ குடந்தைக்கிடந்தானே! தாலேலோ.

51) கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய்! தாலேலோ நாராயணா! அழேல்தாலேலோ.

52) மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
ஐயா! அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே! தாலேலோ.

53) வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2)

இரண்டாம் திருமொழி – சீதக்கடல்

கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்

23) சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர்! வந்துகாணீரே. (2)

24) முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர்! வந்துகாணீரே.

25) பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்
கணைக்கால் இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.

26) உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே முகிழ்முலையீர்! வந்துகாணீரே.

27) பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குகளைவந்து காணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.

28) மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே.

29) இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப் பறித்துக் கொண்டோடும் பரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்துகாணீரே.

30) வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே ஒளியிழையீர்! வந்துகாணீரே.

31) அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்து
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவாகாணீரே ஒளிவளையீர்! வந்துகாணீரே.

32) பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

33) நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே சுரிகுழலீர்! வந்துகாணீரே.

34) மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்துகாணீரே.

35) வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.

36) எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக் கொண்டு
அந்தொண்டைவாயமுதாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

37) நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே மொய்குழலீர்! வந்துகாணீரே.

38) விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய் வந்து
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே கனவளையீர்! வந்துகாணீரே.

39)பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே பூண்முலையீர்! வந்துகாணீரே.

40) மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.

41) முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே நேரிழையீர்! வந்துகாணீரே.

42) அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே குவிமுலையீர்! வந்துகாணீரே.

43) சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத் தொன்றுவர்தாமே. (2)

முதல் திருமொழி – வண்ண மாடங்கள் கண்ணன்

கண்ணன் திருவவதாரச் சிறப்பு

13) வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் *
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் *
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட * 
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2)

14) ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் *
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்  
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று 
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே. 

15) பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் * 
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் *
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் * திரு 
வோணத்தான் உலகாளுமென்பார்களே. 

16) உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் *
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் *
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து * எங்கும் 
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.

17) கொண்டதாளுறி கோலக்கொடுமழு *
தண்டினர் பறியோலைச்சயனத்தர் *
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர் *
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார். 

18) கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் *
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் * 
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட *
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே. 

19) வாயுள்வையகம்கண்ட மடநல்லார் *
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் * 
பாயசீருடைப் பண்புடைப்பாலகன் *
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.

20) பத்துநாளும்கடந்த இரண்டாநாள் *
எத்திசையும் சயமரம்கோடித்து *
மத்தமாமலை தாங்கியமைந்தனை * 
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே. 

21) கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் *
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் *
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் *
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய். 

22) செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் *
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை *
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த * இப் 
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2) 

பெரியாழ்வார் திருமொழி

முதற் பத்து
முதல் திருமொழி – வண்ண மாடங்கள் கண்ணன்
இரண்டாம் திருமொழி – சீதக்கடல்
மூன்றாம் திருமொழி – மாணிக்கம் கட்டி
நான்காம் திருமொழி – தன் முகத்து
ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு
ஆறாம் திருமொழி – மாணிக்கக்கிண்கிணி
ஏழாம் திருமொழி – தொடர்சங்கிலிகை
எட்டாம் திருமொழி – பொன்னியல்
ஒன்பதாம் திருமொழி – வட்டநடுவே
இரண்டாம்பத்து
முதல்திருமொழி – மெச்சூது
இரண்டாம் திருமொழி – அரவணையாய்
மூன்றாம் திருமொழி – போய்ப்பாடு
நான்காம் திருமொழி – வெண்ணெயளைந்த
ஐந்தாம் திருமொழி – பின்னைமணாளனை
ஆறாம் திருமொழி – வேலிக்கோல்
ஏழாம் திருமொழி – ஆனிரை
எட்டாம் திருமொழி – இந்திரனோடு
ஒன்பதாம் திருமொழி – வெண்ணெய்விழுங்கி
பத்தாம் திருமொழி – ஆற்றிலிருந்து
மூன்றாம்பத்து
முதல்திருமொழி – தன்னேராயிரம்
இரண்டாம் திருமொழி – அஞ்சனவண்ணனை
மூன்றாம் திருமொழி – சீலைக்குதம்பை
நான்காம் திருமொழி – தழைகளும்
ஐந்தாம் திருமொழி – அட்டுக்குவி
ஆறாம் திருமொழி – நாவலம்
ஏழாம் திருமொழி – ஐயபுழுதி
எட்டாம் திருமொழி – நல்லதோர் தாமரை
ஒன்பதாம் திருமொழி – என்னாதன்
பத்தாம் திருமொழி – நெறிந்தகருங்குழல்
நான்காம்பத்து
முதல் திருமொழி – கதிராயிரம்
இரண்டாம் திருமொழி – அலம்பாவெருட்ட
மூன்றாம் திருமொழி – உருப்பிணிநங்க
நான்காம் திருமொழி – நாவகாரியம்
ஐந்தாம் திருமொழி – ஆசைவாய்
ஆறாம் திருமொழி – காசுங்கறையுட
ஏழாம் திருமொழி – தங்கையைமூக்கும
எட்டாம் திருமொழி – மாதவத்தோன்
ஒன்பதாம் திருமொழி – மரவடிய
பத்தாம் திருமொழி – துப்புடையாரை
ஐந்தாம்பத்து
முதல் திருமொழி – வாக்குத்தூய்மை
இரண்டாம் திருமொழி – நெய்க்குடத்தை
மூன்றாம் திருமொழி – துக்கச்சுழலைய
நான்காம் திருமொழி – சென்னியோங்கு

திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச் செய்தது 
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் 
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் 
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால் 
சொன்னார்கழற்கமலம்சூடினோம் – முன்னாள் 
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும் 
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து 

பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று 
ஈண்டியசங்கமெடுத்தூத – வேண்டிய 
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான் 
பாதங்கள்யாமுடையபற்று.

திருப்பல்லாண்டு – பெரியாழ்வார்

பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு

1) பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
பலகோடிநூறாயிரம் 
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் 
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. (2)

2) அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு *
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு * 
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு *
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே.(2)

3) வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின் *
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோம் *
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை *
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே. 

4) ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து *
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ * 
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று *
பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே.

5) அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை *
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு *
தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி *
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே.

6) எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி *
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் * திருவோணத்திருவிழவில் 
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை *
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே.

7) தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின் *
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம் *
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி 
பாய * சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

8) நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும் *
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் *
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல *
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.

9) உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு *
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் *
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் *
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 

10) எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட 
அந்நாளே * அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண் *
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து * ஐந்தலைய 
பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே. 

11) அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் * அபிமானதுங்கன் 
செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன் *
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி *
பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே. (2)

12) பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை * சார்ங்கமென்னும் 
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல் *
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று *
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே. (2)

பொது தனியன்கள்

வேதாந்த தேசிகன் தனியன் (1268–1370)
(ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் அருளிச்செய்த்து)
வடகலை ஸம்ப்ரதாயம்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷனம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்

மணவாளமாமுனிகள்தனியன் (1370–1443)
(அழகிய மணவாளன் அருளிச்செய்த்து)
தென்கலை ஸம்ப்ரதாயம்

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்

குரு பரம்பைரதனியன்
(கூரத்தாழ்வான் அருளிச்செய்த்து)
லஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

ஆழ்வார்கள் உடையவர்தனியன்
(ஸ்ரீபராசர பட்டர் அருளிச்செய்த்து)

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீபக்திஸார குலேசகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிஸ்ராந்

ஸ்ரீமத் பராங்குஸநிம் ப்ரணேதாஸ்மி நித்யம்

நம்மாழ்வார்தனியன்
(ஆளவந்தார் அருளிச்செய்த்து)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியேமந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபேதர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா

எம்பெருமானார்தனியன்
(கூரத்தாழ்வான் அருளிச்செய்த்து)

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ
ராமாநுஜஸ்ய சரெணள ஸரணம் ப்ரபத்யே

மயூர பந்தம்

பகை விலக, மந்திர, தந்திர, பில்லி, சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது.

வரதந திபநக ரசுமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழ முனிவருதி.

(பதம் பிரித்தது)

வர தந திப நகர சுமுக ஒரு குக வறிது தபு விரி விதி
மரகத அரி பரம துகள்இல் அசல விமல மழஎன் அல் இரிய
மரபு உறு குறுமுனிவர் உதி மயல் அசர மதி விரி விபுதகுரு
சுரபதி நவரச பரத திநகர மதுக மழ முனி வருதி.

மயூர பந்தம்

சஸ்திர பந்தம்

வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும், எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது
பாடல்: 55 எழுத்து, சித்திரம்: 30 எழுத்து

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால் வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேலவா.

(பதம் பிரித்தது)

வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா
மாலை பூண் ஏம திற மால் வலர் தே – சாலவ
மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம்
வா பாதம் தா வேலவா

சஸ்திர பந்தம்

பாம்பன் சுவாமி: முருகனிடம் பக்தி கொண்ட துறவி

தமிழ்நாட்டின் பாம்பனில் 1848 இல் பிறந்த பாம்பன் சுவாமி, முதலில் அப்பாவு என்று பெயரிடப்பட்டவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திறமை பெற்ற சைவக் குழந்தை. 13 வயதில், முருகப்பெருமானின் தரிசனம் அவருக்கு பக்தி கவிதைகள் எழுதத் தூண்டியது. ஆழ்ந்த ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற அவர், திருமணத்திற்குப் பிறகும், பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் தன்னை அர்ப்பணித்து, புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.

சுவாமியின் அசைக்க முடியாத நம்பிக்கை பல அதிசய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது. அவரது புகழ்பெற்ற பாடல் சண்முக கவசம் பக்தர்களை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது பஞ்சாமிர்த வர்ணம் முருகனின் இருப்பை அழைக்கிறது. இரக்கமுள்ள துறவி, அவர் பக்தியைத் தூண்டினார் மற்றும் தன்னலமற்ற செயல்களைச் செய்தார், பெரும்பாலும் தெய்வீக தரிசனங்களால் வழிநடத்தப்பட்டார்.

பாம்பன் சுவாமி சவால்களை எதிர்கொண்டார், ஆனால் எப்போதும் முருகனின் அருளை நம்பியிருந்தார். நோய்வாய்ப்பட்டபோது, ​​அவர் ஜெபத்தின் மூலம் அற்புதமாக குணமடைந்தார். தனிப்பட்ட இழப்புகள் இருந்தபோதிலும், அவர் தனது ஆன்மீக பணியில் கவனம் செலுத்தி, தனிமையில் இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளர், சுவாமி தமிழில் 6,666 கவிதைகள் மற்றும் பல படைப்புகளை இயற்றினார், முருகனை 130 க்கும் மேற்பட்ட வடிவங்களில் புகழ்ந்தார்.

