Thiruppugazh 14 Saruvumbadi
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன – தனதான
சருவும்படி வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் – வசமாகிச்
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட – திறமாவே
இரவும்பகல் அந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் – அயர்வாகி
இவணெஞ்சுப தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் – அடைவேனோ
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் – பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் – மருகோனே
மருவுங்கடல் துந்திமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் – முருகோனே
மதியுங்கதி ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டம்இ லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன – தனதான
சருவும்படி வந்தனன் இங்கித
மதன் நின்றிட அம்புலியும் சுடு
தழல் கொண்டிட மங்கையர் கண்களின் – வசமாகி
சயிலம் கொளு மன்றல் பொருந்திய
பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய
தட அம் சுனை துன்றி எழுந்திட – திறமாவே
இரவும் பகல் அந்தியும் நின்றிடு
குயில் வந்து இசை தெந்தன என்றிட
இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் – அயர்வாகி
இவண் நெஞ்சு பதன் பதன் என்றிட
மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்
இனி உன் தன் மலர்ந்து இலகும் பதம் – அடைவேனோ
திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள்
மனையின் தயிர் உண்டவன் எண் திசை
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் – பயில்வோர்
பின் திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன்
மிஞ்சு திறம் கொள வென்று அடல்
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் – மருகோனே
மருவும் கடல் துந்துமியும் குட
முழவங்கள் குமின் குமின் என்றிட
வளம் ஒன்றிய செந்திலில் வந்து – அருள் முருகோனே
மதியும் கதிரும் புயலும் தினம்
மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் – பெருமாளே.
English
saruvumpadi vanthanan ingitha
mathaninRida ampuli yumsudu
thazhalkoNdida mangaiyar kaNkaLin – vasamAki
sayilangoLu manRalpo runthiya
pozhilinpayil thenRalum onRiya
thadavamsunai thunRiye zhunthida – thiRamAvE
iravumpakal anthiyu ninRidu
kuyilvanthisai thenthana enRida
irukaNkaLthu yinRida linRiyum – ayarvAki
ivaNenjupa thanpathan enRida
mayalkoNduva runthiya vanjakan
iniyunRanma larnthila kumpatham – adaivEnO
thiruvonRivi Langiya aNdarkaL
manaiyinthayir uNdavan eNdisai
thikazhumpukazh koNdavan vaNdamizh – payilvOrpin
thirikinRavan manjuni Rampunai
pavanminjuthi RangoLa venRadal
seyathungamu kunthanma kizhntharuL – marukOnE
maruvumkadal thunthimi yumkuda
muzhavangaLku minkumi nenRida
vaLamonRiya senthilil vantharuL – murukOnE
mathiyumkathi rumpuya lunthina
maRukumpadi aNdami langida
vaLarkinRapa rangiri vantharuL – perumALE.
English Easy Version
saruvumpadi vanthanan ingitha
mathan ninRida ampuliyum sudu
thazhal koNdida mangaiyar kaNkaLin – vasamAki
sayilam koLu manRal porunthiya
pozhilin payil thenRalum onRiya
thada am sunai thunRi ezhunthida – thiRamAvE
iravum pagal andhiyum ninRidu
kuyil vanthu isai thenthana enRida
iru kaNkaL thuyinRidal inRiyum – ayarvAki
ivaN nenju pathan pathan enRida
mayal koNdu varunthiya vanjakan
ini un than malarnthu ilakum patham – adaivEnO
thiru onRi viLangiya aNdarkaL
manaiyin thayir uNdavan eN thisai
thikazhum pukazh koNdavan vaN thamizh – payilvOr pin
thirikinRavan manju niRam punaipavan
minju thiRam koLa venRu adal
seya thunga mukunthan makizhnthu aruL – marukOnE
maruvum kadal thunthumiyum kuda
muzhavangaL kumin kumin enRida
vaLam onRiya senthilil vanthu aruL – murukOnE
mathiyum kathirum puyalum thinam
maRukumpadi aNdam ilangida
vaLarkinRa parangiri vanthu aruL – perumALE.