திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி (விநாயகர்)

Thirupugal 2 Pakkaraivichithramani (Vinayakar)

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன – தனதான

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்ட நடை
பக்ஷிஎனும் உக்ரதுர – கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை – வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரக்ஷைதரு
சிற்றடியும் முற்றியப்ப – னிருதோளும்

செய்ப் பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை – மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடன் நெய்
எட்பொரி அ வற்றுவரை – இளநீர்வண்

டெச்சில் ‘பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ
ரிப்பழம் இ டிப்பல்வகை – தனிமூலம்

மிக்க அடி சிற்கடலை பக்ஷணம்எ னக்கொளொரு
விக்கிநச மர்த்தன் எனும் – அருளாழி!

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன – தனதான

பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துர – கமும் நீபப்

பக்குவ மலர்த் தொடையும் அக் குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை – வடி வேலும்

திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய – பன்னிரு தோளும்

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை – மறவேனே

இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை – இள நீர் வண்டு

எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு
வெளரிப்பழம் இடிப் பல்வகை – தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம எனக் கொள் ஒரு
விக்கிந சமர்த்தன் என்னும் – அருள் ஆழி

வெற்ப குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்
வித்தக மருப்பு உடைய – பெருமாளே.,

English

pakkaraivi chithramaNi poRkalaNai ittanadai
pakshiyenum ugrathura – gamuneeba

pakkuvama larththodaiyum akkuvadu pattozhiya
patturuva vittaruLkai – vadivElum

dhikkadhuma dhikkavaru kukkudamum rakshaitharu
chitradiyu mutRiyapan – niruthOlum

seyppadhiyum vaiththuyarthi ruppugazhvi ruppamodu
seppenae nakkaruLgai – maRavEnE

ikkavarai naRkanigaL sarkkaraipa ruppudaney
etporiya valthuvarai – iLaneervaN

dechchilpaya Rappavagai pachcharisi pittuveLa
rippazhami dippalvagai – thanimUlam

mikkaadi siRkadalai bhakshaName nakkoLoru
vikkinasa marththanenum – aruLAzhi

veRpakudi lachchadila viRparama rappararuL
viththagama ruppudaiya – perumALE.

English Easy Version

Pakkarai Vichithramani Porkalanai Ittanadai
Pakshiyenum Ugra Thuragamum – Neeba

Pakkuva malarththodaiyum Akkuvadu Pattozhiya
Patturuva Vittarulkai – Vadivelum

Dhikkadhu Madhikkavaru Kukkudamum Rakshaitharu
Chitradiyum Mutriya Panniru – Tholum

Seyppadhiyum Vaiththu Uyar Thiruppugazh Viruppamodu
Seppena Enakkarulgai Maravene

Ikkavarai Narkanigal Sarkkarai Paruppuda Ney
Etporiya Valthuvarai – Ilaneer

Vandechchil Payar Appavagai Pachcharisi Pittu
Velarippazham Idippalvagai – Thani Mulam

Mikka Adisir Kadalai Bhakshanam Enakkol Oru
Vikkinasa Marththanenum – Arulazhi

Verpa Kudilachchadila Virparamar Appar Arul
Viththaga Maruppudaiya – Perumale.

தமிழ் பாடல் வரிகளுடன்
English Lyrical
தமிழ் பாடல் வரிகளுடன்
English Lyrical