அவர் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தினார், அவற்றை புனித மொழிகளாகக் கருதினார். அடக்கத்திற்கு பெயர் பெற்ற அவர் எளிமையாக வாழ்ந்தார், அடிக்கடி மௌன வழிபாடு செய்தார். 1929 இல், சுவாமி சமாதியில் நுழைந்தார், பக்தி மற்றும் ஞானத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றார்.

பாம்பன் சுவாமியின் வாழ்க்கை முருகன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது, எண்ணற்ற பக்தர்களை ஊக்குவிக்கிறது. அவரது போதனைகள் மற்றும் பாடல்கள் ஆன்மீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தொடர்ந்து வழங்குகின்றன, உண்மையான தேடுபவர்களுக்கு தெய்வீக அருள் எப்போதும் கிடைக்கும் என்பதை நிரூபிக்கிறது.

Pamban Swami: A Saint Devoted to Lord Murugan

Born in 1848 in Pamban, Tamil Nadu, Pamban Swami, originally named Appavu, was a Saivite child gifted in Tamil and English. At 13, he had a vision of Lord Murugan, inspiring him to write devotional poems. Known for his deep spirituality, he lived a saintly life even after marriage, dedicating himself to prayers and pujas.

Swami’s unwavering faith led to many miraculous events. His famous hymn Shanmuga Kavacam is believed to protect devotees from harm, and his Pancamrita Varnam invokes Lord Murugan’s presence. A compassionate saint, he inspired devotion and performed selfless acts, often guided by divine visions.

Pamban Swami faced challenges but always relied on Lord Murugan’s grace. When ill, he was miraculously cured through prayer. Despite personal losses, he remained detached, focusing on his spiritual mission. A prolific writer, Swami composed 6,666 poems and several works in Tamil, praising Murugan in over 130 forms.

He emphasized harmony between Tamil and Sanskrit, considering them sacred languages. Known for his humility, he lived simply, often performing silent worship. In 1929, Swami entered samadhi, leaving behind a legacy of devotion and wisdom.

Pamban Swami’s life exemplifies unwavering faith in Lord Murugan, inspiring countless devotees. His teachings and hymns continue to offer spiritual guidance and protection, proving that divine grace is always available to sincere seekers.

இரத பந்தம்

வாகன விபத்துக்கள் ,விபத்துக்கள் பற்றிய பயம் தவிர்க்கவும், பயணத்தின்போது பாராயணம் செய்யவும் ஏற்றது

இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ
டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் – பொருவாச்சீர்
தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா
வாசிறந்த மாவின் பருள்

(பதம் பிரித்தது)

இருள் பொருதா அம்பலச் சித்து என்னும் முருகா நீள்
திரு விண்ணோர் தேடும் மருந்தே மாண்பு – ஒருவாச்சீர்
தேசுதரும் செந்திநறும் தீர்த்த விறல் ஓங்கு சிதா
வா சிறந்த மா இன்பு அருள்

இரத பந்தம்

சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2


ஓம் ஸ்ரீ குரு குஹாய நமஹ:
ஓம் குஹப்ரமணே நமஹ
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 2

பாடல் – பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(அடியொன்றுக்கு முப்பது அக்கரம்)

திருச்சிற்றம்பலம்

சந்தம்: தானத் தன்னன தானன தத்தனா

சந்திர சேகரன் மைந்தனெ னத்திகழ் கந்தவேள்
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
சுந்தர நீடம லிந்துள்ள மேதிகள் யாவுமே
தும்பிக ணாயக மாயவி ரும்பல்க ளாயவே
மந்திர நாடிவ ருங்கற வைக்கணம் யாவுமே
மங்களம் விஞ்சிய விண்ணவர் மண்ணர்பு கழ்ந்திடும்
இந்திரன் மாதவர் யாரும தித்திடு தேனுவே
என்பன வாயகு கன்பத நாடுய ரன்பரே (1)

மானில வண்டமு நீர்நிலை யண்டமு மாணறா
வாளன லண்டமு மாவளி யண்டமு மோசைசால்
வானிலை யண்டமு மாயபல் லாயிர கோடியு
மாசறு தன்பெரு மேனியி ருந்திட நின்றதே
சானவி யின்சுத னேயவ னந்தமில் கந்தவேேள்
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
தேனலர் தண்ணிழ றந்திடு தாவரம் யாவுமே
தேவர வாவுபல் கற்பக மாதிய வாயவே (2)

நீரென வெந்தழ லென்னவி டந்தரு வானென
நீலென வெண்மதி செங்கதிர் புற்கல னேயெனப்
பாரென வுள்ளவொ ரெட்டுந லங்கிள ரெட்டுருப்
பண்ணவ னண்டருண் மின்னுப ராபர னெம்பிரான்
தாரக மேனிய னென்னநி லாமொரு கந்தவேள்
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
சீரணை கிள்ளைபி கங்கொடி யாதிக கங்கடாந்
தேவர்து றக்கவ னப்புறு போகில்க ளாயவே (3)

திண்ணிய பொன்னெயி லோடுவி ளங்கம ராபதிச்
செல்வனை நான்மறை தேரெழில் வேதனை மற்றைய
விண்ணுறை வோரைய டக்கிவி ருத்தியு மாயுளும்
விஞ்சிய சூரனு ரம்பிளந் தச்சுரர் வாழவோர்
தண்ணளி செய்தப ரம்பொரு ளாகிய கந்தவேள்
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
பண்ணிய வில்லமெ லாமுயர் சித்திர மாளிகை
பத்திர சொர்க்கவி லாசமி குந்தளி யாயவே (4)

பாட்டளி மூசுந றுந்துண ரிந்துள மாலைமா
பங்கய முல்லைசு கந்தவ லங்கல ணிந்தவேள்
தாட்டிகர் மேவிய சென்னைவ ளம்பதி சாரொரு
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
கோட்டமி லாமன முற்றகு லாலரு மற்றைய
கோதணை யாதவர் யாவரு மேனெறி யாரருள்
ஈட்டுமி லேசர்கள் மாதவர் சித்தர்க ளாவரே
யெம்பெரு மான்முரு கன்கழல் பாடுநன் னாவரே (5)

நீலமும் வெள்ளையு மஞ்சளு மம்மரி செம்மையு
நெட்டுடன் மீதுமி ளிர்ந்திட வேவரு மஞ்ஞையில்
வேலணை கைகளு மாறுமு கங்களு நூபுர
மேயப தங்களு மின்னவெ ழுந்தருள் கந்தவேள்
சாலவு நல்லளி யுற்றகு லாலர்செய் கோயிலார்
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
தூலமு மாவியு முய்ந்திட வுட்கொளு ணாவெலாஞ்
சோதியி லேகர்வி ரும்பிய ருந்தமு தாகுமே (6)

ஆதவ னம்புலி நன்குக வித்திட வெண்குடை
யண்டர்க ணாதனி ரட்டிட வொள்ளிய சாமரம்
ஏதமி லக்கினி தெற்கரி தெற்கணை பச்சிம
னேறுபு னற்பதி வாயுகு பேரெனெ டுங்கழு
மாதிற வீசனெ னுந்திசை நாதரு மற்றைய
வானவ ருந்தகு வூழிய மேசெய்ய வந்தசேய்
கோதறு சண்முக ஞானபு ரத்தமர் பெற்றியாற்
கூவல்கு ளங்களு மிங்குறு கங்கைக ளாயவே (7)

உண்முக வஞ்சக மாமலை போழொரு கொற்றவே
லொன்றுகை யானென வெங்கணு மாயவிர் கந்தவேள்
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
சார்தெரு வார்பல கற்க ளெலாமதி யுத்தம
வெண்மணி செம்மணி பொன்மணி சாமள மாதிபன்
மேன்மணி யாயவ வற்றினை யேநன்ம திப்பிடக்
கண்மதி யாளரை வம்மினெ னத்தமிழ் பாடுமின்
காவிய நாடக மின்னிசை செய்கவி வாணரே (8)

ஆருயி ருக்கருள் காரிய சத்தியெ னத்திக
ழாசறு வள்ளியொ டுந்திரு மந்திர மாதவர்
நாருடன் மெச்சறி வாமொரு சத்தியெ னுஞ்சுர
நங்கையொ டும்பெரு வன்மைய றாநவ வீரர்கள்
தாருட னஞ்சலி செயயவ யங்கொரு கந்தவேள்
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
கூருணர் வோடுறை வோர்குழை கொண்டுவரிச்சிறைக்
கோழியெ றிந்திடு செல்வர்க ளாய்நனி யுய்வரே (9)

தேவிப வானிகை யாமலர் நண்ணுறு தேனெனச்
செவ்வெரி நாளறு மங்கையர் பீர்நுகர் சேயென
ஆவிக ளுள்ளுறை யந்தரி யாமிபி ரானென
ஆயிர மம்பக மாமயி லேறயி லானெனத்
தாவில்பு கழ்க்கவி தேவென வேயவிர் கந்தவேள்
சண்முக ஞானபு ரத்தமர்ந் தானத னாலிவண்
மேவிந யப்பொடி ருப்பவர் யோகிக ளாவரே
மெய்யறி வோடிது பாடுந லத்தரும் வாழ்வரே (10)

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1


ஓம் ஸ்ரீ குரு குஹாய நமஹ:
ஓம் குஹப்ரமணே நமஹ
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1

பாடல் – கட்டளைக் கலிப்பா

(அடியொன்றுக்கு இருபத்திரண்டு அக்கரம்)

திருச்சிற்றம்பலம்

ஆதித் தன்மதி போன்மணி முத்தமா
ராணிப் பொன்முடி யாழிப தக்கமா
பூதிப் பொன்னடி சாரணி பொற்பவே
பூணற் கொன்னொடு சூரனு ரத்தையே
காதித் தன்னொரு வேலொட ருட்கணார்
கானச்சொண்மையர் சூழ்திரு வுற்றுளோன்
சூதுட் கின்னலி லாதவர் மிக்குவாழ்
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (1)

மாலிற் கன்னம தூரய னுக்குமா
மாணற் சென்னியை மாவடி யைக்கொடா
தாலிற் றென்முக மானவொ ருத்தனா
மாதிக் கம்மறை மூலமு ரைத்தகோ
வேலிற் கண்ணல கோசரன் வித்துவான்
வீரப் பொன்மயி லூர்திம றைக்குள்ளே
தோலிற் பன்முறை யார்பர வத்துவே
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (2)

