Thirupugal 7 Arukkumangkaiyar
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன …… தனதான
அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் …… இருதோளுற்
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென …… மிகவாய்விட்
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய …… முலைமேல்வீழ்ந்
துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது …… தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில்வேளென்
றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய …… குருநாதர்
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.
பதம் பிரித்தது
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன – தனதான
அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ
கருத்து அறிந்து பின் அரைதனில் உடை தனை
அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் – இரு தோள் உற்று
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ
உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட
அடிக் களம் தனில் மயில் குயில் புறவு என – மிக வாய் விட்டு
உருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம் உற
கையின் கனி நிகர் என இலகிய – முலை மேல் வீழ்ந்து
உருக் கலங்கி மெய் உருகிட அமுது உகு
பெருத்த உந்தியின் முழுகி மெய் உணர்வு அற
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது – தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற
உரைத்த சம்ப்ரம சரவணபவ குக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில – வேள் என்று
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக
விரிக்கும் அம் பல மதுரித கவி தனை
இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை – புனைவோனே
செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற
நடித்த சங்கரர் வழி வழ அடியவர்
திருக் குருந்தடி அருள் பெற அருளிய – குரு நாதர்
திருக் குழந்தையும் என அவர் வழி படு
குருக்களின் திறம் என வரு பெரியவ
திருப்பரங்கிரி தனில் உறை சரவண – பெருமாளே.
English
arukku mangaiyar malaradi varudiye
karuththa Rinthupin araithanil udaithanai
avizhththum anguLa arasilai thadaviyum – iruthOLut
RaNaiththum angaiyin adithoRum nakamezha
uthattai menRupal idukuRi kaLumida
adikka Lanthanil mayilkuyil puRavena – mikavAyvit
turukkum angiyin mezhukena urukiya
siraththai minjidum anupavam uRupalam
uRakkai yinkani nikarena ilakiya – mulaimElvIzhn
thurukka langimey urukida amuthuku
peruththa unthiyin muzhukime yuNarvaRa
uzhaiththi dungana kalaviyai makizhvathu – thavirvEnO
irukku manthiram ezhuvakai munipeRa
uraiththa samprama saravaNa bavaguka
ithaththa ingitham ilakiya aRumuka – ezhilvELen
Rilakka NangaLum iyalisai kaLumika
virikkum ampala mathuritha kavithanai
iyatRu senthamizh vithamodu puyamisai – punaivOnE
serukkum ampala misaithanil asaivuRa
nadiththa sankarar vazhivazhi adiyavar
thirukku runthadi aruLpeRa aruLiya – gurunAthar
thirukku zhanthaiyu menaavar vazhipadu
kurukka LinthiRa menavaru periyava
thiruppa rangiri thaniluRai saravaNa – perumALE.
English Easy Version
arukku mangaiyar malar adi varudiye
karuththu aRinthu pin araithanil udai thanai
Avizhththum angu uLa arasilai thadaviyum – iru thOL utRu
aNaiththum angaiyin adithoRum nakam ezha
uthattai menRu pal idu kuRikaLum ida
adik kaLam thanil mayil kuyil puRavu ena – mika vAy vittu
urukkum angiyin mezhuku ena urukiya
siraththai minjidum anupavam uRu palam
uRa kaiyin kani nikar ena ilakiya – mulai mEl vIzhnthu
uruk kalangi mey urukida amuthu uku
peruththa unthiyin muzhuki mey uNarvu aRa
uzhaiththidum kana kalaviyai makizhvathu – thavirvEnO
irukku manthiram ezhu vakai muni peRa
uraiththa samprama saravaNapava kuka
ithaththa ingitham ilakiya aRumuka – ezhil vEL
enRu ilakkaNangaLum iyal isaikaLum mika
virikkum am pala mathuritha kavi thanai
iyatRu senthamizh vithamodu puya misai – punaivOnE
serukkum ampala misai thanil asaivuRa
nadiththa sankarar vazhi vazhi adiyavar
thiruk kurunthadi aruL peRa aruLiya – guru nAthar
thiruk kuzhanthaiyum ena avar vazhi padu
kurukkaLin thiRam ena varu periyava
thirupparangiri thanil uRai saravaNa – perumALE.