திருப்புகழ் 6 முத்தைத்தரு (திருவருணை)

Thirupugal 6 Muththaiththaru

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன – தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை! சத்திச் சரவண!
முத்திக்கொரு வித்துக் குருபா! – என ஓதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் – அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் – இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்!
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் – ஒருநாளே!

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு – கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக – என ஓதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென – முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல – பெருமாளே

பதம் பிரித்தது

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன – தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர – எனவோதும்

முக்கட்பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் – அடிபேண

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் – இரவாக

பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் – ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்க கழுகொடு – கழுதாட

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்கு த்ரிகடக – எனவோத

கொத்துப்பறை கொட்ட களமிசை
முதுகூகைகுக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென – முதுகூகை

கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல – பெருமாளே.

English

muththaiththaru paththith thirunakai
aththikkiRai saththis saravaNa
muththikkoru viththuk gurupara – enavOthum

mukkatpara maRkuc churuthiyin
muRpattathu kaRpith thiruvarum
muppaththumu varkkath thamararum – adipENap

paththuththalai thaththak kaNaithodu
otRaikkiri maththaip poruthoru
pattappakal vattath thikiriyil – iravAkap

paththaRkira thaththaik kadaviya
pachchaippuyal mechchath thakuporuL
patchaththodu ratchith tharuLvathum – orunALE

thiththiththeya oththap paripura
nirththappatham vaiththup payiravi
thikkotkana dikkak kazhukodu – kazhuthAdath

thikkuppari attap payiravar
thokkuththoku thokkuth thokuthoku
chithrappavu rikkuth thrikadaka – enavOthak

koththuppaRai kottak kaLamisai
kukkukkuku kukkuk kukukuku
kuththipputhai pukkup pidiyena – muthukUkai

kotputRezha natpatR RavuNarai
vettippali yittuk kulakiri
kuththuppada oththup poravala – perumALE.

English Easy Version

Muththaiththaru Paththith Thirunakai
Aththikkirai Saththis Saravana
Muththikkoru Viththuk Gurupara – Enavothum

Mukkatpara Marku Suruthiyin
Murpattathu Karpiththu Iruvarum
Muppaththumu Varkkath Thamararum – Adipenap

Paththuththalai Thaththak Kanaithodu
Otraikkiri Maththaip Poruthoru
Pattappakal Vattath Thikiriyil – Iravaka

Paththarkira Thaththaik Kadaviya
Pachchaippuyal Mechchath Thakuporul
Patchaththodu Ratchith Tharulvathum – Orunale

Thiththiththeya Oththu Ap Paripura
Nirththappatham Vaiththup Payiravi
Thikkotka Nadikka Kazhukodu – Kazhuthada

Thikkuppari Attap Payiravar
Thokkuththoku Thokkuth Thokuthoku
Chithrappavu Rikku Thrikadaka – Enavotha

Koththupparai Kotta Kalamisai
Kukkukkuku Kukkuk Kukukuku
Kuththipputhai Pukkup Pidiyena – Muthukukai

Kotputrezha Natpatr Ravunarai
Vettippali Yittu Kulakiri
Kuththuppada Oththup Poravala – Perumale

தமிழ் பாடல் வரிகளுடன்
English Lyrical
தமிழ் பாடல் வரிகளுடன்
English Lyrical