காசைப் பன்மணி யாரணி சுட்டிவாள்
காலக் கொண்முலை யாரைநி லத்தைமே
வாசைப் புன்மதி யாளரு மற்புளோ
ராகித் தன்னடி நாடின ளப்பிலா
மாசைக் கொன்முர ணீகுவன் விட்டிடான்
வாகைக் கொன்னயி லானகி தொக்குநேர்
தூசைக் கொன்னடு வாரண நட்பறான்
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (3)

மாகத் திண்ணிய தேவரு மெச்சவே
வாழ்பொற் பண்ணுகு லாலர்வி ருப்பொடெ
நாகத் தும்மிக வேசெய்கு லத்தினே
ஞானப் பொன்னயில் வேல்கைய ணைத்துமேன்
மேகத் தண்மையி னேநட னத்தைவான்
மேவப் பண்ணுக லாபிந டத்திமால்
சோகட் டுன்னுநர் சூழவி ருப்பனே
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (4)

ஆழத் தண்மக ராலய முட்கொளா
ஆவிக் குண்மிளி ரோர்விரன் மட்டுளோன்
வாழத் தொன்மறை மூலமு ரைத்தகோன்
மாழைச் செந்நிற வாரண சத்தியான்
வேழப் பொன்மகள் வேடர்கு லத்தினான்
மேவத் தன்மண மாலைக ளிட்டுநீர்
சூழத் துன்னகி லாசல நச்சும்வேள்
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (5)

தாடித் தென்னுநன் மீசையு மிக்குநீள்
தாமப் பின்னல்க ணீறவிர் தொக்குளீர்
கோடிக் கும்மறை யார்நெறி பற்றுவீர்
கோனச் செம்மல்க ளேதமிழ் பெற்பொடே
பாடிப் பன்முறை யேயுந லத்தரே
பாதத் தண்ணலெ லாருமு றப்பல்பூண்
சூடிச் சன்னிதி யேமிளிர் செக்கர்வேள்
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (6)

வேலிற் கென்னல மாசில்க டப்பவீ
வேரிக் கென்னல மாதவர் மெச்சுநா
னூலிற் கென்னல மேயத னர்த்தமா
நூழைக் கென்னல மாமயி லுற்றவோர்
மாலிற் கென்னலம் வால்கெமு செக்கர்வேள்
வாசச்சன்னிதி மேவலொழிக்கினோர்
சூலிக் கம்மக னாமவன் முத்தர்சேர்
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (7)

தேவர்க் கென்னல மாழிபி டித்தவோர்
தீரற கென்னல மாமறை சொற்றநா
னாவற் கென்னலம் வானுல கத்துவான்
நாரக் கென்னலம் மீதுமி ழற்றெனா
தாவற் கென்னல மூவிலை யத்தனா
ராரற் கண்ணில்வ ராவிடி லொட்பமார்
தூவற் பண்ணயில் வேல்கட ரித்தமா
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (8)

வாசித் தென்மறை மாணவர் சித்தெலாம்
மானித் தென்மட வார்பதி யைச்சதா
நேசித் தென்னவ நாதரு மெச்சநா
ணீடித்தென் னிகல் காதுசு வர்கர்தாள்
பூசித் தென்னுயர் வார்தரு மத்தையே
போதித் தென்மயி லூர்தன்ம றைப்பனேல்
சூசிச் செம்மதி வானவர் சித்தர்சூழ்
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (9)

வீரப் பொன்னொளி கால்கழ லுற்றகான்
மீளிப் பன்முனை யார்படை வெற்றிவேல்
சாரத் தண்ணுகை தான்மிளி ரக்கலா
தாரச் சண்முக னாகியுன் மத்தர்பேய்
கோரக் கண்ணின ரோடியொ ளிக்கமா
கோலச் செம்மலை நாமனை மெச்சியே
சூரற் குண்ணிழ லாயுமி ருக்கும்வேள்
சோதிச் சண்முக ஞானபு ரத்தனே (10)

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

சண்முக நாமாவளி

ஹரஹரசிவசிவ சண்முகநாதா
ஹரஹரசிவசிவ வென்முகநாதா
ஹரஹரசிவசிவ பரமவிலாசா
ஹரஹரசிவசிவ வபயகுகேசா
அருணகிரிபரவு மருணெறிநாதா
தருமவறுவர்புகழ் சததளபாதா
அரிபிரமாதிக டொழுவடிவேலா
திருவடிநாரவ ருளமுறைசீலா
எனினியகுருநித மெணுமதியீசா
சனனவெய்தறவளி தருபரமேசா
பாசாபாச பாபவிநாசா
மாசேறாத மானநடேசா
போஜாவாஜா பூஜகர்நேசா
தேஜாராஜா தேவஸமாஜா
தீஞ்சுவையருளொரு திருவாரமுதே
ஓஞ்சரவணபவ வுருவேயருவே.

ஸ்ரீ சண்முக நாமாவளி முற்றிற்று

திருவடித் துதி

அரஹர மந்திர அமல நிரந்தர
சரவண சம்ப்ரம சங்கர புத்திர
சுரபதி பூம சுகோதய போதக
பரிபுர சததள பாத நமஸ்தே (1)

ஆதி அனாதியும் ஆன வரோதய
சோதி நிலாவு சடானன சுபகர
வேதக சமரச விண்டலர் பண்டித
பாதக கண்டன பாத நமஸ்தே (2)

இந்துள அம்பக இங்கித மங்கல
சுந்தர ரூப துவாதச கரதல
சந்திர சேகர தடதா கிடதடப்
பந்திகொள் நிர்த்தன பாத நமஸ்தே (3)

ஈசுர நந்தன ஈசுர புங்கவ
தேசுற குண்டல சித்திர பந்தன
ஆசறு சஸ்திர ஹஸ்த சரோருக
பாச விமோசன பாத நமஸ்தே (4)

உச்சித மஞ்ஞையில் ஊர்அதி மோகன
நிச்சய உத்தர நித்ய மனோலய
சற்சனர் மித்திர சத்துரு கண்டன
பச்சைஅம் புஷ்கர பாத நமஸ்தே (5)

ஊர்த்துவ நாடகர்க் கோதிய தேசிக
ஆர்த்த தயித்தியர் அடல்தெறு காதக
கூர்த்திகை வீரிய குக்குட கேதன
பார்க்க அரும்குக பாத நமஸ்தே (6)

எண்ணறு வைபவ இந்த்ர விசேஷண
புண்ணிய உத்தம பூரண பச்சிமக்
கண்இல கும்சிவ கந்த கிருபாசன
பண்ணவர் பூஜித பாத நமஸ்தே (7)

ஏரக நாயக என்குரு நாயக
தாரக நாயக ஷண்முக நாயக
காரக நாயக கதிதரு நாயக
பாரக நாயக பாத நமஸ்தே (8)

ஐங்கர சோதர அம்பிகை காதல
மங்கள வல்லி மனோகர குஞ்சரி
இங்கித காவல இகபர சாதக
பங்கயன் மால்பணி பாத நமஸ்தே (9)

ஒகரம ஹாரத ஒளிர்புய அமுதர்கள்
புகழ்உப வீதவி பூதிகொள் முண்டக
ரகித விதூன லலாட விலோசன
பககுஹ பாவக பாத நமஸ்தே (10)

ஓம்அர ஹரசிவ ஓம்சர வணபவ
ரீம்அர ஹரசிவ நிகழ்பரி புரபவ
ஸ்ரீம்அர ஹரசிவ திரள்பவம் ஒழிவளர்
பாமகள் புகழ்அருள் பாத நமஸ்தே (11)

ஸ்ரீ தெளத்தியம் (திருவடித் துதி) முற்றிற்று.

பகை கடிதல்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. (1)

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. (2)

இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. (3)

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. (4)

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. (5)

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. (6)

எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. (7)

இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. (8)

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. (9)

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே. (10)

ஸ்ரீ பகை கடிதல் முற்றிற்று

சண்முக கவசம்

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. (1)

ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. (2)

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. (3)

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க. (4)

உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க. (5)

ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ
ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க. (6)

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க. (7)

ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க. (8)

ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க. (9)

ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க. (10)

ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க. (11)

ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க. (12)

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க. (13)

ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க. (14)

சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க. (15)

ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க. (16)

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க. (17)

இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க. (18)

தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க. (19)

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க. (20)

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க. (21)

மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. (22)

யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க. (23)

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க. (24)

லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க. (25)

வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க. (26)

இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க. (27)

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க. (28)

இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க. (29)

இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. (30)

ஸ்ரீ சண்முக கவசம் முற்றிற்று.

குமாரஸ்த்தவம்

ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கீaIவ பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கிaIட பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ – (5)

ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ
ஓம் நவநிதி பதயே நமோ நமஹ
ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ
ஓம் நரபதி பதயே நமோ நமஹ
ஓம் ஸரபதி பதயே நமோ நமஹ – (10)

ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ
ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ
ஓம் தபராஜ பதயே நமோ நமஹ
ஓம் இகபர பதயே நமோ நமஹ – (15)

ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ
ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ
ஓம் நயநய பதயே நமோ நமஹ

ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ
ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ – (20)

ஓம் வல்லீ பதயே நமோ நமஹ
ஓம் மல்ல பதயே நமோ நமஹ
ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ
ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ
ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ – (25)

ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ
ஓம் அபேத பதயே நமோ நமஹ
ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ
ஓம் வியூஹு பதயே நமோ நமஹ
ஓம் மயூர பதயே நமோ நமஹ – (30)

ஓம் பூத பதயே நமோ நமஹ
ஓம் வேத பதயே நமோ நமஹ
ஓம் பிராண பதயே நமோ நமஹ
ஓம் பக்த பதயே நமோ நமஹ
ஓம் முக்த பதயே நமோ நமஹ – (35)

ஓம் அகார பதயே நமோ நமஹ
ஓம் உ கார பதயே நமோ நமஹ
ஓம் மகார பதயே நமோ நமஹ
ஓம் விகாச பதயே நமோ நமஹ
ஓம் ஆதி பதயே நமோ நமஹ – (40)

ஓம் பூதி பதயே நமோ நமஹ
ஓம் குமார பதயே நமோ நமஹ
ஓம் அமார பதயே நமோ நமஹ
ஓம் ஸ்ரீ குமார குருப்யோ நமோ நமஹ – (41)

சகலகலாவல்லி மாலை

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ?
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே!
சகல கலாவல்லியே! (1)

நாடும் பொருள்சுவை சொற்சுவை
தோய்தர, நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்;
பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே!
சகல கலாவல்லியே!
(2)

அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்து, உன் அருள் கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக் கண்டு,
களிக்கும் கலாப மயிலே!
சகல கலாவல்லியே! (3)

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும், சொல்சுவை தோய்
வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்;
வட நூற்கடலும்,
தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும்,
தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே!
சகல கலாவல்லியே! (4)

பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே?
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்
நாவும், அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்;
சகல கலாவல்லியே! (5)

பண்ணும், பரதமும், கல்வியும்
தீஞ்சொல் பனுவலும், யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்;
எழுதா மறையும்,
விண்ணும், புவியும், புனலும்,
கனலும், கருத்தும் நிறைந்தாய்;
சகல கலாவல்லியே! (6)

பாட்டும், பொருளும், பொருளால்
பொருந்தும் பயனும், என்பதால்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்;
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே
சகல கலாவல்லியே! (7)

சொல்விற்பனமும், அவதானமும்,
கவி சொல்லவல்ல
நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய்,
நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்
சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே!
சகல கலாவல்லியே! (8)

சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ்
ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?
நிலம் தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு
அரச அன்னம் நாண, நடை
கற்கும் பதாம்புயத் தாயே!
சகல கலாவல்லியே! (9)

மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணிரச் செய்வாய்;
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ?
சகல கலாவல்லியே! (10)

01.051 வெங்கண் ஆனை

தலம் : சோபுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : நடுநாடு
சுவாமி : மங்களபுரீஸ்வரர்;
அம்பாள் : தியாகவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

வெங்கண் ஆனை யீருரிவை
போர்த்துவிளங் குமொழி1
மங்கைபாகம் வைத்துகந்த
மாண்பதுவென் னைகொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக்
கடிகமழுங் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய்
சோபுரமே யவனே.

