திருப்புகழ் 11 கனகந்திரள்கின்ற (திருப்பரங்குன்றம்)

Thiruppugazh 11 Kanagandhiralgindra

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன – தனதான

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு – கதியோனே

கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு – முருகோனே

பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் – மருகோனே

பலதுன்பம்உழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள் – புரிவாயே

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் – புதல்வோனே

அடல்வந்துமு ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட – வருசூரர்

மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கன – பெரியோனே

மதியுங்கதி ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன – தனதான

கனகந்திரள்கின்ற பெருங்கிரி
தனில்வந்து தகன்தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு – கதியோனே

கடமிஞ்சி அநந்தவிதம் புணர்
கவளந்தனை உண்டு வளர்ந்திடு
கரியின்றுணை என்றுபிறந்திடு – முருகோனே

பனகந்துயில்கின்ற திறம்புனை
கடல்முன்பு கடைந்த பரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் – மருகோனே

பலதுன்பம் உழன்று கலங்கிய
சிறியன்புலையன் கொலையன் புரி
பவமின்று கழிந்திட வந்தருள் – புரிவாயே

அனகன்பெயர் நின்று உருளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்த நகுந்திறல் கொண்டவர் – புதல்வோனே

அடல்வந்து முழங்கியிடும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெரிந்திட – வருசூரர்

மனமும் தழல் சென்றிட அன்றவர்
உடலுங் குடலுங் கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தருளும் – கன பெரியோனே

மதியுங்கதிருந் தடவும்படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் – பெருமாளே.

English

kanakanthiraL kindRape rungiri
thanilvandhutha ganthagan endRidu
kadhirminjiya cheNdaie Rindhidu – gathiyOnE

kadaminjia nanthavi dhampuNar
kavaLanthanai unduva Larndhidu
kariyindRuNai endrupi Randhidu – murugOnE

panaganthuyil kindrathi Rampunai
kadalmunbuka daindhapa ramparar
padarumpuyal endravar anbukoL – marugOnE

palathunbamu zhandruka langiya
chiRiyanpulai yankolai yanpuri
bavamindruka zhindhida vandharuL – purivAyE

anaganpeyar nindRuru Lunthiri
puramunthiri vendRida inbudan
azhalunthana kunthiRal koNdavar – pudhalvOnE

adalvandhumu zhangiyi dumpaRai
dududuNdudu duNdudu duNdena
adhirgindRida aNdane rindhida – varusUrar

manamunthazhal chendRida andRavar
udalungkuda lungkizhi koNdida
mayilvendRanil vandharu Lungana – periyOnE

madhiyumkadhi rumthada vumpadi
uyargindRava nangaLpo rundhiya
vaLamondRupa rangiri vandharuL – perumALE.

English Easy Version

kanakan thiraLkindra perungiri
thanilvandhu thagan thagan endridu
kadhirminjiya cheNdai eRindhidu – gathiyOnE

kadaminji anantha vidham puNar
kavaLanthanai undu vaLarndhidu
kariyin thuNai endrupi Randhidu – murugOnE

panaganthuyil kindra thiRampunai
kadalmunbu kadaindha parampar
padarumpuyal endravar anbukoL – marugOnE

palathunbam uzhandru kalangiya
chiRiyan pulaiyan kolaiyan puri
bavamindru kazhindhida vandharuL – purivAyE

anagan peyar nindru uruLunthiri
puramunthiri vendrida inbudan
azhaluntha nakunthiRal koNdavar – pudhalvOnE

adalvandhu muzhangi idum paRai
dududuNdudu duNdudu duNdena
adhirgindrida aNda nerindhida – varusUrar

manamunthazhal chendRida andRavar
udalung kudalung kizhi koNdida
mayilvendRanil vandharu Lungana – periyOnE

madhiyum kadhirum thadavumpadi:
uyargindRa vanangaL porundhiya:
vaLamondRu parangiri vandharuL perumALE.