திருப்புகழ் 12 காதடருங்கயல் (திருப்பரங்குன்றம்)

Thiruppugazh 12 Kadhadarungkayal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன – தனதான

காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு – தொருகோடி

காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
யாழியு டன்கட கந்துலங் கும்படி
காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு – மயலாலே

வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
மாகந டந்தவர் பின்திரிந் துந்தன
மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம – துழலாதே

வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
வாழநி தம்புனை யும்பதந் தந்துன – தருள்தாராய்

போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட – மொழிவோனே

பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள்
பூவைக ருங்குற மின்கலந் தங்குப – னிருதோளா

தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு – திறலோனே

சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன – தனதான

காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி
வாளி மயங்க மனம் பயம் தந்து இருள்
கால் தர இந்து விசும்பு இலங்கும் பொழுது – ஒரு கோடி

காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும்
கணையாழியுடன் கடகம் துலங்கும்படி
காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு – மயலாலே

வாது புரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக
நடந்தவர் பின் திரிந்தும் தன
மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் – அது உழலாதே

வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி
மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு
வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது – அருள் தாராய்

போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம்
மீது தடிந்து விலங்கிடும் புங்கவ
போத வளம் சிவ சங்கரன் கொண்டிட – மொழிவோனே

பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட
கிரீவ மடந்தை புரந்தரன் தந்து அருள்
பூவை கரும் குற மின் கலம் தங்கு – ப(ன்)னிரு தோளா

தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர்
சங்கரர் தந்த தென்பும் பல
சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றடு – திறலோனே

சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில்
சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி
தேவர் பணிந்து எழு தென் பரங் குன்று உறை – பெருமாளே.

English

kAthada rungayal koNdisain thaimpoRi
vALima yangama nampayan thanthiruL
kAlthara vinthuvi sumpilang kumpozhu – thorukOdi

kAykathi renRoLir semchilam pungaNai
yAzhiyu dankada kanthulang kumpadi
kAmane dunjilai koNdadarn thumporu – mayalAlE

vAthupu rinthavar sengaithan thingitha
mAkana danthavar pinthirin thunthana
mArpila zhunthaa Nainthidun thunpama – thuzhalAthE

vAsami kunthaka dampamen kiNkiNi
mAlaika rangoLum anparvan thanpodu
vAzhani thampunai yumpathan thanthuna – tharuLthArAy

pOthilu RaintharuL kinRavan senjira
meethutha dinthuvi langidum pungava
pOthava Lamsiva sankaran koNdida – mozhivOnE

pUkamu danthikazh sanginang koNdaki
reevama danthaipu rantharan thantharuL
pUvaika rumkuRa minkalan thangupa – niruthOLA

theethaka monRinar vanjakan thunjiyi
dAthavar sankarar thanthathen pumpala
sErniru thankulam anjamun chenRadu – thiRalOnE

seethaLa munthuma Nanthayang kumpozhil
cUzhthara vinjaikaL vanthiRain jumpathi
thEvarpa Ninthezhu thenparang kunRuRai – perumALE.

English Easy Version

kAthu adarum kayal koNdu isainthu aimpoRi
vALi mayanga manam payam thanthu iruL
kAl thara inthu visumpu ilangum pozhuthu – oru kOdi

kAy kathir enRu oLir sem chilampum kaNai
yAzhiyudan kadakam thulangumpadi
kAman nedum silai koNdu adarnthum poru – mayalAlE

vAthu purinthu avar sem kai thanthu ingithamAka
nadanthavar pin thirinthum thana
mArpil azhuntha aNainthidum thunpam athu – uzhalAthE

vAsam mikuntha kadampam men kiNkiNi
mAlai karam koLum anpar vanthu anpodu
vAzha nitham punaiyum patham thanthu unathu – aruL thArAy

pOthil uRainthu aruLkinRavan sem siram
meethu thadinthu vilangidum pungava
pOtha vaLam siva sankaran koNdida – mozhivOnE

pUkam udan thikazh sangu inam koNda kireeva
madanthai purantharan thanthu aruL
pUvai karum kuRa min kalam thangu pa(n)niru – thOLA

theethu akam onRinar vanjakam thunji
yidAthavar sankarar thantha thenpum pala
sEr niruthan kulam anja mun chenRadu – thiRalOnE

seethaLam munthu maNam thayangum pozhil
cUzh thara vinjaikaL vanthu iRainjum pathi
thEvar paNinthu ezhu then parang kunRu uRai – perumALE.