பாடம் : 1விளங்குமெழில் 1

விடையமர்ந்து வெண்மழுவொன்
றேந்திவிரிந் திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத்
தாங்கிய தென்னைகொலாம்
கடையுயர்ந்த மும்மதிலுங்
காய்ந்தன லுள்ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த2 வெஞ்சிலையாய்
சோபுரமே யவனே.

பாடம் : 2நிகழ்ந்த 2

தீயராய வல்லரக்கர்
செந்தழலுள் ளழுந்தச்
சாயஎய்து வானவரைத்
தாங்கிய தென்னைகொலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறிப்
பாய்புலித்தோல் உடுத்த
தூயவெள்ளை நீற்றினானே
சோபுரமே யவனே. 3

பல்லிலோடு கையிலேந்திப்
பல்கடையும் பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான
ஆதரவென் னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ
வேல்நெடுங்கண் ணியொடும்
தொல்லையூழி யாகிநின்றாய்
சோபுரமே யவனே. 4

நாற்றமிக்க கொன்றைதுன்று
செஞ்சடைமேல் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த
காரணம்என் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் தன்னை
யொல்க வுதைத்தருளித்
தோற்றமீறு மாகிநின்றாய்
சோபுரமே யவனே. 5

கொன்னவின்ற மூவிலைவேற்
கூர்மழுவாட் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை
சூடும்பொற்பென் னைகொலாம்
அன்னமன்ன மெல்நடையாள்
பாகம்அமர்ந் தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய்
சோபுரமே யவனே. 6

குற்றமின்மை யுண்மைநீயென்
றுன்னடியார் பணிவார்
கற்றகேள்வி3 ஞானமான
காரணம்என் னைகொலாம்
வற்றலாமை வாளரவம்
பூண்டயன்வெண் டலையில்
துற்றலான கொள்கையானே
சோபுரமே யவனே.

பாடம் : 3கற்றல்கேள்வி 7

விலங்கலொன்று வெஞ்சிலையாக்
கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழும் ஊரெரித்த
கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர்
கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய்
சோபுரமே யவனே. 8

விடங்கொள்நாக மால்வரையைச்
சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த
காரணம்என் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு
மின்மலர்மேல் அயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச்
சோபுரமே யவனே. 9

புத்தரோடு புன்சமணர்
பொய்யுரையே யுரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த
பெற்றிமையென் னைகொலாம்
மத்தயானை யீருரிவை
போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே
சோபுரமே யவனே. 10

சோலைமிக்க தண்வயல்சூழ்
சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார்
சிரபுரக்கோன் நலத்தால்
ஞாலம்மிக்க தண்டமிழால்
ஞானசம் பந்தன்சொன்ன
கோலம்மிக்க மாலைவல்லார்
கூடுவர்வா னுலகே. 11

திருச்சிற்றம்பலம்

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்

பாகம் 1 – பால்

சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம்.

1 – 1

இலங்கு நன்கலை விரிஞ்சனோடு
அனந்தனும் சத மகன்சதா
வியன்கொள் தம்பியர்களும் பொனாடு
உறைந்த புங்கவர்களும் கெடாது

என்றும் கொன்றை அணிந்தோனார்
தந் தண் திண் திரளும் சேயாம்
என்றன் சொந்தமினும் தீதேது
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது

ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே
ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு

எலும்புறும் தலைகளும் துணிந்திட
அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய்
எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன்
மகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே

1 – 2

துலங்குமஞ்சிறை அலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்திருந்து உயர்கரங்கண் மா
வரங்கள் மிஞ்சிய விரும்புகூர்

துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள்
கொண்டு அண்டங்களில் நின்றூடே
சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது
அஞ்சும் பண்டசுரன் சூதே

சூழ்ந்தெழும்பொழுதே கரம் வாங்கி ஒண் திணிவேல்
தூண்டி நின்றவனே கிளையோங்க நின்றுளமா

துவந்துவம் பட வகிர்ந்து வென்று அதி
பலம்பொருந்திய நிரஞ்சனா
சுகம்கொளும் தவர் வணங்கும் இங்கிதம்
உகந்த சுந்தர அலங்க்ருதா . . . . . . அரிபிரமருமேயோ

1 – 3

அலைந்து சந்ததம் அறிந்திடாது
எழுந்த செந்தழல் உடம்பினார்
அடங்கி அங்கமும் இறைஞ்சியே
புகழ்ந்து அன்றுமெய் மொழிந்தவா

அங்கிங் கென்பது அறுந்தேவா
எங்கும் துன்றி நிறைந்தோனே
அண்டும் தொண்டர் வருந்தாமே
இன்பம் தந்தருளும் தாளா

ஆம்பி தந்திடுமா மணி பூண்ட அந்தளையா
ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா

அலர்ந்த இந்துள அலங்கலும் கடி
செறிந்த சந்தன சுகந்தமே
அணிந்து குன்றவர் நலம் பொருந்திட
வளர்ந்த பந்தனண எனும் பெணாள் . . . . . . தனை அணை மணவாளா

1 – 4

குலுங்கிரண்டு முகையும்களார்
இருண்ட கொந்தள ஒழுங்கும்வேல்
குரங்கும் அம்பகம் அதும் செவாய்
அதும் சமைந்துள மடந்தைமார்

கொஞ்சும் புன்தொழிலும் கால் ஓரும்
சண்டன் செயலும் சூடே
கொண்டு அங்கம் படரும் சீழ்நோய்
அண்டம் தந்தம் விழும்பாழ் நோய்

கூன்செயும் பிணிகால் கரம் வீங்கழுங்கலும் வாய்
கூம்பணங்கு கணோய் துயர் சார்ந்த புன்கணுமே

குயின்கொளும் கடல் வளைந்த இங்கெனை
அடைந்திடும்படி இனும்செயேல்
குவிந்து நெஞ்சமுளணைந்து நின்பதம்
நினைந்து உய்யும்படி மனம்செயே . . . . . . திருவருள் முருகோனே

பாகம் 2 – தயிர்

முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள்.

மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது.

2 – 1

கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்
கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்
காசு உமையாள் இளம் மாமகனே

களங்க இந்துவை முனிந்து நன்கு அது
கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளி
கால் அயிலார் விழிமா மருகா . . . . . . விரைசெறிஅணிமார்பா

2 – 2

கனத்துயர் குன்றையும் இணைத்துள கும்ப
கலசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
காதலன் நான்முக னாடமுதே

கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர்
கரும்பெனும் சொலை இயம்பு குஞ்சரி
காவலனே குகனே பரனே . . . . . . அமரர்கள் தொழுபாதா

2 – 3

உடுக்கிடையின் பணி அடுக்குடையுங்கன
உரைப்பு உயர் மஞ்சுறு பதக்கமொடு அம்பத
ஓவிய நூபுர மோதிரமே

உயர்ந்த தண்தொடைகளும் கரங்களில்
உறும் பசுந்தொடிகளும் குயங்களில்
ஊர் எழில்வாரொடு நாசியிலே . . . . . . மினும்அணி நகையோடே

2 – 4

உலப்பறு இலம்பகமினுக்கிய செந்திரு
உருப்பணி யும்பல தரித்து அடர் பைந்தினை
ஓவலிலா அரணே செயுமாறு

ஒழுங்குறும் புனமிருந்து மஞ்சுலம்
உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட
ஓலமதே இடுகானவர் மா . . . . . . மகளெனும் ஒருமானாம்

2 – 5

மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி
வனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றள
மானினியே கனியே இனிநீ

வருந்தும் என்றனை அணைந்து சந்ததம்
மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்
மயிலே குயிலே எழிலே . . . . . . மட வனநினதேர் ஆர்

2 – 6

மடிக்கொரு வந்தனம் அடிக்கொரு வந்தனம்
வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்
வாஎனும் ஓர் மொழியே சொலுநீ

மணங்கிளர்ந்தநல் உடம்பு இலங்கிடு
மதங்கி யின்றுளம் மகிழ்ந் திடும்படி
மான்மகளே எனைஆள் நிதியே . . . . . . எனும் மொழி பலநூறே

2 – 7

படித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன
படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்த
கிருபா கரனே வரனே அரனே

படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு
பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்
பாவகியே சிகியூர் இறையே . . . . . . திருமலிசமர் ஊரா

2 – 8

பவக்கடல் என்பது கடக்கவுநின் துணை
பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி
பாடவும்நீ நடமாடவுமே

படர்ந்து தண்டயை நிதம் செயும்படி
பணிந்த என்றனை நினைந்து வந்தருள்
பாலனனே எனையாள் சிவனே . . . . . . வளர் அயில் முருகோனே.

பாகம் 3 – நெய்

வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ – சக்தியரின் தாண்டவக் கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின்.

3 – 1

வஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்
மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர்
மான் கணார் பெணார் தமாலினான்

மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்பு
என மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே

மனமுயிர் உட்கச் சிதைத்துமே
நுகர்த்தின துக்கக் குணத்தினோர்
வசையுறு துட்டச் சினத்தினோர்
மடிசொல மெத்தச் சுறுக்குளோர்

வலிஏறிய கூரமுளோர் உதவார்
நடு ஏதுமிலார் இழிவார் களவோர்

மணமலர் அடியிணை விடுபவர் தமையினும்
நணுகிட எனைவிடுவது சரி இலையே . . . . . . தொண்டர்கள் பதிசேராய்

3 – 2

விஞ்சும்கார் நஞ்சம் தான் உண்டுந் திங்கள் அணிந்தும்கால்
வெம்பும்போதொண்செந்தாள் கொண்டஞ்சு அஞ்சஉதைந்தும்
பூமீன் பதா கையோன் மெய்வீயு மா

விழியை விழித்துக் கடுக எரித்துக்
கரியை உரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்

விழைவறு சுத்தச் சிறப்பினார்
பிணைமழு சத்திக் கரத்தினார்
விஜய உடுக்கைப் பிடித்துளார்
புரமது எரிக்கச் சிரித்துளார்

விதி மாதவனார் அறியா வடிவோர்
ஒருபாதி பெணாய் ஒளிர்வோர் சுசிநீள்

விடைதனில் இவர்பவர் பணபணம் அணிபவர்
கனைகழல் ஒலிதர நடமிடுபவர்சேய் . . . . . . என்றுள குருநாதா

3 – 3

தஞ்சம் சேர் சொந்தம் சாலம்செம்பங்கய மஞ்சுங்கால்
தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாம் ததீ ததீ ததீ ததீ

ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெயென நடிக்கச்சூழ்

தனி நடனக்ருத்தியத்தினாள்
மகிடனை வெட்டிச் சிதைத்துளாள்
தடமிகு முக்கட் கயத்தினாள்
சுரதன் உவக்கப் பகுத்துளாள்

சமிகூ விளமோடு அறுகார் அணிவாள்
ஒருகோ டுடையோன் அனையாய் வருவாள்

சதுமறை களும்வழி படவளர் பவண்மலை
மகளென வொருபெயருடையவள் சுதனே . . . . . . அண்டர்கள் தொழுதேவா

3 – 4

பிஞ்சம்சூழ் மஞ்சொண் சேயும்சந்தங்கொள் பதங்கங்கூர்
பிம்பம்போல் அங்கம் சாருங்கண் கண்கள்இலங்கும் சீர்
ஓங்கவே உலாவு கால் விணோர்

பிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்
கரியொடு துத்திப் படவர உட்கப்பார்

பிளிற நடத்திக் களித்தவா
கிரிகெட எக்கித் துளைத்தவா
பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா

பிணமா முனமே அருள்வாய் அருள்வாய்
துனியாவையு நீ கடியாய் கடியாய்

பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
சததமு மறைவறு திருவடி தரவா . . . . . . என்களி முருகோனே.

பாகம் 4 – சர்க்கரை

நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம்.
அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.

4 – 1

மாதமும் தின வாரமும் திதி
யோகமும் பல நாள்களும் படர்
மாதிரம் திரி கோள்களும் கழல்
பேணும் அன்பர்கள் பால் நலம் தர

வற்சலம் அதுசெயும் அருட்குணா
சிறந்த விற்பனர் அகக்கணா
மற்புய அசுரரை ஒழித்தவா
அனந்த சித்துரு எடுத்தவா

மால் அயன் சுரர்கோனும் உம்பர்
எலாரும் வந்தனமே புரிந்திடு
வானவன் சுடர் வேலவன் குரு
ஞான கந்தபிரான் எனும்படி

மத்தக மிசைமுடி தரித்தவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா
மட்டறும் இகல் அயில் பிடித்தவா
சிவந்த அக்கினி நுதற்கணா . . . . . . சிவகுரு எனும் நாதா.

4 – 2

நாத இங்கித வேதமும் பல்
புராணமும் கலைஆகமங்களும்
நாத உன் தனி வாயில் வந்தனவே
எனுந்துணிபே அறிந்தபின்

நச்சுவது இவண்எது கணித்தையோ
செறிந்த ஷட்பகை கெடுத்துமே
நட்புடை அருளமிழ்து உணில் சதா
சிறந்த துத்தியை அளிக்குமே

நாளும் இன்புஉயர் தேனினும் சுவை
ஈயும் விண்டலமே வரும் சுரர்
நாடியுண்டிடு போஜனம் தனி
லேயும் விஞ்சிடுமே கரும்பொடு

நட்டம் இன் முப்பழ முவர்க்குமே
விளைந்த சர்க்கரை கசக்குமே
நற்சுசி முற்றிய பயத்தொடே
கலந்த புத்தமு தினிக்குமோ . . . . . . அதை இனி அருளாயோ.

4 – 3

பூதலம் தனிலேயு (ம்) நன்கு உடை
மீதலம் தனி லேயும் வண்டு அறு
பூ மலர்ந்தவு னாத வம்பத
நேயம் என்பதுவே தினம் திகழ்

பொற்புறும் அழகது கொடுக்குமே
உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே
பொய்த்திட வினைகளை அறுக்குமே
மிகுந்த சித்திகள் பெருக்குமே

பூரணம் தருமே நிரம்பு எழில்
ஆதனம் தருமேஅணிந்திடு
பூடணம் தருமே இகந்தனில்
வாழ்வதும் தருமே உடம்பொடு

பொக்கறு புகழினை அளிக்குமே
பிறந்து செத்திடல் தொலைக்குமே
புத்தியில் அறிவினை விளக்குமே
நிறைந்த முத்தியும் இசைக்குமே . . . . . . இதைநிதம் உதவாயோ.

4 – 4

சீதளம் சொரி கோதில் பங்கயமே
மலர்ந்திடு வாவி தங்கிய
சீர் அடர்ந்தவிர் ஆவினன்குடி
ஏரகம் பரபூத ரம்சிவ

சித்தரும் முனிவரும் வசித்த
சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய்
செற்கணம் உலவிடு பொருப்பெலாம்
இருந்து அளித்தருள் அயில் கையா

தேன் உறைந்திடு கான கந்தனில்
மானிளம் சுதையால் இரும் சரை
சேர் உடம்பு தளாட வந்த
சன்யாச சுந்தரரூப அம்பர

சிற்பர வெளிதனில் நடிக்குமா
அகண்ட தத்துவ பரத்துவா
செப்பரும் ரகசிய நிலைக்குளே
விளங்கு தற்பர திரித்துவா . . . . . . திருவளர் முருகோனே.

பாகம் 5 – தேன்

கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின்.

5 – 1

சூலதரனார் ஆட ஓதிமகளாட நனி
தொழுபூத கணமாட அரி ஆட அயனோடு
தூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்
சுரரோடு சுரலோக பதியாட எலியேறு
சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓரு
தொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீர
சூலிபதி தானாட நீலநம னாடநிறை
சுசிநார இறையாட வலிசால் நிருதியாட . . . . . . அரிகரமகனோடே

5 – 2

காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு
கனஞால மகளாட வரவேணி சசிதேவி
காமமத வேளாட மாமைரதி யாட அவிர்
கதிராட மதியாட மணிநாக அரசு ஓகை
காணும் முனிவோராட மாணறமினாட இரு
கழலாட அழகாய தளையாட மணிமாசு இல்
கானமயில் தானாட ஞான அயிலாட ஒளிர்
கரவாள மதுவாட எறிசூல மழுவாட . . . . . . வயிரமல் எறுழோடே

5 – 3

கோல அரை ஞாணாட நூன்மருமமாட நிரை
கொளுநீப அணியாட உடையாட அடல்நீடு
கோழி அயராது ஆட வாகுவணி யாடமிளிர்
குழையாட வளையாட உபயாறு கரமேசில்
கோகநத மாறாறொடாறு விழியாட மலர்
குழகாய இதழாட ஒளிராறு சிரமோடு
கூறுகலை நாவாட மூரல் ஒளியாட வலர்
குவடேறு புயமாட மிடறாட மடியாட . . . . . . அகன்முதுகுரமோடே

5 – 4

நாலுமறை யேயாட மேல் நுதல்களாட வியன்
நலியாத எழிலாட அழியாத குணமாட
நாகரிகமே மேவு வேடர்மகளாட அருள்
நயவானை மகளாட முசுவான முகனாட
நாரதமகான் ஆட ஓசைமுனி ஆட விற
னவவீரர் புதராட ஒரு காவடியன் ஆட
ஞான அடியாராட மாணவர்கள் ஆட இதை
நவில் தாசன் உடனாட இதுவேளை எணிவாகொள் . . . . . . அருள்மலி முருகோனே.

01.050 ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக்

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : வலிவலம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்


சுவாமி : இருதய கமலநாதேஸ்வரர்;
அம்பாள் : வாளையங்கண்ணி

திருச்சிற்றம்பலம்

ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக்
கள்ளம்ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து
காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றன்நாமம்
நாவில்நவின் றேத்த1
வல்லவாறே வந்துநல்காய்
வலிவலமே யவனே.

பாடம் : 1நாவின் நவிற்றுகின்றேன் 2வல்லவாறே நல்குகண்டாய் வலிவலம்மேயானே 1

இயங்குகின்ற இரவிதிங்கள்
மற்றுநல்தே வரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால்
சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா
காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய்
வலிவலமே யவனே. 2

பெண்டிர்மக்கள் சுற்றமென்னும்
பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன்
வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றன்நாமங்
காதலிக்கின் றதுள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை
வலிவலமே யவனே. 3

மெய்யராகிப் பொய்யைநீக்கி
வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே
தேவர்குலக் கொழுந்தே
நைவன் நாயேன் உன்றன்நாமம்
நாளும்நவிற் றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய்
வலிவலமே யவனே. 4

துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ்
சொல்லுவனுன் திறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன்
தாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ
நாளும்நினைந் தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே. 5

புரிசடையாய் புண்ணியனே
நண்ணலார்மூ வெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான்
என்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா
நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய்
வலிவலமே யவனே. 6

தாயுநீயே தந்தைநீயே
சங்கரனே யடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான்
ஆதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள்
ஐவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன்
வலிவலமே யவனே. 7

நீரொடுங்குஞ் செஞ்சடை யாய்நின்
னுடையபொன் மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற
வேந்தன்இரா வணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத்
திருவிரலால் அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா
வலிவல மேயவனே. 8

ஆதியாய நான்முகனும்
மாலுமறி வரிய
சோதியானே நீதியில்லேன்
சொல்லுவன்நின் திறமே
ஓதிநாளும் உன்னையேத்தும்
என்னைவினை அவலம்
வாதியாமே வந்துநல்காய்
வலிவலமே யவனே. 9

பொதியிலானே பூவணத்தாய்
பொன்திகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம்
பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர்
சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ
வலிவல மேயவனே. 10

வன்னிகொன்றை மத்தஞ்சூடும்
வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன்
ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார்
மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே
மன்னியிருப் பாரே.. 11

திருச்சிற்றம்பலம்

01.049 போகமார்த்த பூண்முலையாள்

தலம் : நள்ளாறு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை


சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்;
அம்பாள் : போகமார்த்தபூண்முலையாள்.

திருச்சிற்றம்பலம்

போகமார்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள்
ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன்
கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே. 1

தோடுடைய காதுடையன்
தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன்
பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ
டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான்
மேயது நள்ளாறே. 2

ஆன்முறையா லாற்றவெண்ணீ
றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம்
பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ்
சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான்
மேயது நள்ளாறே. 3

புல்கவல்ல வார்சடைமேற்
பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை
மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்
பொற்பாத நிழற்சேர
நல்கவல்ல நம்பெருமான்
மேயது நள்ளாறே. 4

ஏறுதாங்கி யூர்திபேணி
யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர்
ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த
மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான்
மேயது நள்ளாறே. 5

திங்களுச்சி மேல்விளங்குந்
தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன்
என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந்
தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான்
மேயது நள்ளாறே. 6

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி
விண்கொண் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல்
பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித்
திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான்
மேயது நள்ளாறே. 7

சிட்டமார்ந்த மும்மதிலுஞ்
சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ண
வெண்ணீறாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர்
பால்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான்
மேயது நள்ளாறே. 8

உண்ணலாகா நஞ்சுகண்டத்
துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல்
ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென்
றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான்
மேயது நள்ளாறே. 9

மாசுமெய்யர் மண்டைத்தேரர்
குண்டர் குணம்இலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி
யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி
மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான்
மேயது நள்ளாறே. 10

தண்புனலும் வெண்பிறையுந்
தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி
ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல்
பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ
டுலகி லுறைவாரே.

திருச்சிற்றம்பலம்

01.048 நூலடைந்த கொள்கையால

தலம் : சேய்ஞலூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை


சுவாமி : சத்தியகிரீஸ்வரர்;
அம்பாள் : சகிதேவியம்மை.

திருச்சிற்றம்பலம்

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 1

நீறடைந்த மேனியின்கண் நேரிழை யாளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச்1 சேய்ஞலூர் மேயவனே.

பாடம் : 1வார்கழனிச் 2

ஊனடைந்த வெண்டலையி னோடு பலிதிரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே. 3

வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே. 4

பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. 5

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. 6

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 7

மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யும்
சேவடைந்த வூர்தியானே சேய்ஞலூர் மேயவனே. 8

காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. 9

மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த வூணினாரும் நேசமி லாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகம ழும்பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. 10

சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.

திருச்சிற்றம்பலம்

01.047 பல்லடைந்த வெண்டலையிற்

தலம் : சீர்காழி – 07-சிரபுரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : பழந்தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை


சுவாமி : தோணியப்பர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

பல்லடைந்த வெண்டலையிற்
பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள்
மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொல்மறையோ
டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ்
சிரபுரம் மேயவனே. 1

கொல்லைமுல்லை நகையினாளோர்
கூறது வன்றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும்
ஆதர வென்னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர்
தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு
சிரபுரம் மேயவனே. 2

நீரடைந்த சடையின்மேலோர்
நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி
யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து
காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு
சிரபுரம் மேயவனே. 3

கையடைந்த மானினோடு
காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு
மெல்லியல் வைத்ததென்னே
கையடைந்த களைகளாகச்
செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த
சிரபுரம் மேயவனே. 4

புரம்எரித்த பெற்றியோடும்
போர்மத யானைதன்னைக்
கரம்எடுத்துத் தோலுரித்த
காரணம் ஆவதென்னே
மரம்உரித்த தோலுடுத்த
மாதவர் தேவரோடுஞ்
சிரம்எடுத்த கைகள்கூப்புஞ்
சிரபுரம் மேயவனே. 5

கண்ணுமூன்றும் உடையதன்றிக்
கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு
பாம்புடன் வைத்தலென்னே
எண்ணுமூன்று கனலும்ஓம்பி
யெழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர்
சிரபுரம் மேயவனே. 6

குறைபடாத வேட்கையோடு
கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு
மெய்ம்மை1 யென்னே
இறைபடாத மென்முலையார்
மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு
சிரபுரம் மேயவனே.

பாடம் : 1மேன்மை 7

மலையெடுத்த வாளரக்கன்
அஞ்ச வொருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே
நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார்
மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே
சிரபுரம் மேயவனே. 8

மாலினோடு மலரினானும்
வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட
தத்துவ மேயதென்னே
நாலுவேதம் ஓதலார்கள்
நம்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த
சிரபுரம் மேயவனே. 9

புத்தரோடு சமணர்சொற்கள்
புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த
பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து
மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச்
சிரபுரம் மேயவனே. 10

தெங்குநீண்ட சோலைசூழ்ந்த
சிரபுரம் மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல
அணிகொள்சம் பந்தன்உரை
பங்கம்நீங்கப் பாடவல்ல
பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர்
தன்மையி னாலவரே. 11

திருச்சிற்றம்பலம்

01.046 குண்டைக் குறட்பூதங் குழும

தலம் : அதிகை வீரட்டானம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : நடுநாடு


சுவாமி : வீரட்டானேசுவரர்;
அம்பாள் : பெரியநாயகி.

திருச்சிற்றம்பலம்

குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. 1

அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
சுரும்புண்விரி கொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே. 2

ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே. 3

எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. 4

கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே. 5

துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. 6

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வனின் றாடும்வீரட் டானத்தே. 7

கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லால் எயில்எய்தான் ஆடும்வீரட் டானத்தே. 8

நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
கடியார் கழுநீலம் மலரும் மதிகையுள்
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. 9

அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடன்ஏந்தி யுடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே. 10

ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலரே. 11

திருச்சிற்றம்பலம்

01.045 துஞ்ச வருவாருந் தொழுவிப்

தலம் : ஆலங்காடு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : தொண்டைநாடு
திருப்பழையனூர்


சுவாமி : வடாரண்யேசுவரர்;
அம்பாள் : வண்டார்குழலி.

திருச்சிற்றம்பலம்

துஞ்ச வருவாருந் தொழுவிப் பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரும் முனைநட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்
டஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 1

கேடும் பிறவியும் ஆக்கி னாருங் கேடிலா
வீடு மாநெறி விளம்பி னாரெம் விகிர்தனார்
காடுஞ் சுடலையுங் கைக்கொண் டெல்லிக் கணப்பேயோ1
டாடும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.

பாடம் : 1டல்லிற்கணப்பேயோ 2

கந்தங் கமழ்கொன்றைக் கண்ணி சூடி கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை யரவில் தோன்றிக் கோடல்பூத்
தந்தண் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 3

பால மதிசென்னி படரச் சூடிப் பழியோராக்
கால னுயிர்செற்ற கால னாய கருத்தனார்
கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 4

ஈர்க்கும் புனல்சூடி இளவெண் டிங்கள் முதிரவே
பார்க்கும் அரவம்பூண் டாடி வேடம் பயின்றாரும்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்த மேறிக் கருந்தேன்மொய்த்
தார்க்கும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 5

பறையுஞ் சிறுகுழலும் யாழும் பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத் துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையி னாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 6

நுணங்கு மறைபாடி யாடி வேடம் பயின்றாரும்
இணங்கு மலைமகளோ டிருகூ றொன்றாய் யிசைந்தாரும்
வணங்குஞ் சிறுத்தொண்டர் வைக லேத்தும் வாழ்த்துங்கேட்
டணங்கும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 7

கணையும் வரிசிலையும் எரியுங் கூடிக் கவர்ந்துண்ண
இணையில் எயின்மூன்றும் எரித்திட் டாரெம் இறைவனார்
பிணையுஞ் சிறுமறியுங் கலையு மெல்லாங் கங்குல்சேர்ந்
தணையும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 8

கவிழ மலைதரளக்2 கடகக் கையால் எடுத்தான்தோள்
பவழ நுனைவிரலாற் பைய வூன்றிப் பரிந்தாரும்
தவழுங் கொடிமுல்லை புறவஞ் சேர நறவம்பூத்
தவிழும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே.

பாடம் : 2தாழக் 9

பகலும் இரவுஞ்சேர் பண்பி னாரும் நண்போரா
திகலும் இருவர்க்கும் எரியாய்த் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க் கென்றுந் தீயபோய்
அகலும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 10

போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப் பாருங் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே. 11

சாந்தங் கமழ்மறுகிற் சண்பை ஞான சம்பந்தன்
ஆந்தண் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளை
வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவைவல்லார்
சேர்ந்த இடமெல்லாந் தீர்த்த மாகச் சேர்வாரே.

திருச்சிற்றம்பலம்

01.044 துணிவளர் திங்கள்

தலம் : பாச்சிலாச்சிராமம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை


சுவாமி : மாற்றறிவரதர்;
அம்பாள் : பாலசௌந்தரி.

திருச்சிற்றம்பலம்

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிட மும்பலி தேர்வர்
அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே. 1

கலைபுனை மானுரி தோலுடை யாடை
கனல்சுட ராலிவர் கண்கள்
தலையணி சென்னியர் தாரணி மார்பர்
தம்மடி கள்ளிவ ரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
இலைபுனைவேலரோ ஏழையை வாட
இடர்செய்வ தோஇவ ரீடே. 2

வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதைசெய்வ தோஇவர் சீரே. 3

கனமலர்க் கொன்றை அலங்கல்இ லங்கக்
கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை யணிந்தழ காய
புநிதர்கொ லாமிவ ரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே. 4

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமொர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தைவி ழிச்சிறு பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச்
சதுர்செய்வ தோஇவர் சார்வே. 5

நீறுமெய் பூசி நிறைசடை தாழ
நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
ஆறது சூடி ஆடர வாட்டி
யைவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர்செய்வ தோஇவ ரீடே. 6

பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
டாமைவெண் ணூல்புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்தழ காய
குழகர்கொ லாமிவ ரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
சதிர்செய்வ தோஇவர் சார்வே. 7

ஏவலத் தால்விச யற்கருள் செய்து
இராவணனை1யீ டழித்து
மூவரி லும்முத லாய்நடுவாய
மூர்த்தியை யன்றி மொழியாள்
யாவர்க ளும்பர வும்மெழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதைசெய்வ தோஇவர் சேர்வே.

பாடம் : 1இராவணன் றன்னை 8

மேலது நான்முகன் எய்திய தில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்திய தில்லை
யெனஇவர் நின்றது மல்லால்
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வ தோஇவர் பண்பே. 9

நாணொடு கூடிய சாயின ரேனும்
நகுவ ரவரிரு போதும்
ஊணொடு கூடிய வுட்கு நகையார்
உரைக ளவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனைசெய்வ தோஇவர் பொற்பே. 10

அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
ஆச்சிரா மத்துறை கின்ற
புகைமலி மாலை புனைந்தழ காய
புனிதர்கொ லாமிவ ரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்
சாரகி லாவினை தானே.

திருச்சிற்றம்பலம்

01.043 வடந்திகழ் மென்முலை

தலம் : கற்குடி
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை


சுவாமி : உஜ்ஜீவநாதஸ்வாமி;
அம்பாள் : அஞ்சனாக்ஷி.

திருச்சிற்றம்பலம்

வடந்திகழ் மென்முலை யாளைப்
பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனல் மாதைத்
தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர்
துன்பமொ டின்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங்
கற்குடி மாமலை யாரே. 1

அங்கமொ ராறுடை வேள்வி
யான அருமறை நான்கும்
பங்கமில் பாடலோ டாடல்
பாணி பயின்ற படிறர்
சங்கம தார்குற மாதர்
தங்கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றுங்
கற்குடி மாமலை யாரே. 2

நீரக லந்தரு சென்னி
நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை யின்னொளி சூழ்ந்த
தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர்
புனத்திடை யிட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங்
கற்குடி மாமலை யாரே. 3

ஒருங்களி நீயிறை வாவென்
றும்பர்கள் ஓல மிடக்கண்
டிருங்கள மார விடத்தை
இன்னமு துண்ணிய1 ஈசர்
மருங்களி யார்பிடி வாயில்
வாழ்வெதி ரின்முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்குங்
கற்குடி மாமலை யாரே.

பாடம் : 1துன்னிய 4

போர்மலி திண்சிலை கொண்டு
பூதக ணம்புடை சூழப்
பார்மலி வேடுரு வாகிப்
பண்டொரு வர்க்கருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த
இன்னொளி மாமணி யெங்கும்
கார்மலி வேடர் குவிக்குங்
கற்குடி மாமலை யாரே. 5

உலந்தவர் என்ப தணிந்தே
யூரிடு பிச்சைய ராகி
விலங்கல்வில் வெங்கன லாலே
மூவெயில் வேவ முனிந்தார்
நலந்தரு சிந்தைய ராகி
நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழுங்
கற்குடி மாமலை யாரே. 6

மானிடம் ஆர்தரு கையர்
மாமழு வாரும் வலத்தார்
ஊனிடை யார்தலை யோட்டில்
உண்கல னாக வுகந்தார்
தேனிடை யார்தரு சந்தின்
திண்சிறை யால்தினை வித்திக்
கானிடை வேடர் விளைக்குங்
கற்குடி மாமலை யாரே. 7

வாளமர் வீரம் நினைந்த
இராவணன் மாமலை யின்கீழ்த்
தோளமர் வன்றலை குன்றத்
தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலை பற்றித்
தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம தார்முகில் கீறுங்
கற்குடி மாமலை யாரே. 8

தண்டமர் தாமரை யானுந்
தாவியிம் மண்ணை யளந்து
கொண்டவ னும்மறிவொண் ணாக்கொள்கை
யர்வெள் விடை யூர்வர்
வண்டிசை யாயின பாட
நீடிய வார்பொழில் நீழல்
கண்டமர் மாமயி லாடுங்
கற்குடி மாமலை யாரே. 9

மூத்துவ ராடையி னாரும்
மூசு கருப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம் மொழியார்கள்
நயமில் அராமதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர்
இறைஞ்ச அவரிட ரெல்லாம்
காத்தவர் காமரு சோலைக்
கற்குடி மாமலை யாரே. 10

காமரு வார்பொழில் சூழுங்
கற்குடி மாமலை யாரை
நாமரு வண்புகழ்க் காழி
நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை
பத்திவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும்
பொன்னுல கிற்பொலி வாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.042 பைம்மா நாகம்

தலம் : பேணுபெருந்துறை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை


சுவாமி : சிவாநந்தநாதர்;
அம்பாள் : மலையரசியம்மை.

திருச்சிற்றம்பலம்

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
யரிவையோர் பாகம் அமர்ந்த
பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
பேணு பெருந்துறை யாரே. 1

மூவரு மாகி இருவரு மாகி
முதல் வனுமாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப்
பல்கணம் நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு
தண்மதிள் மூன்றும் எரித்த
தேவர்கள் தேவர் எம்பெருமானார்
தீதில் பெருந்துறை யாரே. 2

செய்பூங் கொன்றை கூவிள மாலை
சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகம்
கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை
காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
பில்கு பெருந்துறை யாரே. 3

நிலனொடு வானும் நீரொடு தீயும்
வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி
நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசும் இல்லவர் வாழும்
மல்கு பெருந்துறை யாரே. 4

பணிவா யுள்ள நன்கெழு நாவின்
பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்கள் உள்ள மிலாத
சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர்
அரிசி லுரிஞ்சு கரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
மல்கு பெருந்துறை யாரே. 5

எண்ணார் தங்கள் மும்மதிள் வேவவே
வலங் காட்டிய எந்தை
விண்ணோர்சாரத் தன்னருள் செய்த
வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாடல் ஆடல் அறாத
பசுபதி யீசனோர் பாகம்
பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
பேணு பெருந்துறை யாரே. 6

விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
வினைகெட வேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
தண்ணரிசில் புடைசூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னங்
கூடு பெருந்துறை யாரே. 7

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
பொருகடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால்வரை யூன்றி
மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த
மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி
யணவு பெருந்துறை யாரே. 8

புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வாயல்லி மேலுறைவானும்
உணர்வரி யான்உமை கேள்வன்
முள்வாய்தாளில் தாமரைமொட்டின்
முகம்மலரக்கயல் பாயக்
கள்வாய்நீலங் கண்மலரேய்க்குங்
காமர் பெருந்துறை யாரே. 9

குண்டுந் தேருங் கூறை களைந்துங்
கூப்பி லர்செப் பிலராகி
மிண்டும் மிண்டர் மிண்ட வைகண்டு
மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்
தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை
மல்கு பெருந்துறை யாரே. 10

கடையார் மாடம் நன்கெழு வீதிக்
கழுமல வூரன் கலந்து
நடையார் இன்சொல் ஞானசம் பந்தன்
நல்ல பெருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம்
பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமும் ஒன்றி
உலகினில் மன்னுவர் தாமே. 11

திருச்சிற்றம்பலம்

01.041 சீரணி திகழ்திரு

தலம் : பாம்புரம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை


சுவாமி : பாம்புரேஸ்வரர்;
அம்பாள் : வண்டார்குழலி.

திருச்சிற்றம்பலம்

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே. 1

கொக்கிற கோடு கூவிள மத்தம்
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே. 2

துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியும்எம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே. 3

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்டம் உடையஎன் நாதர்
நள்ளிருள் நடஞ்செய்யும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட
மாடமா ளிகைதன் மேலேறிப்
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னக ராரே. 4

நதியதன் அயலே நகுதலை மாலை
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக்
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே. 5

ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
ஒளிதிக ழுருவஞ்சேர் ஒருவர்
மாதினை யிடமா வைத்தஎம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ அருளென் றமரர்கள் பணிய
அலைகடல் கடையஅன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தஎம் பரமர்
பாம்புர நன்னக ராரே. 6

மாலினுக் கன்று சக்கர மீந்து
மலரவற் கொருமுகம் ஒழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி
அனலது வாடும் எம்மடிகள்
காலனைக் காய்ந்து தம்கழ லடியாற்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தஎம் மடிகள்
பாம்புர நன்னக ராரே. 7

விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் தனக்கன் றருள்செய்த அடிகள்
அனலது ஆடும்எம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட
வந்திழி அரிசிலின் கரைமேல்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னக ராரே. 8

கடிபடு கமலத் தயனொடு மாலுங்
காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
தீவண ரெம்முடைச் செல்வர்
முடியுடை யமரர் முனிகணத் தவர்கள்
முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே. 9

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
குற்றுவிட்டுடுக் கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
கையர்தா முள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரண முரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னக ராரே. 10

பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நான்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

01.040 பொடியுடை மார்பினர்

தலம் : வாழ்கொளிபுத்தூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை


சுவாமி : மாணிக்கவண்ணவீசுரர்;
அம்பாள் : வண்டார்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்
பூத கணம்புடை சூழக்
கொடியுடை யூர்திரிந் தையங்
கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமல ரிட்டுக்
கறைமிடற் றானடி காண்போம். 1

அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
ஆடர வம்அசைத் தையம்
புரைகெழு வெண்டலை யேந்திப்
போர்விடை யேறிப் புகழ
வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகமழ்1 மாமலர் தூவி
விரிசடை யானடி சேர்வோம்.

பாடம் : 1விரைகெழு 2

பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்
புன்றலை யங்கையி லேந்தி
ஊண்இடு பிச்சையூ ரையம்
உண்டியென் றுபல கூறி
வாநெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தாள்நெடு மாமல ரிட்டுத்
தலைவன தாள்நிழல் சார்வோம். 3

தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சைகொள் செல்வம்
உண்டியென் றுபல கூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவிக்
கறைமிடற் றானடி காண்போம். 4

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
காதிலொர் வெண்குழை யோடு
புனமலர் மாலை புனைந்தூர்
புகுதியென் றேபல கூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தன தூவி
யெம்பெரு மானடி சேர்வோம். 5

அளைவளர் நாகம் அசைத்தன லாடி
அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யிற்பலி கொள்ளுங்
கருத்தனே கள்வனே யென்னா
வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர் தூவித்
தலைவன தாளிணை சார்வோம். 6

அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
வழிதலை யங்கையி லேந்தி
உடலிடு பிச்சையோ டையம்
உண்டியென் றுபல கூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமல ராயின தூவித்
தலைவன தாள்நிழல் சார்வோம். 7

உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
ஒளிர்கட கக்கை அடர்த்து
அயலிடு பிச்சையோ டையம்
ஆர்தலை யென்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவி
தாழ்சடை யானடி சார்வோம். 8

கரியவன் நான்முகன் கைதொழு தேத்தக்
காணலுஞ் சாரலும் ஆகா
எரியுரு வாகியூ ரையம்
இடுபலி யுண்ணியென் றேத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயின தூவி
விகிர்தன சேவடி சேர்வோம். 9

குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யிற்
கொள்கையி னார்புறங் கூற
வெண்டலை யிற்பலி கொண்டல்
விரும்பினை யென்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத்
தோன்றிநின் றானடி சேர்வோம். 10

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின்
நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார்
துயர்கெடு தல்எளி தாமே. 11

திருச்சிற்றம்பலம்

01.039 அந்தமும் ஆதியும்

தலம் : வேட்களம்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை


சுவாமி : பாசுபதேஸ்வரரர்;
அம்பாள் : சற்குணாம்பாள்.

திருச்சிற்றம்பலம்

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
ஆரழல் அங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப
மலைமகள் காணநின் றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை
தண்மதி யம்மய லேததும்ப
வெந்தவெண் ணீறுமெய் பூசும்
வேட்கள நன்னக ராரே. 1

சடைதனைத் தாழ்தலும் ஏறமு டித்துச்
சங்கவெண் தோடு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ் சூழப்
போதரு மாறிவர் போல்வார்
உடைதனில் நால்விரற் கோவண ஆடை
உண்பதும் ஊரிடு பிச்சைவெள்ளை
விடைதனை யூர்தி நயந்தார்
வேட்கள நன்னக ராரே. 2

பூதமும் பல்கண மும்புடை சூழப்
பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்
சீதமும் வெம்மையு மாகிச்
சீரொடு நின்றவெஞ் செல்வர்
ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
உள்ளங் கலந்திசை யாலெழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா
வேட்கள நன்னக ராரே. 3

அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
அமையவெண் கோவணத் தோடசைத்து
வரைபுல்கு மார்பிலொராமை
வாங்கி யணிந்த வர்தாந்1
திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்
தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
வேட்கள நன்னக ராரே.

பாடம் : 1அணிந்தவரதர் 4

பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார்
மும்மதி லெய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்தவெண் திங்கட்
கண்ணியர் விண்ணவர் கைதொழு தேத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல்
வேட்கள நன்னக ராரே. 5

கறிவளர் குன்றம் எடுத்தவன் காதற்
கண்கவ ரைங்கணை யோனுடலம்
பொறிவளர் ஆரழ லுண்ணப்
பொங்கியபூத புராணர்
மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
வெறிவளர் கொன்றையந் தாரார்
வேட்கள நன்னக ராரே. 6

மண்பொடிக் கொண்டெரித் தோர்சுடலை
மாமலை வேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச் சேரநின் றாடி
நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்
காலனைக் காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர்திரு மார்பர்
வேட்கள நன்னக ராரே. 7

ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
அமுத மமரர்க் கருளிச்
சூழ்தரு பாம்பரை யார்த்துச்
சூலமோ டொண்மழு வேந்தித்
தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்
தண்மதி யம்மய லேததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார்
வேட்கள நன்னக ராரே. 8

திருவொளி காணிய பேதுறு கின்ற
திசைமுக னுந்திசை மேலளந்த
கருவரை யேந்திய மாலுங்
கைதொழ நின்றது மல்லால்
அருவரை யொல்க எடுத்த அரக்கன்
ஆடெழிற் றோள்க ளாழத்தழுந்த
வெருவுற வூன்றிய பெம்மான்
வேட்கள நன்னக ராரே. 9

அத்தமண் தோய்துவ ரார்அமண் குண்டர்
யாதுமல் லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவ தல்லாற்
புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
மூரிவல் லானையின் ஈருரிபோர்த்த
வித்தகர் வேத முதல்வர்
வேட்கள நன்னக ராரே. 10

விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி
நற்றமிழ் ஞானசம் பந்தன்
பெண்ணின்நல் லாளொரு பாகமமர்ந்து
பேணிய வேட்கள மேல்மொழிந்த
பண்ணியல் பாடல்வல் லார்கள்
பழியொடு பாவமி லாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.038 கரவின் றிநன்மா

தலம் : மயிலாடுதுறை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை


சுவாமி : மயூரநாதர்;
அம்பாள் : அபயாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

கரவின் றிநன்மா மலர்கொண்டு1
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.

பாடம் : 1மலர்கொண்டே 1

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே. 2

ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே. 3

அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
துஞ்சும் பிணியா யினதானே. 4

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே. 5

தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே. 6

அணங்கோ டொருபா கம்அமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே. 7

சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலா டுதுறையே. 8

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே. 9

நின்றுண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே. 10

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. 11

திருச்சிற்றம்பலம்

01.037 அரவச் சடைமேல்

தலம் : பனையூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை


சுவாமி : சௌந்தரேஸ்வரர்;
அம்பாள் : பிரஹந்நாயகி.

திருச்சிற்றம்பலம்

அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. 1

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே. 2

அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே. 3

இடியார் கடல்நஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே. 4

அறையார் கழல்மேல் அரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே. 5

அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே. 6

அடையா தவர்மூ எயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
உடையான் அவனெண்1 பலபூதப்
படையா னவனூர் பனையூரே.

பாடம் : 1அவனொண் 7

இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தஎம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே. 8

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே. 9

அழிவல் அமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே. 10

பாரார் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.036 கலையார் மதியோ

தலம் : ஐயாறு
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை


சுவாமி : பஞ்சநதீஸ்வரர்;
அம்பாள் : தர்மசம்வர்த்தினி

திருச்சிற்றம்பலம்

கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. 1

மதியொன் றியகொன் றைவடத்தான்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வு
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே. 2

கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே1.

பாடம் : 1வரையார்தவையாறே 3

சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே. 4

உமையா ளொருபா கமதாகச்
சமைவா ரவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்2
அமையா வருமந் தணையாறே.

பாடம் : 2சேர்தரமுத்தம் சேர்தரு முத்தம் 5

தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே. 6

வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே. 7

வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே. 8

சங்கக் கயனும்3 மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு4
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.

பாடம் : 3சங்கத்தயனும் 4புனல்கொண்ட 9

துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணைஅந் தணையாறே. 10

கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞா னசம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.. 11

திருச்சிற்றம்பலம்

01.035 அரையார் விரிகோ வணஆடை

தலம் : வீழிமிழலை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை


சுவாமி : வீழியழகர்;
அம்பாள் : அழகுமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்

அரையார் விரிகோ வணஆடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே. 1

புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே. 2

அழவல் லவரா டியும்பாடி
எழவல் லவரெந் தையடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே. 3

உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் அரையார்த் தஅழகன்
விரவும் பொழில்வீழி ம்மிழலை
பரவும் மடியார் அடியாரே. 4

கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே. 5

சடையார் பிறையான் சரிபூதப்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையான் உறைவீ ழிம்மிழலை
அடைவார் அடியா ரவர்தாமே. 6

செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவா ரவலம் அறியாரே. 7

உளையா வலியொல் கஅரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவார் அடியாரே. 8

மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 9

துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே. 10

நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. 11

திருச்சிற்றம்பலம்

01.034 அடலே றமருங் கொடியண்ணல்

தலம் : சீர்காழி – 10-காழி
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை


சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்;
அம்பாள் : திருநிலைநாயகி.

திருச்சிற்றம்பலம்

அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே. 1

திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே. 2

இடியார் குரல்ஏ றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே. 3

ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழல்மங் கையொடன்பாய்க்
களியார் பொழில்சூழ்1 தருகாழி
எளிதாம் அதுகண் டவரின்பே.

பாடம் : 1புனல்சூழ் 4

பனியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கிக்
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதாம் அதுகண் டவரீடே. 5

கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையால் தொழுவார் தலையாரே. 6

திருவார் சிலையால் எயிலெய்து
உருவார் உமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே. 7

அரக்கன் வலியொல் கஅடர்த்து
வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 8

இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே. 9

சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோ டுடன்அன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 10

நலமா கியஞான சம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே. 11

திருச்சிற்றம்பலம்

01.033 கணைநீடெரி மாலர

தலம் : அன்பிலாலந்துறை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரி வடகரை


சுவாமி : சத்தியவாகீஸ்வரர்;
அம்பாள் : சௌந்தரநாயகி.

திருச்சிற்றம்பலம்

கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமாமயி1 லுங்குயில் சேர்மட அன்னம்
அணையும்பொழில் அன்பிலா லந்துறை யாரே.

பாடம் : 1பிணையா மயிலுங் 1

சடையார்சது ரன்முதி ராமதி சூடி
விடையார் கொடியொன்றுடை யெந்தை விமலன்
கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
அடையார்பொழில் அன்பிலா லந்துறை யாரே. 2

ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்
பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
நீருண்கய லும்வயல் வாளை வராலோ
டாரும்புனல் அன்பிலா லந்துறை யாரே. 3

பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
றறையும்புனல் அன்பிலா லந்துறை யாரே. 4

நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்
கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
ஆடும்பதி அன்பிலா லந்துறை யாரே. 5

நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
ஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்
வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
ஆறார்வயல் அன்பிலா லந்துறை யாரே. 6

செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்
கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
அடியார்தொழும் அன்பிலா லந்துறை யாரே. 7

விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார
அடர்த்தாரருள் அன்பிலா லந்துறை யாரே. 8

வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்
அணங்குந்திக ழன்பிலா லந்துறை யாரே. 9

தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
வெறியார்மலர் கொண்டடி வீழும் அவரை
அறிவாரவர் அன்பிலா லந்துறை யாரே. 10

அரவார்புனல் அன்பிலா லந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. 11

திருச்சிற்றம்பலம்

01.032 ஓடேகலன் உண்பதும்

தலம் : இடைமருதூர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : தக்கராகம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை


சுவாமி : மகாலிங்கேசுவரர்;
அம்பாள் : பிருகச்சுந்தரகுஜாம்பிகை.

திருச்சிற்றம்பலம்

ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்து
ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ. 1

தடங்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ. 2

வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்
எங்கோனுறை கின்ற இடைமரு தீதோ. 3

அந்தம்மறி யாத அருங்கல முந்திக்
கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்
வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. 4

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்ப்
பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய
ஈசன்உறை கின்ற இடைமரு தீதோ. 5

வன்புற்றிள நாகம் அசைத்தழ காக
என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
அன்பிற்பிரி யாதவ ளோடும் உடனாய்
இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ. 6

தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்
போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்
ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ. 7

பூவார்குழ லார்அகில் கொண்டு புகைப்ப
ஓவாதடி யாரடியுள்1 குளிர்ந் தேத்த
ஆவா அரக் கன்றனை ஆற்ற லழித்த
ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.

பாடம் : 1யாரடிகள் 8

முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்
பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக
எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. 9

சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. 10

கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே. 11

திருச்சிற்றம்பலம்